Headlines

ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு புதுக்கடையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தலைமையில் புதன்கிழமை இரவு  நடைபெற்றது.  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ,தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பல அதிதிகள் வருகை தந்தனர்.  இக்கூட்டத்தில் பல் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆனமடுவ – மதவாக்குளம் முஸ்லிம்களின் சிறந்த முன்மாதிரி

அண்மையில் இலங்கையிலுள்ள ஆனமடுவ, மதவாக்குளம் என்ற ஊருக்கு குத்பா மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தோம் அல் ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் உதவியால் இலங்கையின் பல பாகங்களுக்கும் அவனது மேலான மார்க்கத்தை எத்திவைப்பதற்காக செல்லக்கூடிய வாய்ப்பை அல்லாஹ் தந்து கொண்டே இருக்கிறான், எல்லாப் புகழ்களும் அந்த ரஹ்மானுக்கே உரித்தாகட்டும். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை தேடிப்பார்ப்பதில் அலாதியானதொரு இன்பம் நமக்கு, அந்த வகையில் குத்பா நிகழ்த்திய மதவாக்குளம் ஜுமுஆ பள்ளிவாசலுக்கு சுமார்…

Read More

தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலம் குறித்து மோடி ஆராய்வு

இலங்கையின் தலைமன்னாரையும் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரை வழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக, பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், வங்கிகளின் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் தரைவழி…

Read More

மக்களின் வாக்குரிமையை கொள்ளையிட அரசாங்கம் முயற்சி!– கபீர் ஹாசீம்

தேர்தல் தினமன்று வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு அதன் மூலம் தேர்தலை குழப்ப திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திரமான முறையில் மக்கள் வாக்களிப்பதனை தடுக்கும் நோக்கில் வன்முறகைள் கட்டவிழ்த்துவிடப்பட உள்ளது. இந்த விடயம் அம்பலமானதைத் தொடர்ந்து கட்சிää தேர்தல் ஆணையாளருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அரசாங்கம் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தால் அவற்றை அச்சமின்றி எதிர்நோக்க எதிர்க்கட்சிகள் தயார். அரச சொத்து பயன்பாடு, சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை நோக்கும் போது, எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சுயாதீனமானதும் நீதியானதுமாக…

Read More

தொழில் முயற்சியாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான “மதிப்பீட்டு ஆய்வு” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று கையளிப்பு!  

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையுடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயற்பாடுகளை சீராக ஒழுங்குபடுத்தும் பல்வேறு திட்டங்களை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், குறித்த நிறுவனங்களுக்கான முறையான சட்டவரைபை உருவாக்கி, சூழலுக்கு ஏற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், அவற்றின் நிர்வாகங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு பிரதான நடவடிக்கையை எடுத்துள்ளது. நிறுவனங்களின் சட்டவரைபு  உட்பட ஏனைய செயற்பாடுகளை ஒருமிக்கச் செய்யும் வகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, ஏர்னஸ்ட் அன்ட் யோங் நிறுவனம் (Earnest…

Read More

19 வருடகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள 3000 முறைப்பாடுகள்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 3000 முறைப்பாடுகள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த முறைப்பாடுகள் சுமார் 19 வருட காலமாக விசாரிக்கப்படாமல் இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கு போதியளவான அதிகாரிகள் நியமிக்கப்படாமையே இதற்கு காரணமென குறிப்பிடப்படுகின்றது. இதனால் முறைப்பாட்டாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், விரைவில் ஒப்பந்த அடிப்படையிலான அதிகாரிகளையாவது நியமித்து தேங்கிக் கிடக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென மனித உரிமை ஆணைக்குழுவின்…

Read More

இந்திய சுதந்திர தின விழா: மோடி உரை

இந்திய சுதந்திர தினவிழா இன்று (15) இந்திய நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார். பிரதமர் மோடியின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றினார். கொடியேற்றிய பிறகு பிரதமர் மோடிக்கு முப்படையினர் அணிவகுப்பை பார்வையிட்டார். அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி இந்தியா, வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை…

Read More

‘மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது’ பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட்- மட்டக்களப்பு மாவட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் வறுமையில் மூன்றாவதாக காணப்பட்டது. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் தற்போது வறுமை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சு பதவி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தின் வறுமை நிலையை இரண்டு வருடத்தில் 8.3 வீதமாக குறைப்பதற்கு குறித்த அமைச்சின் பங்களிப்பு அதிகம் உள்ளது. கடந்த 2016ம், 2017ம் ஆண்டுகளில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி…

Read More

லசந்த கொலை ; முன்னாள் பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் விசாரணை

பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர்  மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர்களான பிரசன்ன நாணயகார மற்றும் சந்திர வகிஷ்ட ஆகியோரிடம் இன்று (20) காலை குறித்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. லசந்த கொலை விசாரணைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில்…

Read More

வெளிமாகாணங்களில் நியமனம் பெற்ற கல்வியல் கல்லூரி ஆசிரிய ஆசிரியைகளை சொந்த மாவட்டங்களில் நியமிக்க பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அகிலவிராஜிடம் வேண்டுகோள்.

வெளி மாவட்டங்களுக்குள் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரிய நியமனங்களை தங்களுடைய சொந்த பிரதேசங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வெளிமாவட்டங்களுக்குள் வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பில் பிரதியமைச்சரிடத்தில் வெளிமாவட்டங்களில் நியமனக் கடிதங்களை பெற்ற ஆசிரிய  ஆசிரியைகள் தங்களை சொந்த மாவட்டங்களில் பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை செய்து தருமாறு கோரியிருந்தனர் .இது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலோஇராஜ் காரியவசமிடத்தில் இன்று (10) பிரதியமைச்சரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட…

Read More

பலியெடுத்தது இராவணன் வெட்டு : இரு குழந்தைகள் சாவு

திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலுக்கு அருகில் உள்ள கடலில் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இன்று மதியம் 01.00 மணியளவில் குழந்தைகளுடன் கடலில் குதித்தவேளை மூவரும் கடற்படையினரால் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது 12 வயதான சிறுமி மற்றும் 09 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ள நிலையில் தாய் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.கற்பாறைகளின் மேலிருந்து கடலை பார்த்து கொண்டிருந்த போது மகன் தவறி விழுந்து விட்டதாகவும்…

Read More