Headlines

றிஷாத் பதியுதீனை புதன் கிழமைக்குள் கைது செய்ய வேண்டும் – சிங்ஹல ராவய எச்சரிக்கை

அமைச்சர் ரிசாத் பதியுதீனை நாளை மறுதினம் புதன் கிழமைக்குள் கைது செய்ய வேண்டும் என சிங்ஹல ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வில்பத்து, மடு போன்ற பகுதிகளில் காடழிக்கப்பட்டு வருவாதகவும் அது தொடர்பிலானவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள சிங்ஹல ராவய குறித்த தினத்திற்குள் ரிசாத் பதியுதீ;ன் கைது செய்யப்படவில்லையாயின் எமது அமைப்பு பலத்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. காடழிப்பு நிறுத்தப்பட்டாலும் அது தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு…

Read More

பம்பலப்பிட்டி மாணவி கடத்தல், விடுவிக்க 75 இலட்சம் ரூபாய் கப்பம் கோரப்படுகிறது

காணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கூறி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ். உடுவில் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த பரமரத்தினம் தவமலர் (வயது 50) என்பவரே நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பம்பலபிட்டி சென் கிளியர் பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றிய பரமரத்தினம் றொகாண் தர்மினி (19) என்ற மாணவி…

Read More

சந்திரிக்கா அதிரடி

தேசிய அரசாங்க கொள்கைகளுக்கு இணங்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும், ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். தேசிய அரசாஙகம்…

Read More

புலி கதைகூறி, தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது அரசு – அனுரகுமார

அரசாங்கம் தொடர்ந்தும் புலிப் பீதியை காண்பித்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது என  ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.   புலம்பெயர் சமூகத்துடன் அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர் ஒருவருடன் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றது. புலம்பெயர் சமூகத்திற்கு என்ன விலை கொடுத்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடியுமா என்று பார்க்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.   தங்களது தேவைக்காக எவருடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடியவர்களே இந்த ராஜபக்சக்கள். நாடு முழுவதிலும் பல்வேறு வழிகளில்…

Read More

வளைகுடாவில் நாளை முதல் ரமழான் நோன்பு!

சவூதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று, இரவு சவூதியில் எந்த பகுதிகளிலும் ரமழான்  பிறை தென்படாததால் ஷஃபான் பிறை 30 என கணக்கிடப் பட்டு, நாளை வியாழன் ரமழான்  முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் இதற்கிடையே நேற்று ரமழான்  பிறை தென்பட்டால் உடன் தகவல் தர வேண்டும் என்று சவூதி வாழ் மக்களுக்கு சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

அமைச்சர் றிசாத் எவ்வித காரணங்களுக்காகவும் அமைச்சு பதவியை இராஜினமா செய்யமாட்டார்- பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உறுதிப்படத் தெரிவிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் எவ்வித காரணங்களுக்காகவும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய மாட்டார் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உறுதிப்பட தெரிவித்தார். திருகோணமலை உவர் மலை விவேகானந்தா கல்லூரியில் இன்று (02) ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு அவர் உரையாற்றுகையில் அமைச்சர் மீதான வீண் பழி சுமத்துவதும் பொய்யான  குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் அவர் மீது கொண்ட…

Read More

“முஸ்லிம் சமூகம் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” ஐ.நா விஷேட அறிக்கையாளரிடம் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

முஸ்லிம் சமூகம் நம்பிக்கையோடு உருவாக்கிய நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள் குறித்து அந்தச் சமூகம் இப்போது படிப்படியாக நம்பிக்கை இழந்து, விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ. நா விஷேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் அவர்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா விஷேட அறிக்கையாளரை இன்று காலை (20/ 10/ 2017) கொழும்பில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே, அமைச்சர்…

Read More

சீனா சென்ற ஜனாதிபதிக்கு பாரிய வரவேற்பு

சீனாவுக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதிக்கு தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சர் லியோன் ஜியென்சாவோ வரவேற்றார். இலங்கை விமானசேவைக்கு சொந்தமான யுஎல் 868 விமானத்தினூடாக நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் ஜனாதிபதி – அவரது பாரியார் ஜயந்தி சிரிசேன உட்பட பிரதிநிதிகள் குழுவினர் சீனா நோக்கி சென்றனர். இவ்விஜயத்தின் போது இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதுடன் ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்திடப்படவுள்ளன. சீன ஜனாதிபதி வழங்கும் விசேட விருந்துபசாரத்திலும்  ஜனாதிபதி…

Read More

சர்வதேச குழந்தைகள் தினம் இன்று

சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபையால் 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐ சர்வதேச குழந்தைகள் தினமாக பிரகடணப்படுத்தியது. அதிகளவிலான குழந்தைகள் நாள்தோறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம் பேர். மூன்று வேளை உணவுகூட கிடைக்காமலும், சரியான உடை கிடைக்காமலும், முறையான தங்குமிடம் இல்லாமலும் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர்,…

Read More