Headlines

குற்றவாளிகளுக்கு வேட்பு மனு வழங்க வேண்டாம்!- அஸ்கிரி பீடாதிபதிகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது நேர்மையான நாட்டுக்கு சேவையாற்றக் கூடியவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும அரசியல் கட்சித் தலைவர்களிடம் இரண்டு பீடாதிபதிகளும் கோரியுள்ளனர். குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமெனவும் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் மக்களிடம் கோரியுள்ளனர்.

Read More

நெசவு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நெசவு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம் பெற்றது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் 30 மாணவிகள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். தாம் பெற்றுக் கொண்ட பயிற்சிகளின் மூலம் கிராமத்தினதும்,நாட்டினதும் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யுமாறு அமைச்சர் பயனாளிகளிடத்தில் வேண்டிக் கொண்டார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,கிழக்கு…

Read More

ஹெரோயினுடன் வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவர் கைது

ஹெரோயின் போதைப் பொருளுடன் வெலே சுதாவின் சகோதரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 111.54 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு பொரளை பிரதேசத்தில் மூன்று இடங்களில் நேற்று கைது செய்யப்பட்ட இவர்களிடம் பல்வேறு தரத்திலான ஹெரோயின் இருந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். போதைப் பொருளை வைத்திருந்தமை, அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய வெலே சுதா என்பவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவிதிட்டத்தை ஆரம்பித்துவைத்த மொஹமட் பாயிஸ்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கல்வி பயிலும் பிள்ளைகள் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் இன்றைய தினம் ஆரம்பித்துவைத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அலுவலகத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் தலைமையில் உதவித்தொகை வழங்கிவைக்கப்பட்டது.

Read More

இஸ்லாமிய பொருளாதாரத்தை நடை முறைபடுத்துவது காலத்தின் கட்டாயம் – ஜேர்மன்

20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு சில தினங்களுக்கு முன்பு துருக்கியின் அன்கரா நகரத்தில் நடை பெற்றது இந்தியாவின் நிதி அமைச்சர் அருண்யேட்லியும் இதில் பங்கெடுத்தார். ஜெர்மன் நிதி அமைச்சரின் கருத்து மாநாட்டில் பலரையும் கவரும் விதத்தில் இருந்தது ஜெர்மன் நிதி அமைச்சர் தனது உரையில் உலக பொருளாதாரத்தோடு இஸ்லாமிய பொருளாதாரத்தையும் இணைத்து செயலாற்ற வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். இஸ்லாமிய பொருளாதாரம் உலகின் முக்கிய இடத்தை பிடித்திருப்பதை தற்போதைய சூழலில் நாம் மறுத்து விடமுடியாது . உலக…

Read More

மியன்மார் அகதிகளின் துன்பங்கள்,  தொண்ணூறுகளில்  நாம் பட்ட  வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது. மன்னாரில் அமைச்சர் றிஷாட்

இலங்கையில் தஞ்சமடைநது தவிக்கும் ; மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுணடிச்சாலையை இன்று மாலை 29 திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு…

Read More

அமைச்சர் றிஷாத் நன்றி தெரிவிப்பு!

-சுஐப் எம்.காசிம் – வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொழும்பு பிரதேச,  குறிப்பாக வெல்லம்பிட்டிய, கொலொன்னாவை பிரதேச மக்களின் நிவாரணப் பணிகளையும், அவர்களின் இன்னோரன்ன தேவைகளையும் கவனித்து வரும், கொலொன்னாவை மஸ்ஜித் சம்மேளன நிர்வாகிகளுக்கு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் சார்பிலும் நன்றி தெரிவிப்பதோடு, அவர்களுக்கு தொடர்ந்தும் பணிபுரியக் கூடிய சக்தியை இறைவன் வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் றிஷாத் நேற்று (23/05/2016) தெரிவித்தார். இந்தப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 27 பள்ளிகளின் உலமாக்கள், நிர்வாகிகளுடனான கலந்துரையாடலின்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More

பரஸ்பரப் புரிந்துணர்விலேயே மீள்குடியேற்றத்தின் வெற்றி தங்கியுள்ளது

சகோதர இனங்களுடன் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் வாழ்வதன் மூலமே மீள்குடியேற்றத்தின் வெற்றி தங்கி உள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் மீள்குடியேறிய மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த பின்னர் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, 25 ஆண்டுகள் தென்னிலங்கை அகதி முகாம்களில் நாம் பட்ட கஷ்டங்கள் போதும். இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும். சிறுசிறு பிரச்சினைகளுக்காக நமக்குள் அடிபட்டுக்கொண்டிருக்க முடியாது. அதேபோன்று மாற்றுச் சமூகத்தைச்…

Read More

கட்டார் மஸ்ஜித்களுக்கு  அருகாமையில் A/C வசதியுடன் இப்தார் கூடாரங்கள்!

-எம்.வை. இர்பான் தோஹா- கட்டாரில் பல பாகங்களிலும் நோன்பு திறப்பதற்கான பெரிய, சிறிய அளவிலான இப்தார் கூடாரங்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் அமைக்கபட்டுள்ளது. அப்படி தோஹா ஹிலால் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கூடாரத்தை படத்தில் காணலாம். இதில் A/C வசதி செய்யப் பட்டுள்ளது. இவற்றை தொண்டர் நிறுவங்கள், தனியார் கம்பனிகள் , மற்றும் தனி நபர்களின் அனுசரனையுடன் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

எதிர்வரும் தேர்தலில் அ.இ.ம.காவினூடாகப் போட்டியிடுவேன் -கலாநிதி ஜெமீல்

கடந்த 09.03.2019ம் திகதி சனிக்கிழமை மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற இலவச மின்சார மற்றும் குடிநீர் வழங்கும் செயற்றிட்டம் – 2019 நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஜெமீல் கலந்து கொண்டிருந்தார். சுமார் ஒரு வருட காலமாக நேரடி அரசியல் செயற்பாடுகளில் கலந்து கொள்ளாமலிருந்த ஜெமீல், இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு, பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரின் பேச்சுக்களனைத்தும், அவர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கெதிராகவும், தனது கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தான்…

Read More

அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக அறிக்கை விட வேண்டாம்- றிப்கான் பதியுதீன் சாட்டை

சிவசக்தி ஆனந்தனுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் சாட்டை தர்மபுரத்தில் குடியிருக்கும் தமிழ் மக்களை அமைச்சர் றிஷாத் பதியுதீன் வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை ஆதாரமற்றதும் ஓர் அப்பட்டமான குற்றச்சாட்டும் ஆகும்.   வடக்கில் தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி உழைத்து வரும் அமைச்சர் றிஷாட்டின் பணிகளைப் பொறுக்கமாட்டாத இனவாத சக்திகள் அவர்மீது காழ்ப்புணர்வான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.   அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக தவறான…

Read More

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க பெரும்பான்மை கள் சதி-கண்டிக்கிறார் அப்துல் பாரி

வடக்கில் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் அரசாங்கம் குடியேற்றுவதுடன்,அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று வவுனியா நகர சபை உறுப்பினரும்,வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவருமான  அப்துல் பாரி கோறிக்கை விடுத்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினர்.கடந்த 22 வருட காலமாக அந்த மக்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் இடம் பெறவில்லை.இருந்த போதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்ட அபிவிருத்தி…

Read More