பொய் சொல்கிறார் நாமல் : பொலிஸ் பேச்சாளர் கூறுகின்றார்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொய்யுரைப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார். இந்தக் கூட்டத்திற்குள் இராணுவ கேப்ரல் ஒருவர் ஆயுதத்துடன் பிரவேசித்து ஜனாதிபதிக்கு அருகாமையில் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த இராணுவ கோப்ரல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் எனவும், அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின்…
