Headlines

பாரிய மோசடிகள் குறித்த ஒன்பது விசாரணைகள் நிறைவு

பாரிய மோசடிகள் தொடர்பான ஒன்பது விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், இந்த விசாரணை அறிக்கை களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஒழுங்குப்படுத்தப்பட்ட 3 விசாரணை அறிக்கைகளானது ஜனாதி பதி மற்றும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்  ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. மேலும் பாரிய மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதி பதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இதுவரையில்…

Read More

குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வேண்டும்!

-லியோ நிரோஷ தர்ஷன் – புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டவர்களின் பொறுப்புகூறல் விடயம் தொடர்பில்  காணாமல் போனோர் குறித்த  ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள  பரிந்துரைகளை  சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு முரணான வகையில்  இந்த  பரிந்துரைகள்  அமைந்துள்ளதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

Read More

1595 முறைப்பாடுகளில் 237 விசாரணைகள் நிறைவு

பாரிய ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு 1595 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் 237 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் ஜனவரி மாதம் வரை அரச நிறுவனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக கிடைத்த முறைப்பாடுகளில் 1049 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அதில் 237 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 689 முறைப்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 43 முறைப்பாடுகள் வேறு நிறுவனங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

චන්න සහ නලින් අද ජනපති කොමිසම හමුවට

-නිලුපුලී – ජනප්‍රිය නර්තන හා ගායන ශිල්පීන් දේපලක් වන චන්න විජේවර්ධන සහ  නලීන් පෙරේරා මූල්‍ය අක්‍රමිකතාවයක් සම්බන්ධයෙන් අද දින (27) බරපතළ වංචා සෙවීමේ ජනාධිපති විමර්ශන කොමිසම හමුවට. විමර්ශනය සිදුකෙරෙනුයේ හම්බන්තොට වරායට ජලය පිරවීමේ උත්සවය සම්බන්ධයෙන් වන අතර  විමර්ශනයකට අදාළව ඔවුන්ගෙන් ප්‍රකාශ සටහන් කර ගනු ඇත .  

Read More

சன்ன மற்றும் நலீன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

இலங்கையின் பிரபல சிங்கள கலைஞர்களான சன்ன விஜேவர்தன மற்றும் நலீன் பெரேரா ஆகியோருக்கு பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளனர். ஹம்பாந்தோட்டை துறைமுக அங்குரார்ப்பண நிகழ்வில் 113 லட்ச ரூபா அரசாங்கப் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து விசாரணைக்கான வாக்குமூலம் அளிப்பதற்கே இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

Read More

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நிறைவு

காணாமற்போனோர் தொடர்பில் வட மாகாணத்தில் சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைத்து நாளை முதல் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டீ குணதாஸ தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மஹிந்த யாப்பா ஆஜர்

பாரிய இலஞ்ச ஊழல் மோசடி எதிர்ப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று ஆஜராகியுள்ளார். ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்சி நிறுவனத்தில்  இடம்பெற்றதாக கூறப்படுகின்ற அனுமதியின்றி வாகனங்களை பயன்படுத்தியமை மற்றும் மேலும் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக  இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாரிய மோசடிகள் குறித்த முறைப்பாடுகளை பெறும் நடவடிக்கை 24ம் திகதியுடன் நிறைவு

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்வரும் 24ம் திகதியுடன் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு முன்னர் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்ளுமாறு பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாச கேட்டுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம்…

Read More

கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிர மோசடி மற்றும் ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(11) காலை முன்னிலையானார். அது , ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். இன்று காலை 8.45 மணியளவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆணையத்திற்கு வந்ததாக அதன் பேச்சாளர் ஒருவர்   தெரிவித்திருந்தார்.

Read More

லெசில் டி சில்வா பதவியிலிருந்து நீக்கப்படவில்லை!– ஜனாதிபதி செயலாளர்

பாரிய நிதி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து லெசில் டி சில்வா நீக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அயகோன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்… ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றி வந்த லெசில் டி சில்வாவை பணி நீக்கவோ அல்லது விலக்கவோ இல்லை. இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் ஓராண்டாக காணப்பட்டது. ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளர் நியமனம்

பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டபிள்யு.குணதாசவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். சற்று முன்னர் (2) குணதாச தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் குணதாச கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலிக அடிப்படையில் பாரிய நிதி மோசடிகள் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக குணதாச நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி…

Read More

மஹிந்தவின் விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்பு!

சுயாதீன தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக எந்தவொரு அடிப்படையிலும் அரச தலைவர்களின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக கடமையாற்றிய…

Read More