Headlines

துமிந்தவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அவரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அஜித் ரோஹன கூறியுள்ளார். போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வேலேசுதா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், துமிந்த சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். கடந்த 3 நாட்கள் சுமார் 20 மணித்தியாலங்கள் இவ் விசாரணைகள் இடம்பெற்றன….

Read More

பதுளை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு; இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

பதுளையில் மீண்டும்  பனிமூட்டம் அதிகரித்துள்ளதால் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது  காலநிலையில் ஏற்பட்ட இம் மாற்றத்தில் மலையகப் பகுதிகளில் இரவு  நேரங்களில் கடும் குளிராகவும் காலை 89 மணி வரை பனி மூட்டமும் நிலவுகிறது. குறிப்பாக பதுளை மாவட்டத்தில் பதுளை, மஹியங்கனை,  பண்டாரவளை, அப்புத்தளை, பெறகலை, ஹல்தும்முல்லை, வெலிமடை, பொறகஸ், ஹக்கலை, தியத்தலாவை, குருத்தலாவை, பூனாகலை , கொஸ்லந்தை , எல்ல, ரத்தம்ப போன்ற பிரதேசங்களில் கடும் பனிப் பொழிவு நிலவுகின்றது. இப்பகுதியில்  தேயிலை மலைகளில் வேலை…

Read More

கடந்த 10ஆண்டுகளில் பிரிட்டனில் இஸ்லாமிய குழைந்தைகளின் எண்ணிக்கை இருமடங்கானது பிரிட்டன் பத்திரிகை DAILY MAIL!

கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமிய குழந்தைகளின் எண்ணிக்கை பிரிட்டனில் இரட்டிப்பாகி இருப்பதாக பிரிட்டனின் டெயிலி மெயில் என்ற பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது மொத்தத்தில் பிரிட்டனில் கடந்த பத்து ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 75% உயர்ந்திருப்பதாகவும் அந்த இதழ் தெரிவித்துள்ளது 2001 ஆண்டில் வெறும் 15 இலட்சமாக (1500000) இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை தர்போது 27 இலட்சமாக (2700000) உயர்ந்துள்ளது இது 75% சதவீத வளர்ச்சியாகும் பத்து ஆண்டுகளில் மட்டும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12 இலட்சம்…

Read More

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய இருவரிடமும் விசாரணை செய்ய காத்திருக்கும் பொலிஸ் திணைக்களம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரிடமும் கேள்விகளை கேட்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஒரு சதி முயற்சியை மேற்கொண்டனர் என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கான ஆலோசனையே பெற்றுக்கொள்ளப்படவிருக்கின்றன. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளதாவது, இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணை கோப்புகள் நிறைவுக்கு…

Read More

ISIS இற்கு எதிரான யுத்தத்தில் இராணுவத்தைப் பயன்படுத்த நாடாளுமன்றத்தில் அனுமதி கோரினார் ஒபாமா!

நேற்று புதன்கிழமை ISIS இற்கு எதிரான யுத்தத்தில் இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நாடாளுமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். இதன்போது சிரியாவிலும் ஈராக்கிலும் ISIS இற்கு எதிரான வான் தாக்குதல் அடிப்படையிலான யுத்தத்தில் அமெரிக்க மிக வலிமையாக இருப்பதாகவும் ISIS இயக்கம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது எனவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளதுடன் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தேச கூட்டுத் தீர்மான வரைவு ஒன்றையும் தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் ஒபாமா அனுப்பியுள்ளார். நேற்று மதியம் ஒரு பத்திரிகையாளர்…

Read More

தேசிய அரசாங்கத்தில் சிறந்த நாட்டை உருவாக்குவோம்: ரணில்

பாரா­ளு­மன்ற தேர்­தலின் பிற்­பாடு ஐந்து வரு­டங்கள் அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்போம். அத­னூ­டாக எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு சிறந்த நாட்டை பெற்­றுக்­கொ­டுப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். எமது அரசின் நூறுநாள் வேலைத்­திட்டம் பாரிய சவால்­மிக்­கது. அதனை நிறை­வேற்­று­வதே எமது இலக்­காகும். பொது இலக்­கு­களை நிறை­வு­கண்டு நூறு நாட்­களின் பிற்­பாடு பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு செல்வோம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். கொழும்பு றோயல் கல்­லூ­ரியின் பழைய மாண­வர்­க­ளான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட புதிய அரசின்…

