Headlines

கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம் (படங்கள் இணைப்பு)

(மூஸா உமர்)  கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று (03) மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இன்று (03) காலை 11 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்றின் பெர்ணாண்டோவின் காரியாலயத்தில் இடம்பெற்ற அமைச்சுக்கள் பொறுப்பேற்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் த.வி.கூ , ஸ்ரீ.மு.கா, ஐ.தே.க, ஐ.ம.சு.கூ. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர்களாக: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.ஐ.எம்.மன்சூர் மீண்டும் சுகாதார அமைச்சராகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு…

Read More

உதிரிகளால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு!

அஷ்ரப் எ சமத்  தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அதிவேகமான வளர்ச்சியும் அதன் எழுச்சியும் இந்த நாட்டின் கல்வியலாளர்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரைக்கும் இன்று பேசப்படுகின்ற ஒன்றாகும். கடந்த காலத்தில் அது தன்னுடைய இலட்சியப்பயனத்தில் பல்வேறு தடங்களை தேசிய ரீதியாக பதித்துவருவது சமூகத்தின் பல மட்டத்தினராலும் இன்று பேசுபொருளாக மாறி இருக்கிறது. இது ஒரு அபரிமிதமான குறிப்படத்தக்க வளர்ச்சி என்றே சொல்லலாம். குறிப்பாக கடந்த சில வருட காலப்பகுதிக்குள் பல்வேறு அடைவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த வகையில்…

Read More

அமைச்சர் றிஷாத் – இலங்கைக்கான ஜேர்மன் நாட்டுத் தூதுவருக்கிடையிலான சந்திப்பு

கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கும், இலங்கைக்கான ஜேர்மன் நாட்டுத் தூதுவருக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று 02/03/2015 ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை அமைச்சர் தூதுவருக்கு விளக்கினார், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக துறையை எவ்வாறு அதிகரிப்பது என்பதுடன், இரு நாடுகளுக்கிடையிளான சந்தை வாய்ப்பை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் தூதுவர் உறுதியளித்தார். அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான திறமையான தொழிலாலர்களை (Skill labour)பரிமாறிக்கொள்வது போன்றவை கலந்துரையாடப்பட்டது. அமைச்சர் கருத்துத்தெரிவிக்கையில்…

Read More

சீகிரியா சுவரில் காதலனின் பெயரை கிறுக்கிய பெண்ணுக்கு 2 வருட சிறை

சீகிரியாவின் கண்ணாடி சுவரில் தனது காதலனின் பெயரை எழுதிய யுவதிக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த உதேனி என்ற யுவதிக்கே இவ்வாறு 2 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தனியார் கைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது தனது காதலனின் பெயரை கண்ணாடி சுவரில் எழுதி சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு தம்புள்ளை நீதிமன்றம் 2 வருட சிறைத்…

Read More

கட்டாரில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை சேர்ந்த இருவர் மரணம்!

file image கட்டாரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன், பெரியநீலாவணையை சேர்ந்த ச.சுகந்தன் ஆகியோரே மரணமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த காரும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என நம்பத்தகுந்த வாடாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. அத்துடன் இத்தீர்மானத்திற்கமைய மாகாணத்தில் மீதமாகவுள்ள இரண்டு அமைச்சர் பதவிகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று  பொறுப்பேற்கவுள்ளதாவும் மேலும் தெரிய வருகிறது. நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சரான ஹாபீஸ் நசீர் அஹமதிற்கு வழங்கிய ஆதரவினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் வாபஸ் பெற்றனர். அதேவேளை…

Read More

தேசிய நிறைவேற்றுக்குழுவில் நான் அங்கத்துவம் வகிக்கவில்லை : சோபித்த தேரர்

அரசாங்கத்தின் உயர் அமைப்பான தேசிய நிறைவேற்றுக்குழுவில் நான் இடம்பெறவில்லை. எனக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவுமில்லை. நான் இதுவரை அந்த குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் இல்லை என்று என்று சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்தார். கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற சமூக நீதிக்கான அமைப்பான நிபுணத்துவ கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாறறிய சோபித்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேரர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் நான் அரசாங்கத்தின் உயர் அமைப்பான தேசிய நிறைவேற்றுக்குழுவில் அங்கத்துவம்…

Read More

ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளிவாசல்

ஆப்பிரிக்காவில் ஒரு ஏழை கிராமத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்காக கட்டப்பட்ட இறையில்லம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அன்றைய மதினா மஸ்ஜிதுன் நபவியும் இவ்வாறு ஓலை குடிசையிலே கட்டப்பட்டது. அல்லாஹ் இந்த கிராம மக்கள் மீது நிறைந்து அருள் புரிவானாக….!!

Read More

மக்களின் பாதுகாப்புக்காக பட்ஜெட்டை உயர்த்தும் ஜேர்மன்

சர்வதேச அளவில் நிலவி வரும் அசாதரண சூழ்நிலைகளின் காரணமாக நாட்டு மக்கள் பாதுகாப்பிற்காக செலவிடப்படும் பட்ஜெட்டை உயர்த்த உள்ளதாக ஜேர்மனி அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நிதி அமைச்சர் Wolfgang Schaeuble, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அளவில் உறுதியற்ற நிலை நிலவி வருவதாக தெரிவித்துள்ளார். இதனை எதிர்க்கொள்ளும் வகையில் நாட்டின் பாதுகாப்பிற்கு செலவிடப்படும் சராசரி தொகையை இன்னும் சில ஆண்டுகளில் உயர்த்த முடிவு செய்துள்ளோம். இருப்பினும், எந்த ஆண்டிலிருந்து, எவ்வளவு…

Read More

வயிறு ஒட்டிப் பிறந்த ஏமன் இரட்டைக் குழந்தைகளை பிரிக்க சவுதியில் நடந்த 9 மணி நேர ஆபரேசன்

ஏமன் நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு சில மாதங்களுக்கு முன் வயிறு ஒட்டியபடி இரட்டைக் குழந்தைகள் பிறந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், அப்துல்லா, அப்துல் ரகுமான் என்று பெயரிடப்பட்ட அந்த இரட்டைக் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதற்காக அவர்களின் பெற்றோர் சவுதி அரேபியாவிற்கு அழைத்து வந்தனர். பின்னர், அந்நாட்டு சுகாதார மந்திரி அப்துல்லா-அல்-ரபியாவின் வழிகாட்டுதலில், தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அசீஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பல்வேறு சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள்…

Read More