Headlines

கிண்ணியா உப்பாறு பகுதியில் புதிய பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது நேற்று (24) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் வர்த்தக வாணிப கைத்தொழில் ,நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல்,கூட்டுறவு திறன் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால் அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது சுமார் 230 மில்லியன் ரூபா செலவில் நிருமாணிக்கப்படவுள்ள இப் பல்கலைக்கழக கல்லூரி பிரதியமைச்சரின் நீண்ட கால முயற்சியின் பலனாக தற்போது இது நிறைவேறியுள்ளது….

Read More

காஷ்மீர் விவகாரம்: லண்டனில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்த போராட்டம்

இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட பாகிஸ்தான் சார்பு குழு, லண்டனின் மத்திய பகுதியில் காஷ்மீரில் விவகாரத்தில்  பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களே கலந்து கொண்டு கொடிகளை பதாகளையும் ஏந்தி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். குறைந்த அளவு எண்ணிக்கையிலேயே இந்த ஆர்பாட்டத்தில் மக்கள் கலந்து கொண்டதால் போராட்டம் பிசுபிசுத்து போனது. ”மில்லியன் மார்ச்” என்று கூறப்பட்ட இந்த போரட்டம் லண்டனில் உள்ள டிராபால்கார் சதுக்கத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானின் மக்கள் கட்சி  தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி பேசுவதற்கு…

Read More

மேர்வின் சில்வா மரத்தில் கட்டி வைத்த சம்பவம்.. முறைப்பாடு செய்யபட்டது, ஆப்பு தயார்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக, பொலிஸ் தலைமை காரியாலயத்தில் பேராசிரியர் தினேஷ் கே. குணசேகரவினால், நேற்று குற்றவியல் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு சமூர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்த சம்பவம் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More

பைசர், றிஷாட், அசாத் சாலி, மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உறுதி மொழியையடுத்து மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது

சுஐப் எம் காசிம் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை போக்கி, பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென கடந்த 44 நாட்களாக மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்த மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தை இன்று மாலை தற்காலிகமாக (08) இடை நிறுத்திக்கொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று காலை (07) நடாத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்தும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளதால்; போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர்களான றிஷாட்…

Read More

காத்தான்குடியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ள தேர்தல் மேடை

இன்று (19) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ளார்

Read More

மக்கள் காங்கிரஸ் தவிசாளரின் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

இன்றைய தினம் தைப்பொங்கள் பண்டிகையை கொண்டாடும் மரியாதைக்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

Read More

மாதம் 2 கோடி சம்பளம் பெறும் ஏழை முஸ்லிம் தொழிலாளியின் மகன்

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் போரூர் கிராமத்தை சேர்ந்தவர் சேக் ஜமாலுதீன். இவரது மனைவி ரகீமா பேகம். இவர்களுக்கு 2 மகள்களும், நசீர்பாபா என்ற மகனும் உள்ளனர். சேக் ஜமாலுதீன் கிரானைட் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மாதம் ரூபாய் 5 ஆயிரம் தான் வருமானம் பெற்றார். குடும்பத்தை காப்பாற்ற இந்த வருமானம் பற்றாக்குறையாக இருந்ததால் மனைவி தையல் வேலையில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களது மகன் நசீர்பாபாவுக்கு படிப்பு மீது மிகுந்த ஆர்வம்…

Read More

பாணந்துறையில் பெண்களின் மண்டையோடுகளும் எலும்புகளும் மீட்பு

பாணந்­துறை தெற்கு பகுதி வீடொன்றில் இருந்து உயி­ரி­ழந்த இரண்டு சகோ­த­ரி­க­ளு­டை­யது என சந்­தே­கிக்­கப்­படும் மண்­டை­யோ­டு­களும் மனித எலும்­புக்­கூ­டு­களும் நேற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. வயோ­திபப் பெண்­க­ளான இரு­வரும் சில மாதங்­க­ளுக்கு முன்னர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு பின்னர் குறித்த தமது சகோ­த­ரிகள் வாழ்ந்த வீட்­டுக்கு வந்து பார்த்த போது சகோ­த­ரி­களின் மண்­டை­யோ­டு­களும் மனித எலும்­புக்­கூ­டு­களும் காணப்­பட்­ட­தாக பெண்­களின் சகோ­தரர் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். இந்­த­நி­லையில் மரண விசா­ரணை இடம்­பெறும் வரை சம்­பவ இடத்தில் பொலிஸ்…

Read More

பாவனையாளர் அதிகார சபையின் பாய்ச்சல் தொடர்கின்றது.

அமைச்சின் ஊடகப் பிரிவு நாட்டின் வர்த்தக நிலையங்களை நுகர்வோர் அதிகார சபை நேற்றும் 22 நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளில் முறைகேடான விற்பனைகளில் ஈடுபட்ட  106 வர்த்தகர்கள் அகப்பட்டுள்ளனர். கொழும்பு – 13, கம்பஹா – 8, களுத்துறை – 5, பதுளை – 3, புத்தளம் – 6, காலி – 5, ஹம்பாந்தோட்டை- 4, மாத்தளை – 5, நுவரெலியா – 6, கண்டி – 12, மட்டக்களப்பு -6, திருகோணமலை- 4, அம்பாறை –…

Read More

இலங்கை வருகிறார் ஐ.நா உதவிச்செயலர்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்காக அண்மையில் நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரியுடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். இலங்கை அதிகாரிகள் மற்றும் பங்காளர்களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடலுக்கு, ஐ.நா உதவிச் செயலரின் இந்தப் பயணம் வாய்ப்பை வழங்கும் என்றும், இலங்கைக்கு உதவும் வகையிலான, நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான…

Read More

கீதா, சாலிய பதவி நீக்கம் – 11 பேருக்கு புதிய பதவிகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி, புதிதாக நியமனம்பெற்றவர்களின் விபரம் வருமாறு, கம்பஹா மாவட்ட அமைப்பாளர் –…

Read More

அனைத்து அபிவிருத்திகளையும் ஐ.தே.கட்சியின் அரசாங்கம் செய்தது!- பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சி இல்லை என்றால், நாடு முன்னோக்கி செல்லாது எனவும் நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடந்துள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே செய்தது. நாட்டை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியை சூழ இணைய வேண்டும் எனவும் பிரதமர் குறி்ப்பிட்டுள்ளார். இணையத்தளம் வழியாக…

Read More