Headlines

பருத்தித்துறையில் 1000 கிலோ ஆனைத்திருக்கையை பிடித்த நீர்கொழும்பு மீனவர்கள்

முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பா. ரமேஷ் கண்ணா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வலை வீசிய போது, மிகவும் அரிதான வகையிலான ஆனைத்திருக்கை அகப்பட்டுள்ளது. மீனவர்கள் தமது படகை பருத்தித்துறை இறங்குதுறையில் நிறுத்தி ஆனைத்திருக்கையை துண்டுகளாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அரிதான வகை திருக்கை மீனான ஆனைத்…

Read More

எம்.எம்.ஜுணைட் நேர்மையான சிந்தனையுடையவர் – அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அனுதாபச் செய்தி

(அமைச்சரின் ஊடகப்பிரிவு) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  உதவிப்பணிப்பாளராக நீண்டகாலம் பணிபுரிந்த சகோதரர் எம்.எம்.ஜுணைட் நேர்மையான சிந்தனையுடையவர் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார். இன்று காலை இவரின் வபாத் செய்தியை நான் அறிந்து கொண்ட போது மிகவும் கவலையடைந்தேன். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரியாக கடமைபுரிந்ததுடன்  என்னுடன் நெருக்மானவராகவும் செயற்பட்டார். பல புதிய விடங்களைப் பற்றி சிந்திப்பவராகவும்  எச் சந்தர்ப்பத்திலும் நேர்மையை கடைப்பிடிப்பவராகவும் திகழ்ந்தார். வடகிழக்கில்…

Read More

பாகிஸ்தானிலிருந்து நேரடியாக தீர்வையற்ற முறையில் பாஸ்மதி அரிசி

–  ஊடகப்பிரிவு – பாகிஸ்தானிலிருந்து சுங்கத்தீர்வையற்ற முறையில் ஆறாயிரம் மெற்றிக் தொன் பாஸ்மதி அரிசியை கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு (சதொச) நேரடியாக வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் ஸர்பாஸ் அஹமட் கான் ஸிப்ரா இன்று தெரிவித்தார். அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தகவலை…

Read More

பதில் பிரதம நீதியரசராக சந்ரா ஏக்நாயக்க நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் சந்ரா ஏக்நாயக்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தற்போது வெளிநாடு சென்றுள்ளதை அடுத்தே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்று மாலை பதில் பிரதம நீதியரசாரக சந்ரா ஏக்நாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Read More

நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் தொடர்புகொள்ளலாம் : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

நேபா­ளத்தில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் அந்­நாட்டில் மக்கள் பாதிக்­கப்­பட்டு, வீடு­களை இழந்தும் உண்ண உண­வின்­றியும் துன்­பப்­ப­டு­கின்­றனர். இதன்­படி நேபாள அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான அத்­தி­யா­வ­சிய பொருட்கள் தொடர்­பி­லான பட்­டி­ய­லொன்றை இலங்கை அர­சாங்­கத்­திடம் வழங்­கி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை சிவில் அமைப்­பு­களோ அல்­லது தனி நபரோ வழங்க விரும்­பினால் மாவட்ட செய­லா­ள­ரிடம் ஒப்­ப­டைக்க முடியும். மேலும் இது தொடர்பில் மேல­திக தக­வல்­களை பெற­வேண்­டு­மாயின் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தை அணுகு­மாறு பிர­தமர் அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது. இதே­வேளை உலர்…

Read More

யோசிதவுக்கு பிணை!

கல்கிஸ்ஸை, மிஹிந்து மாவத்தையில் காணி ஒன்றின் உரிமை தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்க்ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தெஹிவளையில் கட்டப்பட்ட அதி சொகுசு மாளிகை குறித்த வழக்கு இன்று (16) கல்கிசை நீதவான் முன்னிலையில் எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தலா ஒரு மில்லியன் பெறுமதியான 3 சரீரப்பிணைகளில் விடுதலை செய்யுமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

மியன்மாரில் 50 வருடத்திற்கு பின்னர் முதலாவது ஜனாதிபதி நியமிக்கபட்டார்

மியன்மாரில் 50 வருடத்திற்கும் மேற்பட்ட இராணுவ ஆட்சியையடுத்து முதலாவது சிவிலியன் ஜனாதிபதியாக ஹதீன் கயாவ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவரான ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரான ஹதீன் கயாவ் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து உரையாற்றுகையில், இது ஆங் சான் சூகியின் வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். “இந்த வெற்றி எனது சகோதரி ஆங் சான் சூகியின் வெற்றியாகும். அவருக்கு…

Read More

பாடசாலை சமூகம் அரசியல் மற்றும் இன ரீதியில் பயணிக்குமானால் எதிர்கால சந்ததிகளின் கல்வி கேள்விக்குறியாகும் – றிப்கான் பதியுதீன்

மன்னார் மாவட்ட தேசிய பாடசாலைகளுக்கான 3 மாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா, ஆசிரியர் விடுதி திறப்பு விழா மற்றும் மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு என்பன நேற்று (06) இடம்பெற்றது கைத்தொழில் வர்த்தகம்,நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம்,கூட்டுறவு அபிவிருத்தி,தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கல்வி அமைச்சினால் மன்னார் மாவட்டத்தில் காணப்படும் 5 தேசிய பாடசாலைகளுக்குள் 3 பாடசாலைகளுக்கான புதிய மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும்…

Read More

பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் ஆளும் கட்சியாக நாம் மாறுவோம்-நிமல் சிறிபால டி சில்வா

தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் முடிவடைந்து பொதுத்தேர்தல் நடக்கும் வரையிலேயே நாம் அமைதியாக உள்ளோம். பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் ஆளும் கட்சியாக நாம் மாறுவோம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தேர்தல் முறைமையில் மாற்றம் அவசியமெனவும் வலியுறுத்தினார். தேசிய அரசாங்கம் அமையப் பெற்றதன் பின்னர் புதிய எதிர்க்கட்சி மெளனம் காப்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாம்…

Read More

‘மு.கா தலைமையை தட்டிக் கேட்டால் துரோகி என்று முத்திரைகுத்தி வெளியே தள்ளும் படலம் தொடர்கிறது’ அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- ஆயிரம் விளக்குகள் பாடலை வெறுமனே ஒலிக்கவிட்டுக் கொண்டு முழ சமூகத்தையும் இருட்டுக்குள் வைத்திருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றிவைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில், நற்பிட்டிமுனை, மருதமுனை பிரதேசங்களில் நேற்று (07) இடம்பெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக கூட்டங்களில் கலந்துகொண்டு…

Read More

எம்.பி பதவியையும் ராஜினாமா செய்தார் கேமரூன்

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். ஜூன் 23-ம் தேதி இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். அவரை தொடர்ந்து தெரசா மே இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போது,…

Read More

ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?

நகர்வுகள், திருப்பங்கள், திடீர் செய்திகள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கிடையே போரொன்று வெடித்திருப்பதையே நிரூபணம் செய்கின்றன. அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சி ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது அபேட்சகராக (வேட்பாளர்) வெளிப் பட்டிருப்பது மகிந்த ராஜபக்சவுக்கு பலத்த சவாலாகியுள்ளது. இதுவரை ராஜபக்ச அரசிலிருந்து அமைச்சர்கள் மூவர், பிரதியமைச்சர் ஒருவர், பாராளுமன்ற உறுப் பினர்கள் இருவர் பதவி விலகியுள்ளனர். இன்னும் 20 பேர் அளவில் விலகிச் செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கிடையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அபேட்சகர்கள்…

Read More