Headlines

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் மஹிந்த ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்றும் (19) ஆஜராகவுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பல மில்லியன் ரூபாய்கள் நிலுவை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்படுகிறது. மஹிந்த ராஜபக்ச இந்த விசாரணைக்குழுவினால் நேற்றும் விசாரணை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மஹிந்த ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். ஐ.டி.என் தொலைக்காட்சியில் தேர்தல் காலத்தில் ஒலி,ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபாய் கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பில் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார். ஏற்கனவே, பல தடவைகள் மஹிந்த ராஜபக்ஸ, இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும், குறித்த கொடுப்பனவுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் அதனை தேர்தலின்போது பொறுப்பாக இருந்த பிரச்சாரக்குழுவே பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை…

Read More

மஹிந்த, ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோத்தா

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ  இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரக்னங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கோத்தபாயவிடம் மீண்டும் வாக்குமூலம்

ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இன்று முற்பகல் 9 மணியளவில்  ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, கோத்தபாய சென்றார் இதேவேளை நேற்றும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த கோத்தபாய, வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

கோத்தபாயவிடம் இன்று விசாரணை

அவன்ட் கார்ட் மற்றும் ரக்ன லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ இன்று (வியாழக்கிழமை) பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆயுத கொடுக்கல் வாங்கல் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கோத்தபாய உள்ளிட்ட ஐவரை குற்றவாளிகளாக நிரூபிக்க முடியுமென அண்மையில் பிரதி சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த மோசடிகள் தொடர்பில் பொதுமக்களிடமும் சாட்சியங்கள்…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த பிரசன்னம்

– அலுவலக செய்தியாளர் – பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணை பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சற்று முன்னர் பிரசன்னமாகியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார். சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியின் போது விளம்பரம் செய்தமைக்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய…

Read More

விசாரணையில் இன்று பங்கேற்க முடியாது! மஹிந்த

ஐடிஎன் பணநிலுவை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கண்டிக்கு வழிபடுகளுக்காக செல்லவேண்டியுள்ளமையால் இந்த விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று அவர் அறிவித்துள்ளார். தேர்தல் காலத்தின்போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபா நிலுவை செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் மஹிந்த கடந்த நான்கு தடவைகளாக பாரிய ஊழல் எதிர் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டார். எனினும் இன்று அவரின் சார்பில்…

Read More

தமயந்தி ஜயரத்னவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன இன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை எவன்கார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்று கொள்வதற்காகவே அழைப்பட்டுள்ளார்.இதற்கிடையில் எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாளைய தினம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக ஆணைக்குவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More

மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நாளைய தினம் (19) பாரிய ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரசன்னமாகுமாறு கோரப்பட்டுள்ளது. ஐ.டி.என் தொலைக்காட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் தொடர்பிலேயே அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே நான்கு தடவைகள் மஹிந்த, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னாள் பிரசன்னமானார். இதேவேளை ஐ.டி.என் தொலைக்காட்சியின் உள்ளக கணக்காய்வு தலைவர் மஞ்சுள அழகியவன்ன வழங்கிய முரண்பட்ட வாக்குமூலம் காரணமாக வாக்குமூலங்கள் ஒத்திவைக்கப்பட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறுகின்றன….

Read More