Headlines

தொடரும் அதிரடி கைது நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (27) திருக்கோவில் பகுதியில் வைத்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்  ராம் கைது  செய்யப்பட்டதை தொடர்ந்தே திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்து கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

மாலைதீவு பிரஜைகள் கைது!

ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு மாலைதீவு பிரஜைகள், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டியவில் உள்ள விடுதி ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read More

மானை வேட்டையாடிய நபர் கைது

– பேரின்பராஜா சபேஷ் – சட்ட விரோத துப்பாக்கியைப் பயன்படுத்தி மான் வேட்டையாடிய நபரொருவரை, மான் இறைச்சியுடன் இன்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மாவடிஓடைப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இவரை, ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகக் கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்ஆர்பீ சேனநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைவாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரத்னவின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More

புதையல் தோண்டிய ஒன்பது பேர் கைது

புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வண்ணாத்திவில்லு காட்டுப்புலியன்குளம் பிரதேசத்தில் டேற்கொண்ட சுற்றவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதோடு அங்கிருந்த மற்றொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

3 கிலோ கஞ்சா போதைப் பொருட்களுடன் இருவர் கைது

கஞ்சா போதைப் பொருட்களுடன் நேற்று இரவு கிளிநொச்சியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே குறித்த இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர். உருத்திரபுரம் எள்ளுக்காடு பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் அவர்கள் 3 கிலோ வரையிலான போதைப் பொருட்களை இரண்டு பொதிகளில் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். கைதானவர்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அதேநேரம் கிளிநொச்சி நேற்று…

Read More

இலங்கையில் 818 பேர் கைது

கடந்த 24 மணித்தியாளத்திற்குள் குடி போதையில் வாகனம் செலுத்திய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி தொடக்கம்  இன்றைய தினம் வரை குடி போதையில் வாகனம் செலுத்திய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமானவர்கள் என பொலிஸார் ஊடக பேச்சாளர் காரியாலயம் சுட்டிக்காட்டியது. குடி போதையில் வாகனம் செலுத்துவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கைகள் கடந்த 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

மான் இறைச்சி வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமாக மான் இறைச்சியை வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (11) அனுராதபுரம் பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம்-கம்பரிகஸ்வல பிரதேசத்தில் கஞ்சா செய்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்காகசென்ற பொலிஸாரே குறித்த நபரை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் மான் இறைச்சி வைத்திருந்த நபரை கைது செய்த பொலிஸார் இவரிடம் இருந்து 10 கிலோகிராம் மான் இறைச்சியையும் பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Read More

வெடிகுண்டுகளுடன் இருவர் கைது

தெமடகொடை – காலிபுல்லை தோட்டப்பகுதியில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள்  வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (10) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலே குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தெமடகொடை மற்றும் மாலிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 32 மற்றும் 21 வயதுடையவர்களாவர். சந்தேக நபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆசிரியை ஒருவரை தாக்கிய அதிபர் கைது

ஆசிரியை ஒருவரை தும்பு தடியினால் தாக்கிய அதிபரை பொலிஸார் நேற்று (4) கைது செய்துள்ளனர். விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்திற்கு சென்ற ஆசிரியையை அதிபர் தாக்கியுள்ளார். பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆசிரியையின் பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமக்கு விடுமுறை வழங்குமாறு அதிபரிடம் கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தும்பு தடியினால் அதிபர் தாக்கியதாக ஆசிரியை பொலிஸில் புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது

இலங்கையில் பதிவான மிகப் பெரிய இலஞ்ச தொகையாக கருதப்படும்  12.5 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற சுங்க அதிகாரிகள் விவகாரத்துடன் தொடர்புபட்ட மேலும் இரு சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழு இவர்களை இன்று (25) கைது செய்தது. சுங்க அத்தியட்சர்களான வசந்த விமலவீர மற்றும் உபாலி செனரத் விக்ரமசிங்க ஆகியோரே இவ்வாறு கைதுச் செய்யப்பட்டதக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்…

Read More

என்னையும் விரைவில் கைது செய்வார்கள்! ஹம்பாந்தோட்டையில் நாமல்

அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் என்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க தாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர என்ற இடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய நாமல், அரசாங்கத்தினால் பொதுமக்களை திருப்திப்படுத்த முடியாமல் போயுள்ளது. எனவே தான் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்துள்ளது என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார். பழிவாங்கல் நடவடிக்கையாகவே தமது சகோதரர் யோசித்தவும் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

யோசிதவிற்காக கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவி விலக முடியும்!- கிரியல்ல

யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமைக்காக கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் என அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சில் நேற்று (6) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முக்கிய பிரபு ஒருவரின் மகன் கைதானமையை தாங்கிக் கொள்ள முடியாத பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் எனவும் அதற்கு தடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்… பதவி விலகப்…

Read More