Headlines

பஸ் குடை சாய்ந்து விபத்து

மட்டக்களப்பு – பொலன்னறுவை கொழும்பு பிராதான வீதியின் வெலிகந்த பிரதேசத்திற்கு அருகாமையில் தனியார் பஸ் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி விபத்துக்குள்ளான பஸ் வண்டி கதுறுவெலையிலிருந்து மட்டக்களப்பு பக்கமாக கல்முனை நோக்கி பயணித்த வேளையிலே குடை சாய்ந்துள்ளது. இதனால் குறித்த பஸ் வண்டியில் பயணித்த சுமார் 40பேர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்துச் சம்பவம்…

Read More

தீய சக்திகளுக்கு ஒருபோதும் இடமளியோம் – அமைச்சர் றிஷாத்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான சமாதானத் சூழலில் மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என கைத்தொழில் வணிக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு – ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட புடைவை உற்பத்தி சம்பந்தமான பயிற்சியளித்தல் ,வடிவமைத்தல் மற்றும் சாயமிடல்; சேவைகள் நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து…

Read More

மட்டக்களப்பு வீரன் இலங்கை கிரிக்கட் அணிக்கு தெரிவு!

மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்  மலேசியாவில் இடம் பெற உள்ள மலேசிய அணியுடனான (Minor team- Sri Lanka tour of Malasia) போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சகலதுறை ஆட்டக்காரர் ஆன இவர் பல தடவை தனது திறமையை வெளிப்படுத்தி 2012ம் ஆண்டு சிங்கப்பூர் அணியுடனான ஒருமைப்பாடு போட்டியிலும் மற்றும் இலங்கை…

Read More

கஞ்சா விற்றுவந்த இளைஞன் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மீராகேணி கிராமத்தில் உள்ள வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில்,ஏறாவூர் மீராகேணியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது  செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து  4,080 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வாகன விபத்து : ஒருவர் பலி

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி கபுறடிச்சந்தியில் இன்று (26) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் முஸ்லிம் மதத்தலைவரான மௌலவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கல்முனை திசையை நோக்கி வேகமாக வந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கரவண்டியில் வந்த மௌவியை மோதியுள்ளது. படுகாயமடைந்த மௌலவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது!

– மட்டு.சோபா – ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் கொலை தொடர்பில் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ள தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்­சியின் தலை­வரும் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­ச­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் உட்­பட நான்கு  பேரின் விளக்­க­ம­றியல் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி எதிர்­வரும் மார்ச்  9 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­ மன்ற நீதி­பதி எம்.கணே­ச­ராசா உத்­த­ர­விட்­டுள்ளார். கிழக்கு மாகா­ணத்தின் முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்சித் தலை­வ­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன்,…

Read More

45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிவு

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் அறக்கொட்டித் தாக்கத்தால் 45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிந்து நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, கிரான், செங்கலடி உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெற்செய்கையே இவ்வாறு அழிவடைந்துள்ளன. இம்மாவட்டத்தில் இம்முறை ஒரு இலட்சத்து 60ஆயிரம் ஏக்கரில் பெரும்போகம் செய்கை பண்ணப்பட்டுள்ளது. மேலும், நல்லாட்சி அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள்…

Read More

மட்டக்களப்பில் 78 பேருக்கு டெங்கு

இந்த வரு­டத்தின் ஜன­வரி முதலாம் திகதி முதல் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 78 பேர் டெங்கு நோய்த் தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக மாவட்ட பிராந்­திய சுகா­தாரப் பணிப்­பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ரஹ்மான் தெரி­வித்தார். இதே­வேளை, இந்த வரு­டத்தில் நுளம்­புப்­பெ­ருக்­கத்­துக்கு ஏது­வாக சூழலை வைத்­தி­ருந்த 30 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது. இந்த மாவட்­டத்தில் டெங்கு நோய்த் தாக்­கத்தைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில், நாளொன்­றுக்கு 100 வீட்டு வளா­கங்­களில் சோதனை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. வீட்­டுப்­பீ­லிகள், கிண­றுகள் உள்­ளிட்­ட­வற்றில்…

Read More

மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மண் ஏற்றுவதற்கான அனுமதி பத்திரத்தை வழங்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அரசடியில் இப்போராட்டம் இடம்பெற்றது. மாவட்ட எம்.பீ.வியாழேந்திரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

– ஜவ்பர்கான் – கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவனேசத்துரை சந்திரகாந்தனை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் இந்த உத்தரவை பிறப்பித்தார். இன்று காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்ட பிள்ளையான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த…

Read More

ராவணா பலயவுக்கு ஆதரவளித்தால் நல்லாட்சி கவிழும்

மஹிந்த ராஜபக்ஷ அரசு பொதுபல சேனா என்ற பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொ டுத்து அரவணைத்தது. அதன் விளைவை இன்று ராஜபக்ஷ அனுபவிக்கின்றார். இன்று ராவண பலய என்ற பாம்பு படம் எடுத்து ஆட முற்படுகின்றது. இவ் நல் லாட்சியில் ராவண பலய எனும் பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொடுத்து அரவணைக்க முற்பட் டால் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் நிச்சயம் கவிழ்க்கப்படும்…

Read More

தொடரும் அடை மழையால் 18 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாட்டத்தில் தற்போது பெய்துவரும் தொடர் அடை மழை காரணமாக 18 ஆயிரம் ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக செய்கை சேதமடைந்துள்ளதாக மாவட்ட கமத்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். விவசாய வயல் நிலங்கள் மழை வெள்ளத்தின் உடைப்பெடுத்து அள்ளுண்டு போய்யுள்ளன. இந்நிலையில் விவசாயிகளில் சிலர், ஏற்கனவே நெல் விதைத்த வயலில் மீண்டும் நெல்விதைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றதையும் அதானிக்க முடிகின்றது. கிரான், வெல்லாவெளி, கொக்கடிச்சோலை…

Read More