Headlines

அபிவிருத்திப் பாதையை நோக்கி தில்லையடி அல்ஜித்தா கிராமம்

-சுஐப் – இன்று அழகிய கிராமமாக காட்சி தரும் புத்தளம் தில்லையடி அல் ஜித்தா கிராமம் 1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் கைவிடப்பட்ட தென்னந்தோட்டமாக புல்லும் புதரும் நிறைந்து காணப்பட்டது. உட்செல்ல முடியாது ஆங்காங்கே முட்கள் நிறைந்த உடைமரங்கள் காணப்பட்டன. மழைக்கால நீர்தேங்கி ஆங்காங்கே சிறு நீர்நிலைகளும் காணப்பட்டன. வடபுலத்திலிருந்து இடம்பெயர்ந்த விடத்தல்தீவு, பெரியமடுவைச் சேர்ந்த ஒரு தொகுதியினர் இக்காணியை வாங்கித் திருத்தம் செய்தனர். தமக்கான வீடுகளை இக்காணியில் அமைத்தனர். “அல் ஜித்தா” எனக் கிராமத்துக்கு பெயரிட்டனர்….

Read More

காத்தான்குடி ஷுஹதாக்களின் சுவனவாழ்வுக்காக பிரார்த்திப்போம்

காத்தான்குடி பள்ளிவாசல்களில் மிலேச்சத்தனாமாக படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்களின் சுவனவாழ்வுக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரார்த்திப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 199௦ ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி, தமிழ் பேசும் மக்களின் வரலாற்றில் ஏற்பட்ட இந்தக்கறை அனைவரின் மனங்களிலும் நீங்காதுள்ளது. காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுசைனியா தைக்காவில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது புலிகள் மேற்கொண்ட இக்குரூரக் கொலைகளில் ஷஹீதாக்கப்பட்ட 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும்…

Read More

இரசாயனத் திரவப்பொருளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு

சூழல் மாசடைவதைக் குறைத்து, வாகனங்களின் எரிபொருள் பாவனையை சிக்கனப்படுத்தி, குளிர்ச்சியூட்டும் தன்மையை அதிகரிக்கும் பயோ கார் ‬ வீடா (Bio  Car- Vita) என்னும்‪‬  இரசாயனத் திரவப்பொருளை  அறிமுகப்படுத்தும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01/08/2016) இடம்பெற்றது. அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் அதிதிகளாக  அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில், கஹடகஹா கிரபைட் நிறுவனத்தின் தலைவர் மஜீத் உட்பட உயரதிகாரிகள்…

Read More

உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் பொறுப்புக்களை அமானிதமாகப் பயன்படுத்த வேண்டும்!

-சுஐப் எம்.காசிம் – உலமாக்கள் தமக்கு அமானிதமாகக் கிடைக்கும் பொறுப்புக்களையும், வளங்களையும் பொருத்தமான வகையில் நீதமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம், தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழாவில் பிரதமவிருந்தினராக அமைச்சர் றிசாத் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக அங்கு இடம்பெற்ற கண்காட்சியையும் அமைச்சர் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். கல்லூரியின் அதிபர் மௌலவி அஷ்ரப் முபாரக் அல் ரஷாதி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அதிதிகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான…

Read More

அமைச்சர் றிஷாத் ஊடாக விரைவில் தீர்வு!

-றிஸ்கான் முகம்மட் – கல்முனைகுடி கரைவலை மீனவர்களின் மிக நீண்ட கால பிரச்சினையாக உள்ள கடல் கழிவு அகற்றும் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நேற்று முன்தினம் (29) இரவு மட்டுப்படுத்தப்பட்ட கரைவலை மீனவர் கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் சங்க தலைவர் முகம்மட் சப்றாஸ் (நளிம்) தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவாகர செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான எ.ஆர்.எம்.ஜிப்ரியிடம் மீனவர்களின் மிக நீண்ட கால பிரச்சினையான கடல்…

Read More

அரசியல் இருப்புக்காகத் தமிழ் பேசும் சமூகங்களை மோதவிடுவதை அனுமதிக்க முடியாது!

