Headlines

மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

அதிக மழை காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைக்கு இன்று (16) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வலயக் கல்விப் பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார். மன்னார் நகர் மற்றும் முசளி பகுதியில் வௌ்ளம் புகுந்துள்ள பாடசாலைகளுக்கே இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read More

மக்களுக்கு அவசர நிவாரணம்! றிஷாத்தின் கோரிக்கையை ஏற்று யாப்பா உடன் நடவடிக்கை

– சுஐப் எம்.காசிம் – வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாண மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமைச்சர் அனுரபிரியதர்ஸன யாப்பாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, குறிப்பிட்ட மாகாணங்களில் அமைந்துள்ள, அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா அவசர பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (16/05/2016) காலை அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பாவுடன் தொடர்புகொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன்,…

Read More

இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி என்னைப் பழிவாங்கும் நோக்குடையது –  றிப்கான் பதியுதீன்

தலைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார். தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த விடயம் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதாகவும், இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் கூறியதாவது, எவரோ ஒருவர் வேண்டுமென்று என்மீது கொடுத்த முறைப்பாட்டை ஆழ அகல விசாரிக்காமல், என்னைக் குற்றவாளியாக இனங்காட்ட சில பத்திரிகைகளும், இணையத்தளங்களும்…

Read More

றிஷாத்தைப்போன்று எவரும் பணியாற்றியதில்லை – சட்டத்தரணி மில்ஹான்

மன்னார் மாவட்டத்தின் அரசியல் வரலாற்றிலே அமைச்சர் றிசாத் பதியுதீனைப் போன்று, எந்த ஓர் அரசியல்வாதியும் பணியாற்றியது இல்லை என்று தேசிய வடிவமைப்பு நிறுவனத் தலைவர், சட்டத்தரணி மில்ஹான் தெரிவித்தார். மன்னார், அளக்கட்டு மாதிரிக் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே சட்டத்தரணி மில்ஹான் இவ்வாறு குறிப்பிட்டார். மன்னாரில் கடந்த காலங்களில் எத்தனையோ அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி இருக்கின்றனர். அவர்கள் மக்கள் பணியாற்றியுள்ள போதும், அமைச்சர் றிசாத் பதியுதீனைப் போன்று செயற்பட்டதில்லை. அமைச்சர் றிசாத் ஒரு சாணக்கியமிக்கத் தலைவர். மக்களோடு…

Read More

கொண்டச்சி கிராம மக்களுக்கு அமைச்சர் றிஷாதின் உதவியில் வீடுகள் நிர்மாணிப்பு

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் முழுமையாக பாரபட்சம் காட்டப்பட்ட கொண்டச்சி கிராம மக்களுக்கு, அமைச்சர் றிஷாத் தனது சொந்த முயற்சியில் 140 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். 1990ஆம் ஆண்டு மன்னார் கொண்டச்சியிலிருந்து வெளியேறி, புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த இந்த முஸ்லிம் மக்கள், சமாதானம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பினர். தாம் வாழ்ந்த பூர்வீக கிராமங்களில் வளர்ந்திருந்த காடுகளைத் துப்புரவாக்கி, மீண்டும் அந்த இடத்தில் கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வந்தனர். இந்த…

Read More

தமிழ் – சிங்கள கிராம மக்களுக்கும் வீட்டுத்திட்டம்: அமைச்சர் றிஷாத் ஏற்பாடு

– சுஐப் எம் காசிம் – மன்னார் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களக் கிராமங்களுக்கும் அமைச்சர் றிஷாத் வீடுகளைக் கட்டி வழங்கி வருகிறார். அமைச்சர் றிஷாட்டின் சொந்த முயற்சியினால் அரசினதோ, மீள்குடியேற்ற அமைச்சினதோ எந்த உதவியுமின்றி வெளிநாடு, உள்நாட்டு பரோபகாரிகளினதும் செல்வந்தர்களினதும் நிதியுதவியுடன் இந்த வீட்டுத் திட்டங்களை அமைத்து வருவதோடு நீர், மின்சாரம், பாதை உட்கட்டமைப்பு, பணிகளுக்கும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் போரின் உக்கிர விளைவினால்…

