Headlines

ஷாகிர் நாயக்கிற்கு எதிராக குதித்துள்ள தஸ்லிமா நஸ்ரின்

வங்காளதேசம் ’பீஸ் டிவி’க்கு தடை விதித்து உள்ளநிலையில், அந்நாட்டில் அமைதி நிலவும் என்று பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறி உள்ளார். 22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டு கொண்டது. இந்தியா இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. வங்காளதேச உள்துறை அமைச்சகமும் இதுதொடர்பான ஆய்வை…

Read More

நல்லாட்சியிலும் விஷப் பற்களோடு திரியும் பொதுபலசேனா

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை மக்கள் தோற்கடித்தமைக்கு மிகப் பிரதான காரணம் பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத குழுக்ககள்தான் என்றால் அது மிகையாகாது. பொதுபலசேனா அமைப்பினர் மிக கூரிய விஷப் பற்களோடு அன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஆயிரம் அட்டுழியங்களை செய்தார்கள் ஹலால், ஹிஜாப் என்று தொடங்கி அவர்களது அட்டுழியங்களை கடைசியில் அளுத்கமையில் கொண்டு போய் முடித்தார்கள். அளுத்கமையில் முஸ்லிம்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சமல்ல இன்னும் பழைய நிலைக்கு…

Read More

முசலிப் மக்களை திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் முடக்கும் நல்லாட்சியின் புதிய வர்த்தமானி பிரகடனம்

சுஐப் எம் காசிம் சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் புத்தளம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து மீண்டும்    தமது பிரதேசத்தில் அமைதி ஏற்பட்டதனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வந்த முசலி மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் புதிய வர்த்தமானி பிரகடனம் அவர்களின் சுயாதீன நடவடிக்கைகளை முடக்கியுள்ளது. ‘வில்பத்தை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள்;, இயற்கை வளங்களை நாசமாக்குகின்றார்கள்’; என்ற இனவாதிகளினதும் இனவாதச் சூழலியலாளர்களினதும் இனவாத ஊடகங்களினதும் காட்டுக்கூச்சல்களையும் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் கருத்திற்கெடுத்த ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

அரசியல் கைதிகளை விடுவிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை : பொன்சேகா

– எஸ்.ரவிசான் – விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமாயின் அதில் எவ்வித  சிக்கல்களும் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கடந்தக் காலங்களில் எமது நாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்று முழுவதுமாக ஒத்துழைப்பு தந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இன்று சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது வெறுமனே இவர்களை மட்டும் அரசியல் கைதிகளாக எந்த ஒரு விசாரணைகளும்…

Read More

பாராளுமன்ற பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு தடை

பாராளுமன்றம் அமைந்துள்ள பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு கடுவெல மஜிஸ்திரேட் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலையில்லா பட்டதாரிகள் இன்று பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

போராட்டம் கைவிடப்படாது – ஞானசார தேரர்

வழக்குத் தொடர்ந்தாலும் பௌத்த மதத்தை பாதுகாக்கும் போராட்டம் கைவிடப்படாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தற்போது தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ள ஞானசார தேரர் கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தொலைபேசி மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… வழக்கு மேல் வழக்கு தொடர்ந்தாலும் பௌத்த மதத்தையும் நாட்டையும் இனத்தையும் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து ஒரு நொடியும் விலகிக்கொள்ளப் போவதில்லை.எமக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படுகின்றது. எனினும் பௌத்த மதத்திற்கு எதிராக…

Read More

சரத் பொன்சேகா சத்தியப்பிரமாணம்

தேசிய ஜன­நா­யக கட்­சியின் தலை­வ­ரான பீல்ட் ­மார்ஷல் சரத் பொன்­சேகா நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொண்டார் நேற்று (10) நாடா­ளு­மன்ற அமர்­வுகள் ஆரம்­ப­மான போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய முன்­னி­லையில் சத்­தி­யப்­பி­ர­மாணஞ் செய்து கொண்டார். மறைந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசியப் பட்­டியல் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.கே.ஏ.டீ.எஸ்.குண­வர்­த­ன வின் மறை­வை­ய­டுத்து ஏற்­பட்ட வெற்­றி­டத்­துக்கே சரத்  பொன்சேகா  நியமிக்கப்பட்டார்.

Read More

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2 எண்ணெய் கிணறுகள் – விலைமனு கோர திட்டம்

நாட்டில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் படலத்தை பெற்றுக்கொள்வதற்கு விலைமனு கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 மாதங்களுக்குள் விலைமனு கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ் படகொட தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விலைமனு கோரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகளில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பீ.எம்.எஸ் படகொட மேலும் கூறினார்.

Read More

கொழும்பில் பொதுபல சேனா மாநாடு – வன்செயலினை ஆரம்பிப்பதற்கான முறை

இன்று பௌத்த பிக்குகள் நான்காயிரம் பேர் ஒன்றிணைந்து, இலங்கையை பௌத்த நாடு என நிரூபிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் ஐனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர்கள் இல்லாத நிலையில் இதனை மேற்கொள்வுள்மையை தற்செயலாக நடக்கின்ற விடயமாக கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 27-09-2014  மட்டக்களப்பில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேரத்தினை சரியாக தெர்ந்தெடுத்து வன்செயலினை ஆரம்பிப்பதற்கான முறையாக நாங்கள்…

Read More

புத்தளம் அறுவைக்காடு குப்பை திட்டடத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!!!

புத்தளம் அறுவைக்காடு குப்பை திட்டத்துக்கு எதிராக இன்று (15) புத்தளம் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.இந்த போராட்ட களத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டார் கிளீன் புத்தளம் எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட இக் கவனயீர்ப்பில் பல நூற்றுக்கணக்கான மக்கள் உட்பட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றதூடன் கோசங்களை எழுப்பினர். புத்தளம் குப்பையல்ல உள்ளிட்ட இதனால் ஏற்படும் பாதகமான தாக்கங்கள் பற்றியும் கோசங்களை எழுப்பினர். கொழும்பு நகரில்…

Read More

மு.கா.வின் மூத்தபோராளிகள் பலர் அ.இ.ம.கா.வில் இணைவு

கல்முனை 03 பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்தபோராளிகள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள் எதிர் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக அமைச்சர் றிஷாத்அவர்களுடன் தாம் இணைந்து செயற்படபோவதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி யும் கலந்து கொண்டார். கல்முனை 3 ல் அமைச்சரின் தனிப்பட்ட நிதியின் ஊடாக தையல் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைத்த வைபவத்தின்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற…

Read More

பாடகர் எம்.ஜீ.தனுஷ்கவுக்கு பிடியாணை

பாடகர் எம்.ஜீ.தனுஷ்கவை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று புதன்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் அவரை கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More