Headlines

தபால் பணியாளர்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் விவாதம்

தபால் பணியாளர்களின் பிரச்சினைகள் அமைச்சரவை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தற்சமயம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் குறித்த பணியாளர்களது பிரச்சினைகள் பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தப் பணி புறக்கணிப்பினால் ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால்நிலையத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று பிற்பகல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மகி நூடில்ஸ் மீதான தடையை நீக்கியது மும்பை உயர் நீதிமன்றம்

மகி நூடில்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மகி நூடில்ஸ் உணவுப் பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயம் இருந்ததாகக் கூறி, மத்திய உணவு தர பாதுகாப்பு ஆணையம் தடை விதித்து இருந்தது. அதனையடுத்து இந்தியாவில் மகி நூடில்ஸ் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தத் தடையை எதிர்த்து மகி நூடில்ஸ் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் வழக்குத் தொடர்ந்து இருந்தது. இவ்வழக்கை இன்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மகி மீதான தடையை…

Read More

பஸ் முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவா் உயிரிழப்பு

– க.கிஷாந்தன் – கண்டியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுடன் அட்டனிலிருந்து வட்டவளை ரொசல்ல பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் வூட்லேண்ட் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனா்….

Read More

349 மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட உத்தரவு…ஜனாதிபதி அதிரடி

நாடு பூராவும் உள்ள 349 மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாடசாலைகள் மத ஸ்தானங்கள் போன்றவற்றுக்கு ஐநூறு மீட்டர் தூரத்துக்கு உற்பட எல்லைக்குள் இருக்கும் அனைத்து மதுபான சாலைகளையும் நாளை அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யும் படி போதை தடுப்பு பிரிவிற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More

பொற்கேணி அளக்கட்டு கிராம மக்களுடனான சந்திப்பு

பொற்கேணி அளக்கட்டு கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது…

Read More

தென்னை பயிர் செய்கை சபையின் தலைவராக ஹிதாயத் சத்தார் நியமனம்

அஷ்ரப் ஏ சமத் தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவராக கண்டி யஹலத்தென்னை பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் ஹிதாயத் சத்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.பெருந்தோட்டதுறை  அமைச்சர் லக்மன் கிரியல்ல அவர்களால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மத்திய மாகாண சபை தேர்தலில் 15400 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட இவர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மாகாண சபைக்கு தெரிவாகவில்லை. சந்தைப்படுத்தல் துறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரியான இவர் ஐக்கிய தேசிய கட்சியின்  கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்பாளர்,கண்டி மாவட்ட முகாமையாளர்,அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல…

Read More

“மக்களின் நிலைப்பாட்டினை அறிந்து செயற்படுபவர்களாக அரச அதிகாரிகள் மாற வேண்டும்” அமைச்சர் றிஷாத் (வீடியோ)

அரச அதிகாரிகள், உதவிகளுக்காக தங்களை நாடி வரும் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அரச திணைக்களங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) இடம்பெற்றது. இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், மலர்ந்திருக்கின்ற இந்த சமாதானத்திலே இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற கத்தோலிக்க, இந்து, இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்….

Read More

நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் அரிசி இறக்குமதிகளுக்கு அனுமதி!!!

தரம் பரீட்சிக்கப்பட்டு 109,000 மெ.தொ. தருவிப்பு நாட்டின் நிலவிய மோச மான காலநிலை காரணமாக நெல் உற்பத்தியில் ஏற்பட்ட தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டே அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தருவிக்கப்பட்ட அரிசி யாவும் உரிய அனுமதியைப் பெற்றே, நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர அரிசியாலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரே ரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்….

Read More

புட்டிபால் புகட்டிய பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வித்தியாசமான முறையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினார். நண்பர்களுடன் தனது சொந்த தொகுதியான ‘விட்னி’யில் உள்ள டீன் லேன் பண்ணைக்கு அவர் சென்றார். அங்கு அண்மையில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியுடன் அவர் வெகு நேரம் செலவிட்டார். அதைக் கையில் தூக்கி கொஞ்சியும், முத்தம் கொடுத்தும் மகிழ்ந்தார். பின்னர் அந்த செம்மறி ஆட்டுக்குட்டிக்கு புட்டிப்பாலும் புகட்டினார்.

Read More

மூளையில் புற்றுநோயை எதிர்க்கும் ஸ்டெம் செல்கள் கண்டுபிடிப்பு

உலகில் பல்வேறு புதிய நோய்கள் தோன்றினாலும் மற்றோரு புறம் அதற்கான‌ மாற்று மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது அவ்வகையில் பல்வேறு மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டியை குணப்படுத்த,  விஞ்ஞானி டாக்டர் காலித் ஷா என்பவர், ஸ்டெம் செல்களை கண்டறிந்து உள்ளார். அமெரிக்கா ஹார்வர்டு ஸ்டெம் செல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், அங்குள்ள மாசேசூசெட்ஸ் தலைமை மருத்துவமனையில்  டாக்டர் காலித் ஷா தலைமையில் மேற்கொண்ட ஆய்வு மற்றும் பரிசோதனைகளில், புற்றுநோய் செல்களை கொல்லும், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ஸ்டெம்…

Read More

விண்­ணப்பம் கோரல் :சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சு

இலங்கை சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சில் நிறை­வுகாண் தொழில்­வல்­லுனர் சேவைகள் மற்றும் துணை­ம­ருத்­துவ சேவை­களின் பயிற்­சிக்­காக பயி­லு­னர்­களை ஆட்­சேர்க்க விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது. சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்­சு­விண்­ணப்­பங்­களை கடந்த 24ஆம் திகதி அரச வர்த்­த­மா­னியூடா­க கோரி­யுள்­ளது. பொதுச்­சு­கா­தார பரி­சோ­தகர் பயிற்­சி­யைத்­த­விர ஏனைய 12 தொழிற்­ப­யிற்­சி­களும் ஆங்­கி­ல­மொ­ழி­மூ­லத்தில் நடத்­தப்­படும். மருத்­துவ ஆய்­வு­கூட தொழி­ல்நுட்­ப­வி­ய­லாளர், மருந்­தாளர், பற்­சி­கிச்­சை­யாளர், இத­யத்­து­டிப்பு பதி­வாளர் உள்­ளிட்ட 12 ப­யிற்சி நெறிகள் 2 வரு­ட­காலம் இடம்­பெறும். பொது­வாக க.பொ.த. (சா.த)…

Read More