Read More

நாளை நீர் வெட்டு

மன்னார் மற்றும் முருங்கன் நகரங்களும் அவை அருகில் உள்ள பிரதேசங்களிலும் நாளை காலை 8.00 மணி முதல் 12 மணி நேரம் வரை நீர் விநியோகம் தடைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மன்னார் நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன், நீர் தாங்கிகளில் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதன் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மீள்குடியேற்றக் கிராமங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

– சுஐப் எம் காசிம் – சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் தென்னிலங்கையில் அகதி வாழ்வுக்கு முகம் கொடுத்து தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள அகதி முஸ்லிம் மக்களின் பூர்வீகக் கிராமங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (22) விஜயம் செய்தார். மன்னார் முசலி – சிலாவத்துறை பிரதேசங்களிலுள்ள அகத்திமுறிப்பு, அளக்கட்டு, பீ பீ பொற்கேணி, எஸ் பீ பொற்கேணி, வேப்பங்குளம், மறிச்சுக்கட்டி ஆகிய கிராமங்களுக்கும் சிங்கள மக்கள்…

Read More

எருக்கலம்பிட்டி: பழைய மாணவர்களின் ஒன்று கூடல்

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் நாங்கள் மீண்டும் எழுவோம் எனும் தொணிப் பொருளிலான ஒன்று கூடல் ஒன்றினை கல்லூரியின் அதிபர் மற்றும் பழையமாணவர்களின் சங்கமும் இணைந்து எதிர் வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள பி அறையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சர் பைசர் முஸ்தபாவும் கௌரவ அதிதியாக வடமாகாண சபை ஆளுநர்…

Read More

பரஸ்பரப் புரிந்துணர்விலேயே மீள்குடியேற்றத்தின் வெற்றி தங்கியுள்ளது

சகோதர இனங்களுடன் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் வாழ்வதன் மூலமே மீள்குடியேற்றத்தின் வெற்றி தங்கி உள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் மீள்குடியேறிய மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த பின்னர் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, 25 ஆண்டுகள் தென்னிலங்கை அகதி முகாம்களில் நாம் பட்ட கஷ்டங்கள் போதும். இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும். சிறுசிறு பிரச்சினைகளுக்காக நமக்குள் அடிபட்டுக்கொண்டிருக்க முடியாது. அதேபோன்று மாற்றுச் சமூகத்தைச்…

Read More

குளிர்பானத்துக்கு சேர்க்கப்படும் நிறம் சுகாதாரமற்றது என வழக்குத் தாக்கல்!

வியா­பார நோக்­குடன் பைக்கற்றில் அடைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­படும் குளிர் பானத்­துக்கு இடப்­படும் கலர் உணவு பண்­டத்­துக்கு உத­வாத நிறத்தூள் எனத் தெரிவித்து மன்னார் நீதி­மன்றில் பொதுச் சுகாதார அதி­கா­ரிகள் வழக்குத் தாக்கல் செய்­துள்­ளனர். மன்னார் மாவட்­டத்­தி­லுள்ள இலுப்­பைக்­க­டவை வெள்ளாங்­குளம் பகு­தி­யி­லுள்ள வர்த்­தக நிலை­யங்­களை திடீர்­ சோ­த­னை­யிட்ட மாந்தை மேற்கு பொதுச் சுகாதார அதி­கா­ரிகள் பக்கெற்றில் அடைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­படும் குளிர்­பா­னங்­க­ளுக்கு இடப்­படும் கல­ரா­னது உணவுப் பண்­டங்­க­ளுக்கு உத­வாத பொருள் என குற்றம்சாட்­டப்­பட்டு இதை உற்­பத்தி செய்யும் வர்த்­த­க­ருக்கு…

Read More

மன்னாரில் கண்டன பேரணி

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி இன்று காலை மன்னாரில் கண்டன பேரணி இடம் பெற்றுள்ளது. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி குருசாந்தன் மஹாலட்சுமி தலைமையில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து இன்று (29) காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது. பின்னர்…

Read More