Read More

2000க்கும் மேற்பட்ட பைல்கள் காணாமல் போயுள்ளன; ரவி

நிதியமைச்சிலிருந்து 2000க்கும் மேற்பட்ட ஆவணக் கோவைகள் (பைல்கள் ) காணாமல் போயுள்ளதாக   நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.  நிதியமைச்சிலிருந்து 2000க்கும்  மேற்பட்ட முக்கிய ஆவணக் கோவைகள் (பைல்கள்) காணாமல் போயுள்ளன. அண்மையிலும் சில பைல்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி ஆவணக் கோவைகளை  கண்டுபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். திருடர்கள் பிடிபட்டால் கடுமையான தண்டனை…

Read More

நீர்த்தேக்கத்தில் குதித்த மாணவனும் மாணவியும் மாயம்

நீர்த்தேக்கத்தில் குதித்த மாணவனும் மாணவியும் மாயம் பாடப் புத்தகங்கள், சீருடைகளை வைத்துவிட்டு பாய்ந்ததாக தகவல் கே. அசோக்குமார் தெதுரு ஓயா நீர்த் தேக்கம் அருகே பாட புத்தகங்கள். பாடசாலை சீருடை என்ப வற்றை வைத்துவிட்டு ஒரு மாணவனும், மாணவியும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் இருவரும் நீர்த் தேக்கத்தினுள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.குருணாகல் காமினி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 11 ஆம் ஆண்டு மாணவியும் குளியாப்பிட்டி கும்புக்கெட்டே மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும்…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் புரவலர் ஹாசிம் உமர் குழுவினர் சந்திப்பு

ஊடகப் பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமானறிஷாத் பதியுதீன் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளை பாராட்டும் வகையில் அவரை அமைச்சில் சந்தித்த கலைஞர் கலைச்செல்வன்,புரவலர் ஹாசிம் உமர் ,பைரூஸ் சம்சுதீன்,வவுனியா சாஹிப் மொஹிதீன் ஆகியோர் அமைச்சருடன் புகைப்படமொன்றினை எடுத்துக் கொண்டதை இங்கு காணலாம்.

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் புரவலர் ஹாசிம் உமர் குழுவினர் சந்திப்பு

ஊடகப் பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமானறிஷாத் பதியுதீன் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளை பாராட்டும் வகையில் அவரை அமைச்சில் சந்தித்த கலைஞர் கலைச்செல்வன்,புரவலர் ஹாசிம் உமர் ,பைரூஸ் சம்சுதீன்,வவுனியா சாஹிப் மொஹிதீன் ஆகியோர் அமைச்சருடன் புகைப்படமொன்றினை எடுத்துக் கொண்டதை இங்கு காணலாம்.

Read More

தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்துமாறு கூறுவதற்கு யாராவது எனது அறைக்கு வந்திருந்தால் திரும்பிப் போயிருக்கமாட்டார்கள் : மஹிந்த

கடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை வெளியிடும்போது முடிவுகளை தாமததப்படுத்துமாறு யாரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. அவ்வாறு அழுத்தம் பிரயோகிக்க எனது அறைக்கு யாராவது வந்திருந்ததால் அவர்கள் திரும்பிப் போயிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு நாங்கள் தைரியத்துடன் இருந்தோம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கடந்த தேர்தலின்போது எனது மனச்சாட்சிக்கு அமைய மக்களின் இறைமைய பாதுகாப்பதற்காக செயற்பட்டேன். அதாவது தங்கள் வாக்குகளை பிரயோகிப்பதன் மூலம் நாட்டின் ஆட்சியில் தாக்கம் செலுத்த முடியும் என்பதனை மக்களுக்கு எடுத்துரைத்தோம். அதில் வெற்றியும்…

Read More

மஹிந்த வேண்டாம்: பிரசன்ன ரணதுங்க

கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பிரதம வேட்பாளராக புதிய தலைவரை நியமிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அதற்காக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மகிந்தவின் ஆதரவுகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்யின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரண்டாவது தொடர் குறைபாடுகள் இம்முறை தேர்தலில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் மேலும் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அரசாங்கத்தை பராமரிக்க…

Read More