Headlines

அம்பியூலன்ஸ் வண்டிக்கு ஏற்பட்ட விபரீதம்

இன்று காலை தெரணியகல வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பியூலன்ஸ் வாகனமொன்றை பின்னால் எடுக்க முற்பட்ட போது நடந்த விபரீதம்.

Read More

லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன் கைது

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொட – லுனுவல பிரதேசத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வல்லபட்டை கொண்டு சென்ற ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது அவரிடம் 2000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஓப்பனாயக்க பொலிஸ் நிலைய சார்ஜன் இன்று பலாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Read More

கமரூனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து!

பிரித்தானிய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள டேவிட் கமரூனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன், பிரித்தானியாவுடன் இலங்கை மிக நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Read More

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இடியுடன்மழை!

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (11) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் நாட்டின் பல்வேறு கரையோரங்களிலும் காற்றுடன் கூடிய மழைக்கு சாத்தியம் காணப்படுகிறது.  மேலும் வடக்கு மற்றும் கிழக்கு  கடலோரங்களில் காலையில்  மழைக்கான சாத்தியம் நிலவும் குறிப்பாக புத்தளம் மாத்தறை கொழும்பு ஊடாக காலி முதலான கடலோரங்களில் காலையில் மழை பெய்யலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய…

Read More

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கு வழக்கு பின்னணி: 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற…

Read More

கொழும்பு நோக்கி வந்த விமானம் ஏன் திரும்பிச் சென்றது தெரியுமா?

நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன் இவ்வாறு திரும்பிச் சென்றது என்பதற்கான காரணம் தற்போது வௌியாகியுள்ளது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குடித்து விட்டு குழப்பம் விளைவித்தமையினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேஷியன் ஏயார்லயின்ஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் இன்று காலை 10.06க்கு நாட்டை…

Read More

நேபாளத்துக்கு உதவ மற்றுமொரு விமானம் நாளை பயணம்

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையில் இருந்து மற்றுமொரு விமானம் அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. நாளை காலை 09.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. நேபாளத்திற்கு உதவிக் கரம் நீட்டும் நோக்கோடு இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் நான்காவது விமானம் இதுவாகும். இதில் 18 டன் நிறையுடைய உதவிப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படவுள்ளதுடன், இந்தப் பொருட்கள் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்…

Read More

காணாமல் போதல் தொடர்பான ஐ.நா குழு இலங்கை வருகிறது

பலாத்காரமாக-விருப்பமின்றி காணாமல் போகச் செய்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை இக்குழு இலங்கையில் விஜயம் செய்யவுள்ளது. பலாத்காரமாக-விருப்பமின்றி காணாமல் போகச் செய்தல் தொடர்பான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் 6ம் திகதி ஆரம்பித்து 15ம் திகதி நிறைவுபெறவுள்ள நிலையில், ஐவர் அடங்கிய குழு இலங்கை வரவுள்ளது. 30 நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற காணாமல் போதல் தொடர்பான 400 முறைப்பாடுகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Read More

அனைத்து கட்சி தலைவர்களுடனும் இன்று ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று திங்­கட்­கி­ழமை அனைத்து கட்­சித்­த­லை­வர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார். இப்­பேச்­சு­வார்த்­தை­களில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐ.தே.க. மற்றும் ஜாதிக ஹெல உறு­மய உட்­பட பிர­தான அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் கலந்து கொள்­ள­வுள்­ளனர். ஜனா­தி­ப­தி­யு­ட­னான இன்­றைய அர­சியல் கட்­சிகள் நடத்தும் பேச்­சு­வார்த்­தை­களின் பெறு­பே­றுகள் மற்றும் நேற்று (ஞாயிற்­றுக்­கி­ழமை) சிறு­பான்மை கட்­சிகள் உட்­பட சிறிய கட்­சி­க­ளுடன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­க­மைய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பாக தயா­ரிக்­கப்­படும் யோச­னைகள் எதிர்­வரும் 13ஆம் திகதி…

Read More

மன்னார் மறிச்சுக்கட்டியில் இடம் பெற்ற மீள்குடியேற்றம் சட்ட ரீதிக்கு உட்பட்டது -மன்னார் அரசாங்க அதிபர்

மன்னார்  மறிச்சுக்கட்டியில்  இடம் பெற்று மீள்குடியேற்றம் சட்ட ரீதிக்கு உட்படுத்தப்பட்டதொன்று என்றும் இதில் எந்தவொரு வெளிமாவட்ட மக்களும் மீள்குடியேற்றப்படவில்லை என்பதை மன்னார் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும் இன்னும் சிங்கள ஊடகங்கள் அதனை இருட்டடிப்பு செய்து ஒரு பக்கசார்பான செய்தியினையே ஒளிபரப்பு செய்வது கண்டனத்துக்குரிய செயலென பல அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு மக்களின் பாதுகாப்பு அமைப்பு,மன்னார் மாவட்ட சமத்துவத்துவத்துக்கும்,இன ஒற்றுமைக்குமான ஜனநாயக மையம்,மன்னார் முஸ்லிம் பிரஜைகள்  ஒன்றியம்,முசலி மண் பாதுகாப்பு ஒன்றியம்.வவுனியா…

Read More

முஸ்லிம் மீள் குடியேற்றத்தை தூக்கிப்பிடிக்கும் இனவாதிகள் ஏன் வவுனியா சிங்கள குடியேற்றத்தை பேசவில்லை- அமைச்சர் றிஷாத் அதிரடி பேட்டி (Audio)

இலங்கையின் வடக்கே வில்பத்து பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தை அண்டிய பிரதேசத்தில் காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். வடக்கில் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் வேலைத்திட்டங்களின்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படாமல், ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்புள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பிரதேசங்கள் அழிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. வடக்கு-இலங்கையில் காடுகள் அழிக்கப்படுவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலும் தற்போதைய…

Read More

விண்டோஸ் 10 க்கு அடுத்து எதுவும் வெளிவராது: காரணம் என்ன?

மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘இக்னைட்’ (Ignite) தொழில் நுட்ப மாநாடு சிகாகோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜெர்ரி நிக்சன், “தற்போது நாங்கள் விண்டோஸ் 10-ஐ வெளியிடுகிறோம். இதுதான் மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் கடைசி…

Read More