Headlines

முறையான சுயதொழில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் றிஷாத்

கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், சுயதொழில் வாய்ப்புச் செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், தராபுரம் அல் – மினா மகா வித்தியாலயத்தில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் தலைவர்கள், உயரதிகாரிகள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் இந்தத் தகவலை…

Read More

ஆளுமையுள்ள அரசியல்வாதியாய் இருப்பதாலேயே றிஷாத் மீது கல்லெறிகின்றனர்

– சுஐப் எம் காசிம் – வட மாகாண அரசியல்வாதிகள் அத்தனை பேரிலும் ஆளுமையுள்ள அரசியல் தலைவராகவும் மக்களின் பிரச்சினைகளுக்காக துணிந்து குரல் கொடுப்பவராகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திகழ்வதாலேயே அவர் மீது சிலர் கல்லெறிகின்றார்கள் என்று அமைச்சரின் மாந்தை மேற்கு பிரதேச இணைப்பாளரும் சமூக சேவையாருமான செல்லத்தம்பு தெரிவித்தார். மன்னார் நகர மண்டபத்தில், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “கடந்த அரசில் தமது…

Read More

தமிழ்,முஸ்லிம் உறவை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்

-சுஐப் எம் காசிம்  வடக்கு முஸ்லிம்கள் கடந்த காலங்களில் தமக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறந்து தமது தாயகத்தில் மீளக்குடியேறி வாழத்தலைப்படும் போது இனவாத சிந்தனையுள்ள அரசியல்வாதிகள் அதனைக்குழப்பி மீண்டும் துளிர் விடுகின்ற தமிழ்,முஸ்லிம் உறவை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் இதன் மூலம் தங்களது அரசியல் இருப்பை தக்கவைப்பதே அவர்களின் உள்நோக்கமாகும் என்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறினார் மன்னார் உப்புக்குளத்தில் அல்பதாஹ் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹஜ் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்ற அமைச்சர் றிஸாட் …

Read More

அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா றிஷாத் பதியுதீனிடம் வங்காலை மக்கள் கோரிக்கை

-சுஐப் எம் காசிம் – வங்காலை கிராமத்துக்கு அணித்தான இரண்டு பிரதேசங்கள் பறவைகள் சரணாலயப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டமை அங்கு வாழும் மக்களுக்கு நிரந்தரமான பல்வேறு பாதிப்புக்களையும் நெறுக்கடிகளையும் ஏற்படுத்தி இருப்பதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோரிடம் வங்காலை கிராம மக்கள் எடுத்துரைத்தனர். அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னாருக்கு விஜயம் செய்த காமினி ஜயவிக்ரம பெரேரா மன்னார் கச்சேரியில் வனவளங்களைப் பாதுகாப்பது தொடர்பாக…

Read More

“வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும், மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை”

-ஊடகப் பிரிவு – வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளியிட்டு, நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் நேற்று (03/09/2016) மன்னாருக்கு விஜயம் செய்த, நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மன்னார் கச்சேரியில்…

Read More

மன்னாரில் நீர் விநியோகம் துண்டிப்பு

மன்னாரில் பிரதான நீர் விநியோக குழாய்களை புனரமைக்கப்படுவதால்இன்று நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபையினால்முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்குஅமைவாக மன்னார் பிரதேசத்தில் பிரதான விநியோக குழாய்களில்பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 05.00மணிவரை நீர் துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Read More

தலைமன்னார் கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.

Read More

மன்னார் மாவட்டத்தில் எட்டு மணித்தியாலம் நீர் விநியோகத் தடை!

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் (30) எட்டு மணித்தியால நீர் விநியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது. மன்னார் நீர் விநியோக வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மற்றும் முருங்கன் நீர் விநியோக மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இந்த தடை ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி மன்னார் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும், முருங்கன் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் காலை 8 மணி தொடக்கம் மாலை…

Read More

மன்னார் பெரியகடையில் அமைச்சர் றிஷாத்

யுத்தத்தினால் வீடுகளை இழந்து, இருப்பிடமின்றி வாழ்கின்ற அனைத்து  மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே  அரசாங்கத்தின் இலக்கு எனவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே அரசு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பெரியகடையில், மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும்  வைபவத்தில் இன்று (25/06/2016) பிரதம அதிதியாகப் பங்கேற்று அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்…

Read More

மன்னாரில் நீர்வெட்டு

மன்னார், முருங்கன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நாளை மு.ப. 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணி வரையான 8 மணி நேர நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மன்னார் நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன் நீர்த்தாங்கிகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படும் நீர் பாய்ச்சும் குழாயில் திருத்தப்பணிகளை முன்னிட்டு நீர்வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்கூட்டியே நீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தும்படி மக்களிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாத்

1990ம் ஆண்டு மன்னாரில் இருந்து, அகதிகளாக வெளியேறி, வெல்லம்பிட்டிய, புத்கமுவ பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள், மீண்டும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, கொழும்பின் பல இடங்களிலும் தஞ்சமடைந்து இருக்கின்றனர். இவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான  றிஷாத் பதியுதீன் நேற்று (26/05/2016) புத்கமுவ பிரதேச பள்ளிவாசலில் சந்தித்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

Read More

அழிந்துவரும் விடத்தல்தீவை மீளக்கட்டியெழுப்புவது சாத்தியமா?

– சுஐப் எம்.காசிம்  – மன்னாருக்கு மணி மகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல்தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல்வளமும், நிலவளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம். எமது முன்னோர்களும் நாமும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த பதி இது. மன்னார் நகரில் இருந்து வடதிசையில் செல்லும் பூநகரிப்பாதையில் 15ஆவது மைலில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. தேவையான அளவு வாழ்க்கை வளம் காணப்படுவதால் மக்கள் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். கிராமத்தின் மேற்கு எல்லையில் ஆழமற்றதும், மீன்…

Read More