Headlines

மீற்றர் முறை அறிமுகம்

அடுத்த வருடத்தின் நடுப்பகுதி அளவில் இலங்கையின் சகல முச்சக்கர வண்டிகளையும் வாடகை வண்டிகளையும் உள்ளடக்கும் விதத்தில் மீற்றர் கட்டண அறவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ் தூரத்திற்கு அமைய திட்டவட்டமான கட்டணங்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்படுமென வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சின் பொறுப்பில் இயங்கும் நிறுத்தல், அளத்தல் தரச்சேவைகள் திணைக்களம் நிறைவேற்றவுள்ளது. வாடகை வாகன கட்டண அறிவீட்டு முறை தொடர்பான சர்வதேச நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Read More

பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத் சபாநாயகரிடம் கோரிக்கை

-சுஐப் எம்.காசிம்  – பாராளுமன்ற நிலையியற் கட்டளை சட்டத்தை மீறி தனது சிறப்புரிமையை கேள்விக்குட்படுத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று காலை (12/08/2016) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வருமாறு கௌரவ சபாநாயகர் அவர்களே: பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (11/08/2016) இடம்பெற்ற  கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடத்திலான கேள்வி நேரத்தின்போது, வன்னிமாவட்ட பாராளுமன்ற…

Read More

றிஷாத்தைப் பாராட்டினார் ஹக்கீம்

அம்பாறை மாவட்டக் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் காட்டும் அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் தான் நன்றி கோருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மாலை (10/08/2016) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் திருத்தச்சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்டக் கரும்புத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதற்கு கல்லோயா பிளான்டேஷன் கம்பனியினர் இடைஞ்சலாக இருப்பதாகத்…

Read More

பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழி காட்டலில் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கிய பல நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் நாம் வெற்றிகண்டு வருவதோடு,  நாட்டின் பல பகுதிகளில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றோம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (10/08/2016) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிப்புற்று இருந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி, சம்மாந்துறை, மஹாஓயா ஆகிய இடங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கும்,…

Read More

ஒலுவில் கடலரிப்புக்குத் தீர்வுபெற அர்ஜுன தலைமையில் அமைச்சரவை உபகுழு

ஒலுவில் கடலரிப்புக்கு அவசரமாக, தற்காலிகத்  தீர்வொன்றைக் காணும் வகையிலும், பின்னர் நிரந்தர நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலும் அமைச்சரவை உபகுழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். அமைச்சரவை கூட்டம் இன்று காலை (09/08/2016) இடம்பெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இந்தக் குழுவில், மீன்பிடித் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம்…

Read More

பாரிய பெருந்திட்டம் ஆரம்பம்!

இறப்பர் தொழில்துறையினை நவீன மயப்படுத்த நாம் கடினமான சிரமங்களை எதிர்கொள்கிறோம். உலகசந்தையின் நிலைமை, வழங்கல் துறையில் காணப்படுகின்ற தடைகள், தொழில்நுட்பக் குறைபாடுபோன்றவை எமக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. மேலும் இத்துறையின் வளர்ச்சிக்கு செயற்கைஇறப்பர் இறக்குமதி மீதான இடர்பாடுகளும் தீர்க்கப்பட வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். கடந்த வாரம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேசஇறப்பர் மற்றும் பிளாஸ்டிக் கண்காட்சியின் மூன்றாவது பதிப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்துக்கொணடு…

Read More

நெருப்புக்குள்ளே நின்று போராடும் சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்கின்றது

-சுஐப் எம்.காசிம் – பெரும்பான்மை இனவாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டுமென்ற நோக்கிலே கடந்த ஆட்சியில் ஒன்றுபட்ட தமிழர்களும், முஸ்லிம்களும் தற்போதைய நல்லாட்சியிலும் ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்த்து, தொடர்ந்தும் நல்லுறவு பேணவேண்டியது காலத்தின் தேவையாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத்  பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருது பன்னூலாசிரியர் எம்.எம்.எம்.நூருல் ஹக் எழுதிய “முஸ்லிம் அரசியலின் இயலாமை” என்ற நூல் வெளியீட்டு விழா, கொழும்பு வை.எம்.எம்.ஏ அரங்கில் நேற்று மாலை (07/08/2016) இடம்பெற்ற போது பிரதம…

Read More

றிஷாதின் சமூக உணர்வைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன் – பிரபா கணேசன்

-சுஐப் எம். காசிம் – அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு அட்டூழியங்கள் இடம் பெற்று சுமார் இரண்டு வாரங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரை அழைத்து கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நியாயம் கேட்டு கொதித்தெழுந்து நாட்டுத்தலைவரையே நிலை குலையச் செய்தவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனே என்று முன்னாள் அமைச்சர் பிரபா கணேசன் இன்று மாலை தெரிவித்தார். சாய்ந்தமருது பன்னூல் ஆசிரியர் எம்.எம்.எம். நூறுல் ஹக்…

Read More

முஸ்லிம் சமுகத்தின் மீது, வேண்டுமென்றே பழி சுமத்துகின்றனர் – றிஷாத்

-சுஐப் எம். காசிம்- பிற சமூகத்தவருடன் முஸ்லிம் சமூகம் இணைந்து வாழவும் பிணைந்து வாழவும் எப்போதும் முயற்சித்து வருகின்ற போதும் எம்மைத் தீண்டாதவர்களாகவும் வேண்டாதவர்களாகவும் வேற்றுக்கண்ணோடு பார்க்கும் நிலையே இன்னும் இருக்கின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கலாபூசணம் எம். இஸட் அஹ்மத்; முனவ்வர் எழுதிய இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நூல் வெளியீட்டு விழாவும் முஸ்லிம் சேவைக்குப் பணியாற்றிய உலமாக்கள் கௌரவிப்பு விழாவும் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்ற போது பிரதம…

Read More

ஒலுவில் அணைக்கட்டுக்கு துறைமுக அதிகார சபை ஒப்புதல்

-சுஐப் எம்.காசிம் – ஒலுவில் கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு ஏதுவாக, உடனடியாக அந்தக் கிராமத்தைப் பாதுகாக்கும் வகையில் மண் அணைக்கட்டு ஒன்றை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள, முன்கூட்டிய ஒப்புதலை ( Pending Approval) துறைமுக அதிகார பணிப்பாளர் சபை வழங்கியுள்ளதாக, அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு விஜயம் செய்யவுள்ள துறைமுக அதிகார சபையின் நிபுணர்களும், கரையோர முகாமைத்துவ திணைக்களத்தின் உயரதிகாரிகளும் அந்தப்…

Read More

அமைச்சர் றிஷாத் வேண்டுகோளை ஏற்று ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வைப் பெற்றுத்தர துறைமுக அதிகார சபை நடவடிக்கை

-சுஐப் எம் காசிம் – ஒலுவில் கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் பாரிய கடலரிப்பை தடுக்கும் வகையிலான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் கரையோரம் பேணல், கரையோர மூல வள முகாமைத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் பி கே பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரும் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், இலங்கை துறைமுக அதிகார…

Read More