– சுஐப் எம்.காசிம்  – அரசியல் இருப்பு, பிழைப்புகளுக்காகத் தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மினுவாங்கொடை, கல்லொலுவ வஸீலா சாஹிர் எழுதிய “ நிலவுக்குள் சில ரணங்கள் “ சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கொழும்பு, அல்/ஹிதாய மஹா வித்தியாலயத்தின், பஹார்தீன் மண்டபத்தில் இன்று காலை (30/07/2016) நடைபெற்றபோது அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம…

Read More

விதை நெல் உற்பத்தியாளர் சங்கம் அமைச்சர் றிஷாத்துடன் சந்திப்பு

சாய்ந்தமருது விதை நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் கொழும்பில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து அந்தப் பிரதேசத்தின் நெல் உற்பத்தி தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டிருந்தனர். தமது சங்கம் விதை நெல் உற்பத்தியாளர்களின் நன்மை கருதி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்த அவர்கள், தமக்கு நெல் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை பெற்றுத்தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பில் சங்கத்தின் தலைவர் யு. எல். ஏ. வஹாப், செயலாளர் எஸ்….

Read More

கரும்பு உற்பத்தியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

-சுஐப் எம் காசிம் அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக தமது தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீண்டும் இன்று நிதியமைச்சர் ரவி கருனாநாயக்கா தலைமையில் நிதியமைச்சுக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்ட போது, கரும்பு உற்பத்தியாளர்களின் நலன்களுக்குக் குந்தகமாக கல்லோயா பிளான்டேசன் கம்பனி செயற்படுவதற்கு தாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் மீண்டும் வலியுறுத்தி பேசினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தயாகமகேயும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தார்….

Read More

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை

– சுஐப் எம்.காசிம் – சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனின் தலைமையில் இன்று காலை (22/07/2016) மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருதுக் கிளை முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் உட்பட அக்கிராமத்தின் சமூகநல இயக்கங்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் விசேட அழைப்பை ஏற்று அங்கு பிரசன்னமாகிய அமைச்சர் பைசர் முஸ்தபா…

Read More

நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய நிதியமைச்சரினால் உயர்மட்டக் குழு நியமனம்

-சுஐப் எம்.காசிம் – அம்பாறை மாவட்ட நெசவுத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் உயர்மட்டக்குழு ஒன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று மாலை (21) நியமித்தார். அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் அமபாறை நெசவுத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து விளக்கியதன் பிரதிபலனாக நேற்று மாலை நிதியமைச்சர ரவி கருணாநாயக்க தனது அமைச்சுக் கட்டிடத்தொகுதியில் அமைச்சர்கள், அம்பாறை மாவட்ட…

Read More

அம்பாறை கரும்பு உற்பத்தியாளர்கள் பிரச்சினைகள் ஆராய்வு!

-சுஐப் எம் காசிம் – அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (28) நிதியமைச்சில் மீண்டும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவின் தலைமையில் இன்று (21) மாலை 9நிதியமைச்சுக்கட்டிடத் தொகுதியில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், தயாகமகே பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் கரும்பு உற்பத்தியாளர்கள் ஹிங்குரான சீனிக்கூட்டுத்தாபனத்தை நிர்வகிக்கும் கல்லோயா பெருந்தோட்டக் கம்பனியினர் தமக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகள் குறித்தும் கரும்புப்பயயிர்செய்கையில் தாங்கள்…

Read More

கொரிய நிறுவனத் தலைவர், அமைச்சர் றிஷாத் சந்திப்பு

கொரிய நாட்டின் ஹுயான் நிறுவனத்தின் தலைவர் பார்க் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடினார். கொரிய நிறுவனத்தின் முயற்சியில் நீர்கொழும்பு கொச்சிக்கடையில் இயங்கிவரும் சேதனப்பசளைகளை பொதி செய்யும் உறைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் தொடர்பிலேயே அமைச்சருடனான இந்த சந்திப்பு இடம்பெற்றது. தொழிற்சாலையின் செயற்பாடுகளை நன்கு விருத்தி செய்தால் பல இளைஞர்களுக்கு தொழில் வழங்க முடியுமென தெரிவித்த அவர் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் உதவிகளையும் தமது நிறுவனம் வேண்டி நிற்பதாக கூறினார். இந்தத் துறையில் ஈடுபாடு காட்டும் இலங்கை…

Read More