Headlines

மன்னார் கடலில் கலவரம்

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகொன்றின் மீது, மற்றுமொரு படகில் வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதால், அப்படகில் இருந்த மூன்று மீனவர்களில் ஒருவர், கடலில் குதித்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நீந்தி கரை சேர்ந்துள்ளார். ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, மேற்படி மீனவர்கள் மூவர் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உயிர் தப்பிய மீனவர், பொலிஸாரிடம் சென்று அறிவித்துள்ளார். இந்நிலையில், மாயமாகியுள்ள மீனவர்கள் இருவரையும் தேடும்…

Read More

மன்னார் மாவட்டத்தில் நவீன முறையிலான கைத்தொழில் வலயம்

மன்னார் மாவட்டத்தில் கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்கவுள்ளோம். இது தொடர்பில் மன்னார் மாவட்ட கல்விமான்களை உள்ளடக்கிய ஆலோசனை சபை ஒன்றை அமைத்துத் திட்டங்களை தயாரித்து வருகின்றோம். இவ்வாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அடம்பன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விஞ்ஞான ஆய்வுகூடத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது யுத்தம் எமது மக்களின் வாழ்வை மிக மோசமாக சீரழித்திருக்கிறது. இதனால் நாம் வாழ்விடம் இழந்தோம். உடமைகளை இழந்தோம். தொழில்களை இழந்தோம். உறவுகளை இழந்தோம். யுத்தம் முடிவடைந்து…

Read More

இலங்கை தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் மன்னாரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பெண்கள் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்கென சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயல்படக் கூடிய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்த புதிய அரசியல்…

Read More

முஹம்மது நபி (ஸல்) குறித்து, எடுத்துக்கூறிய விக்னேஸ்ரன்

அவசர உலகத்தில் திடீர் பணக்காரர்களாக வருவதற்கே விரும்புகின்றார்கள் இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (09) மன்னாரில் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப கட்டிடங்களை திறந்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீரிய வாழ்க்கைமுறை, ஒழுக்கம், வர்த்தகத்தின் உண்மைத்தன்மை, மார்க்கத்தின் வழிமுறை அனைத்தையுந் தொலைத்து விட்டு என்ன இழிதொழில் செய்தாவது திடீர் பணக்காரர்களாக மாறிவிட வேண்டும் என்ற துடிப்பில் பலர் இருக்கின்றார்கள். தமது பிள்ளைகளையே இழந்துவிடக் கூடிய போதைப் பொருள் கடத்தல்,…

Read More

இஸ்லாத்தை அவமதிக்கும் செயற்பாடு: ஏ.எச் .எம். அஸ்வர் கடும் அதிருப்தி

நாட­ளா­விய ரீதியில் பாட­சா­லை­களில் மூன்றாம் தவணைப் பரீட்சை நடை­பெற்று வரும் நிலையில் மன்னார் கல்வி வல­யத்­தினால் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற தரம் 2 மற்றும் 3 க்கான இஸ்லாம் பாட பரீட்­சைக்­கு­ரிய வினாத்­தாள்­களில் பார­தூ­ர­மான எழுத்துப் பிழைகள் இடம்­பெற்­றி­ருந்த­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச் .எம். அஸ்வர் கடும் அதிருப்தி தெரி­வித்­துள்ளார். குறித்த வினாத்­தாளில் ‘நபி’க்கு ‘நரி’ என்றும் ‘தாய்’க்கு ‘நாய்’ என்றும் அச்சு பிழைகள் ஏற்­பட்­டிருந்­த­தா­கவும் இது இஸ்­லாத்தை அவ­ம­திக்கும் வகையில் அமைந்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ள…

Read More

அமைச்சர் றிஷாத்  – அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு கடிதம்

– முனவ்வர் காதர் – வடக்கில் மீள்குடியேறிவரும் மக்களை, யாணைகளின் அச்சத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் மின்சார வேலிகளை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு வனஜீவராசிகள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி பிரதேசங்களில் பல பகுதிகள் யாணைகளின் அச்சுறுத்தலுக்கு மக்கள் உள்ளாக வேண்டிய சூழல்…

Read More

சந்திரிக்காவுக்கு, அமைச்சர் றிஷாத் அனுப்பிய கடிதம்

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறையில் அமைந்துள்ள கடற்படைத்தளத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதன் மூலம், அப்பிரதேச மக்களும், வர்த்தகர்களும் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும், அதேவேளை இப்பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் வந்து குடியமர முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன், தேசிய ஐக்கியம், மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அமைப்பின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சர் றிஷாத்…

Read More

அமைச்சர் றிஷாத் அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசுக்கு தொடர்ந்தும் நான் அழுத்தங்களை கொடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று நானாட்டான் கலாச்சார மண்டபத்தில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை )  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான  றிஷாத்  பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.  இங்கு பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நானாட்டான் பிரதேச அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்…

Read More

இளைஞர் பாராளுமன்ற தேர்தல்

அண்மையில் இடம் பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில், அடம்பனைச் சேர்ந்த கே.ரஜீவனுக்கு நேற்று அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் வாழ்த்து தெரிவிப்பதையும்,அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனையும் படத்தில் காணலாம்.

Read More

மன்னாரில் வெள்ளம் : போக்குவரத்து பாதிப்பு

– வாஸ் கூஞ்ஞ – மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும்  மழை காரணமாகவும் வெளி மாவட்டங்களிலிருந்து உள்நோக்கி வரும் மழைநீர் காரணமாகவும் மன்னார் பகுதியில் பல வீதிகளிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக மன்னார் பகுதியில் தொடர்ச்சியாக  மழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாந்தை மேற்கு பகுதியிலுள்ள பாலியாறு பகுதியில் வீதிகளில் நீர் மட்டம் உயர்ந்து வீதிகளை மேவி பாய்வதால் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. அத்துடன் இப் பகுதியில் வெள்ளாங்குளம் பகுதியில்…

Read More