Headlines

மீளகுடியேறியுள்ள முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க வழிவிடுங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

  (ஊடகப்பிரிவு) முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து கொண்டு இருக்காமல், அவர்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழிவிடுங்கள். என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களின் ஒருவருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். முல்லைத்தீவு கச்சேரியில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனின் வழிநடத்தலில் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், காதர் மஸ்தான் எம்பி ஆகியோர் தலைமையில் இன்று (10.07.2017) இடம்பெற்ற இந்தக்…

Read More

நீங்கள்…போகலாம்… – அமெரிக்க உளவு விமானத்தின் பைலட்டை 8 முறை எச்சரித்த சீன கடற்படை

தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெரும் அளவில் மண்ணை நிரப்பி, புதிதாகப் பெரிய தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. விமானதளம் அமைக்கும் விதத்தில் அந்தத்தீவு உருவாக்கப்பட்டு வருவதாக பல நாடுகள் சீனாவை விமர்சித்து வரும் நிலையில், அந்த தீவுக்கு மேல் பறந்த அமெரிக்க உளவு விமானத்தின் பைலட்டை சீன கடற்படை 8 முறை வெளியேறச் சொன்னதாக சர்வதேச செய்தி தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் அதி நவீன கண்காணிப்பு விமானமான…

Read More

கொழும்பில் தொடரும் போராட்டம்: மக்கள் பெரும் அவதி!

தொட்டலங்க பகுதியில் நேற்று (16) மாலை மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொட்டலங்க ஜப்பான் நட்புறவு பாலத்தை மறித்து அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். தொட்டலங்க பிரதேசத்தில் அனுமதியற்று கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பிரதேச மக்கள் நேற்று முதல் இவ்வாறு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் நேற்று மாலை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், இன்று…

Read More

இலங்கையில் ISIS  ஆபத்தில்லை – மூக்குடைந்த ஞானசார

ஐ.எஸ்.ஐ.எஸ்.களினால் இலங்கையில் ஆபத்து கிடையாது என காவல்துறையினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.இலங்கையில் குறித்த தீவிரவாத இயக்கம் இயங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். தமது உயிருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரான ஐ.எஸ்.ஐ.எஸ். வாதி தம்மை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், குறித்த இயக்கம் இலங்கையில் செயற்பட்டு வருவதற்கான எவ்வித ஆதரங்களும் கிடையாது எனவும், அவ்வாறான அச்சுறுத்தல்கள் கிடையாது எனவும்…

Read More

நிந்தவூர் வன்னியார் வட்டார வேட்பாளர் காரியாலயம் திறப்புவிழா!

-முர்ஷிட் முஹம்மத்- மறைந்த பெருந்தலைவர் அஷ்ரபின் கனவுகளுடன் நாளைய தலைவர்களை உருவாக்கும் பயணத்தில், நிந்தவூர் வன்னியார் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் மயில் சின்னத்தில் களமிறங்கியிருக்கும் பொறியியலாளர் ஆதம்பாவா வாக்கிர் ஹுசைனின் தேர்தல் காரியாலய திறப்புவிழா நேற்று முன்தினம் (03)   ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசனலி தலைமையில் இடம்பெற்றது. “நாங்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரானவர்கள் அல்ல, அதுவே முஸ்லிம் சமூகத்தின் அனைத்து கட்சிகளுக்கும் தாய்க்கட்சி. ஆனால் அந்தக் கட்சியையும், அதனூடாக நமது சமூகத்தையும் தவறான வழியின்பால்…

Read More

நீர்கொழும்பில் பதற்றம்!

நீர்கொழும்பில் இரு மீனவக்குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மீனவர்கள் இருவர் காயமடைந்தமையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மேலதிக பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் முச்சக்கரவண்டிகள் மூன்று, இன்னும் சில வாகனங்களுக்கும் மீன்பிடி படகொன்றுக்கு தீ மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மீனவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் முச்சக்கரவண்டிகள் மூன்று, இன்னும் சில வாகனங்களுக்கும் மீன்பிடி படகொன்றுக்கு தீ மூடப்பட்டுள்ளதாக…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மறிச்சுக்கட்டிக்கான உள்ளக வீதிகள் புனரமைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மன்னார் மறிச்சிக்கட்டி கிராமத்தின் உள்ளக வீதிகளின் புனரமைப்புப் பணிகள் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டன. அமைச்சரின் இணைப்பாளரும்,  பிரதேச சபை உறுப்பினருமான முஜாஹிரின் தலைமையில்,  13.3 மில்லியன் ரூபாய் பெறுமதியில்,  உள்ளக வீதிகளுக்கான தார் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.      

Read More

கண்டி பஸ் வீடொன்றின் மேல் விழுந்து 22 பேர் காயம்

– றிஸ்மி கலகெதர – கண்டியில் இருந்து வட்டபுலுவ நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி வட்டபுலுவ “யக்கா வங்குவ” எனும் திருப்பத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயனித்த 22 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு ஏழு மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. “யக்கா வங்குவ” திருப்பத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து வீடொன்றின் மேல் விழுந்தது. வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அதேவேளை, பஸ்ஸில் பயனித்த 22 பேர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Read More

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தன்னால் உடனடியாக தீர்மானிக்க முடியாது -சபாநாயக

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தன்னால் உடனடியாக தீர்மானம் எதனையும் மேற்கொள்ள முடியாது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தெளிவின்மை காணப்படுவதையிட்டு விளக்கமளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் புதிய நிலைமையொன்று தோன்றியுள்ளது. எனவே, இது தொடர்பில் கிடைக்கக் கூடிய உதாரணங்களை கவனமாக ஆராய்ந்து தீர்ப்புக் கூறுவது சபாநாயகரை பொறுத்த விடயமாகும் என்றார். நாடாளுமன்ற மரபுகள் மற்றும்; நிலையியல் கட்டளையிட்டு பெரிதும் பேசுகின்ற பிரதமர், எதிர்க்கட்சி…

Read More

இலங்கை அரச கூட்டுத்தாபனத்தில் “வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம்” அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் இன்று திறந்துவைப்பு…

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம் இன்று (11) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நிறுவனத்தின் தலைவர் ஹுசைன் பைலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, நிறுவனத்தின் பணிப்பாளர் ரியாஸ்…

Read More

யானை தாக்கி இளைஞன் பலி

திருக்கோவில் – ஸ்ரீவள்ளிபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று காலை விறகு வெட்டுவதற்காக காட்டுக்கு சென்ற போதே இவரை யானை தாக்கியுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஜீன்ஸ் ஆடை அணிவதற்கு தடை.!

வட கொரிய தலைவர் கிம் யொங் உன் மேற்குலக கலாசாரம் நாட்டில் பரவுவதை தடுக்க ஜீன்ஸ் ஆடைகளை அணிவதற்கும் முகத்தில் அலங்காரமாக துளையிடுவதற்கும் தடை விதித்துள்ளார். மேற்படி நாடளாவிய தடைகளானது சீனாவுக்கு அண்மையிலுள்ள யங்காங் மாகாணம் மற்றும் வட ஹம்கையொங் மாகாணம் என்பவற்றை இலக்கு வைத்து விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி வட கொரிய தொழிலாளர்கள் கட்சியின் 7 ஆவது கூட்டத்தையொட்டியே விதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஆசிய பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More