அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 348 தொகுதிகளை கைப்பற்றி ஆங் சான் சூகி கட்சி அபார வெற்றி
நான்கு நாட்களாக இழுத்தடிக்கப்பட்டுவந்த மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷன் கீழ்சபையில் அக்கட்சிக்கு அளித்துள்ள 21 இடங்களையும் சேர்த்து மொத்தம் 348 இடங்களில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சி புதிய ஆட்சியை அமைக்கின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில்…
