Headlines

முன்னாள் கிழக்கு முதல்வர் மீண்டும் வர முடியாது- அமீர் அலி

கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் தமிழரோ அல்லது முஸ்லிமோ முதலமைச்சராக வரலாம். ஆனால் தற்போது இருந்த முதலமைச்சர் வரக்கூடாது என்று நான் பிரார்த்திக்கின்றேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் மாஞ்சோலை மற்றும் செம்மண்னோடை கிராமத்தில் பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- அரசியலில் இருக்கும் வரை…

Read More

மீள்குடியேற்ற அதிகாரம் றிஷாட் பதியுதீனிடம் மீளக்கிடைத்தது!!!

கௌரவ றிசாத் பதியுதீன் அவர்கள் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் வடபுல முஸ்லிம்கள் சுதந்திரமாக சென்று மீள்குடியேறக் கூடிய சூழல் நிலவவில்லை. முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பூர்வீகக் கிராமங்கள் விடுவிக்கப்பட்டு இருக்கவில்லை.ஆனால் வன்னி யுத்தத்தால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கி இருந்த 300 000 குடும்பங்களை இவரால் குடியேற்ற முடிந்தது. நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தும் என்னால் வடபுல முஸ்லிம்களை கௌரவமாக மீள்குடியேற்ற முடியவில்லையே என்ற கவலை இவரை வெகுவாக வாட்டியது.இவரின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சர்களாக இருந்தோர்…

Read More

இஸ்லாமிய முறையில் உயிரினங்களை  அறுக்கும்போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது: சோதனை மூலம் நிரூபனம்!

உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெரித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர். ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத்தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை…

Read More

மின் தடைக்கு, மின்னலே காரணம்

பொல்பிட்டியவிலிருந்து கொலனாவை வரையிலான அதிவலுகொண்ட பிரதான மின் கட்டமைப்பை மின்னல் தாக்கியதன் காரணமாகவே நாடளாவிய ரீதியில் மின்சார தடை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று (26) பிற்பகல் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இயல்வு வாழ்க்கையில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. லக்‌ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின்நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்வழங்கும் 33,000 வோல்ட் மின் தொகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாகவே இம்மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை…

Read More

மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது மு.கா வெறித்தனமான தாக்குதல்!

மு.கா பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் அடாவடித்தனம் தொடர்ந்தேர்ச்சியாக சம்மாந்துறையில் அரங்கேறி வருகின்றது. அந்தவகையில், சம்மாந்துறையில் இன்று (09) சின்னப்பள்ளி வட்டாரத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்கப்பட்டவர்கள் தற்சமயம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக எந்தவித முறையான சிகிச்சையும் அளிக்கப்படாமல் ஆறாம் வாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த வைத்தியசாலை நிர்வாகத்திலும் அரசியல் பின்புலத்தில் உரிய சிகிச்சை வழங்கக்கப்படாமல் இருப்பது…

Read More

முஹமது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பாகங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை – ஜேர்மனி பத்திரிகை

இறைத்தூதர் முஹமது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பாகங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது. பெர்லின் அரச நூலகத்தில் பல ஆண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த குர்ஆன் பாகங்கள் சூரிச்சில் இருக்கும் ஆய்வுகூடத்தில் சோதனை யிடப்பட்டுள்ளது. மிருகத் தோலினாலான ஏழு பக்கங்கள் கொண்ட இந்த அல் குர்ஆன் பாகம் கி.பி. 606 இல் இருந்து 652 ஆம் ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவை என்று அந்த ஆய்வின் மூலம்…

Read More

காற்று மாசு சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு!

நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதை தடுக்க காற்றில் ஏற்படும் மாசுககளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார். இக்கருவி 23 அடி உயரம் கொண்டது. மிக சிறிய…

Read More

வளைகுடா ஒத்துழைப்பு சபை சந்தையில் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு புதிய திருப்புமுனை!

இலங்கை ஏற்றுமதி செயற்பாடுகளில் நுழைவதற்கு இதுவரை வழங்கப்படாத இணையற்ற சலுகைகளுடன் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய தடையற்ற துறைமுகங்களில் ஒன்றான சோஹாரின் சக்திவாய்ந்த வளைகுடா ஒத்துழைப்பு சபை அதன் கதவுகளை திறந்துள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஒரு புதிய திருப்புமுனையாகும்.   உலக மற்றும் வரலாற்று பிரசித்திபெற்ற சிலோன் தேயிலை மற்றும் இலங்கையின் ஏனைய உற்பத்திகளினை கொண்டு  உடனடி பயனாளிகளாக முன்வாருங்கள் என  ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சின் அரச விவகாரங்களுக்கான தற்காலிக துணைச்செயலாளர்…

Read More

யாழ் பல்கலைக்கழக தொழுகையறை தாக்குதலுக்கு மக்கள் காங்கிரஸ் கண்டனம்

யாழ் பல்கலைக்கழக தொழுகையறை தாக்குதலுக்கு மக்கள் காங்கிரஸ் கண்டனம்.. . யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசின் தொழுகை அறை தாக்கப்பட்டமை வருத்தத்துக்குரியது எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் யாழ் பல்கலைக்கழக நிருவாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் கல்விப்பிரிவுப் பணிப்பாளர் டாக்டர். ஷாபி ஸிஹாப்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் மீண்டும் துளிர்விட்டு வரும் இனநல்லுறவுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில், இனந்தெரியாதோர்…

Read More

அரநாயக்க பாரிய மண்சரிவு! 134 பேர் புதையுண்டுள்ளதாக அச்சம்?

மாவனல்ல அரநாயக்க மண்சரிவில் 134 பேர் இன்னும் மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் புதையுண்ட 14 சடலங்கைள மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். எனினும் இன்னும் 134 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அரநாயக்க, எலங்கபிட்டிய சாமசர மலை இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டது. மலையடிவார கிராமங்களில் காணப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. மலையின் நூறு ஏக்கர் பகுதி சுமார்…

Read More

අපදා ඇතිවූ ප්‍රදේශ වල තත්වය සොයා බලන ලෙස ඇමතිවරුන්ට ජනපති උපදෙස් දෙයි 

– නිලුපුලී – පසුගිය දිනවල ඇදහැළුණු වර්ෂාව හේතුවෙන්  විපතට පත් ජනතාවගේ අවශ්‍යතා මෙන්ම ඔවුන් වෙනුවෙන් සලසා ඇති සුබසාධන කටයුතු පිළිබඳ සොයා බැලීමට සතියකට වරක්වත් එම ප‍්‍රදේශවල සංචාරයක නිරතවන ලෙස ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මහතා විසින්  ඊයේ එනම් (ජුනි 01) පෙරවරුවේ කෑගල්ල නගර ශාලාවේ පැවති කෑගල්ල දිස්ති‍්‍රක් විශේෂ සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමට එක්වෙමින් ප්‍රකාශ කරන ලදි .එසේම නාය…

Read More

ஆபாச தளங்களுக்கு தடை விதிக்கக் கோரி கையெழுத்து வேட்டை

பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான இணையத்தளங்களுக்கு தடை விதித்து, அந்த இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் மார்க்கங்களை தடை செய்யுமாறு கோரி கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று நடைபெறவுள்ளது. கையெழுத்து வேட்டை இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது. ஆலோசனை மற்றும் நல்லிணக்க சபை ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த கையொப்பம் திரட்டும் நடவடிக்கை காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகங்களில் அதிகரிப்பு மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு, பாலியல் உணர்வுகளை தூண்டும்…

Read More