Headlines

”வித்தியா விவகார விசேட நீதிமன்றம்” ஞானசாரரின் கூற்றுக்கு, ராஜித்தவின் பதில்

வடக்கில்  மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண  சம்பவமாக  கணிக்க முடியாது.  மாணவியை சீரழித்து அதனை ஒளிப்பதிவு செய்து  சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது. எனவே  இதற்கு விசேட நீதிமன்றம் அமைக்கவேண்டியது அவசியமாகும் என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன  தெரிவித்தார். முதலில் இந்தியாவில் இவ்வாறு  திட்டமிட்ட வியாபாரமாக  இந்த செயற்பாட்டை மேற்கொண்டனர். தற்போது இலங்கைக்கும் வந்துள்ளனர். இதனை  சாதாரண விடயமாக கருதவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க…

Read More

20 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் அடுத்த வாரத்தில்!

இருபதாம் திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் அடுத்த வாரம் ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இன்று (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – 20 ஆம் திருத்தச்சட்டத்தை முன்வைப்பது தொடர்பில் எமக்கு 15 ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் பாராளுமன்றத்திலுள்ள…

Read More

இலவச வைஃபை வலயங்களை அதிகரிக்க நடவடிக்கை

மேலும் சில பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில்  இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், திஸ்ஸமகாராம பஸ் தரிப்பிடத்திலும் இலவச வைஃபை வலயம் நிறுவப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் முகவர் நிறுவன வேலைத்திட்டத்தின் முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மேலும் பல இடங்களில் இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக களுத்துறை மற்றும் பாணந்துறை ரயில் நிலையங்களிலும் விரைவில் இலவச வைஃபை வலயங்களை ஏற்படுத்துவதற்கு…

Read More

அசின் விராதுவை பின்தொடரும் ஞானசார பிக்கு

இஸ்ஸதீன் றிழ்வான் மின்மார் நாட்டின் 969 என்ற இனவாத அமைப்பின் தலைவர் அசின் விராதுவை இலங்கையின் இனவாத அமைப்பான பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் அச்சொட்டாக பின்பற்றுவதை அவரின் நடத்தைகள் படம்பிடித்துக்காட்டுகின்றன. பெளத்த மதத்தையும் மக்களையும் பாதுகாக்கவென அமைக்கப்பட்ட பொதுபலசேன என்ற அமைப்பு இதுவரைக்கும் பெளத்தர்களூக்கோ அல்லது பெள மதத்திற்கோ இதுவரையும் எதனையும் செய்யவில்லை. இலைங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் மற்றும் கிரிஸ்தவ மக்களுக்கெதிரான சதிகளே தொடர்கின்றன, அதன் வெளிப்பாடே அளுத்கம நகரை தீ…

Read More

வாசுதேவ நாணயக்காரவை கண்டிக்கும் அஸ்கிரிய மஹாநாயக்கர்

அஸ்கிரிய மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர், அண்மையில் பாராளுமன்றத்தில் வாசுதேவ நடத்து கொண்ட விதம் ஒரு போதும் அனுமதிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலைவர்கள் நாட்டுக்கு எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுடைய குழந்தைகள் தான் நாட்டில் எதிர்கால பிரதமர், ஜனாதிபதிகள் எனவே நாம் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது, பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை…

Read More

குவைத்தில் காலியை சேர்ந்த முகம்மத் அக்ரம் வபாத்

-குவைத்தில் இருந்து  அஸாம் – குவைத்தில் பாரத லங்கா இலங்கை உணவகத்தில் பணிபுரிந்த  முகம்மத் அக்ரம்  என்ற காலி பிரதேசத்தை  சேர்ந்த சகோதரர் மாரடைப்பு காரணமாக காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று 28/05/015 அஷர் தொழுகையின் பின் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும், யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக ஆமீன்……. தகவல் :MR.F .NASEER LANKA HOTEL FARWANAIYA CONTACT :69335656

Read More

ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பர்மா பிரஜைகள் – மலேசியா முன்னால் பிரதமர் மகாதீர் முஹம்மத் அதிரடி!

– அபுசெய்க் முஹம்மத் – 1.பர்மா அரசு ரோஹிங்க்யா குறித்து விலகி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை ..அதேவேளையில் ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற பர்மா அரசு நடவடிக்கை எடுக்கின்றது.. 2.ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பர்மிய நாட்டின் ஒரு அங்கத்தினராக 800 வருடங்களுக்கும் மேலாக இருந்து இருக்கின்றார்கள். 3.முன்னர் மியான்மாரின் போதும் பின்னர் பர்மாவாக மாறிய போதும் அவர்கள் பிரஜைகளாக கருதப்பட்டார்கள். 4.பர்மா அரசு ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களை தன் சக பிரஜைகளாக ஏற்றுகொள்ள வேண்டும் . 5.பௌத்தர்கள் ஆதிக்கம் மிகுந்த…

Read More

சேலை உடுத்த ஓநாய்

சேலை உடுத்த ஓநாய் ஆழக் கடலிலே ஓலமிடும் ஒலி ‘ஐநா’ உனக்கின்று கேட்கிறதா…? நாடி நரம்பெங்கும் விம்மி புடைக்குது நாமும் வெடிகுண்டை தூக்கிடவா….? காலை உடைக்கிறான் ஆளை முடிக்கிறான் மூளை எடுத்தவன் உண்ணுகிறான் வாலைப் பிடிக்கவா..? வாழ்வை முடிக்கவா..? வாளைப் பிடித்து நாம் வாழ்ந்திடவா…? பாலை வனம்போல மாறும் மனங்களால் பாழும் கிணற்றிலே தள்ளப்பட்டோம் சேலை உடுத்தந்த ஓநாய் ‘விராதி’னால் மூலை முடுக்கெங்கும் கொல்லப்பட்டோம்… ஏழை எமக்கின்று வாழவழிகொடு ஏக இறைவனே கெஞ்சுகிறோம் நாளை விடியுமா..? நாளை…

Read More

பர்மா முஸ்லிம்களுக்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் தூ ஆ பிராத்தனை

கொலைக்களமாகும் பர்மா தேசத்தில் எமது சகோதரர்கள் கருனணயின்றி கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் பெண்கள் என பாகுபாடின்றி கொல்லப்படுகிறார்கள். இது தொடர்பில் இறைவனிடம் மன்றாடுவோம். நாளை ஜும்மா தொழுகையின் பின் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களிலும்” பர்மா நாட்டில் முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இறைவனிடன் மன்றாடுவோம்”எனும்கருப்பொருளில் துஆ பிராத்தனையில் ஈடுபடுமாறும் தொழுகையில் குனூத் இனணத்துகொள்ளுமாறும் அவர்களின் நிம்மதி வாழ்வுக்காகவும் பிராத்திப்போம். பணிவுடன். ……… அனைத்து சமூக இயக்கங்கள்.

Read More

ஜனாதிபதிக்கு மனு- ரோஹிங்கியா பரிதவிப்புகள்

ஜனாதிபதி மைத்திரி அவர்களே; அவர்களே என ஆரம்பிப்பதால் இது கடிதமென்று நீங்கள் எண்ணுதல் கூடாது இது ஒரு தேசத்தின் கண்ணீர் பிரதமர் அவர்களும் கவனிக்க வேண்டுகிறேன் இதுவானது ஓர் இனத்தின் வரலாற்று சோகம் தேசபிதாக்களே நீங்கள் மனித நேயத்தை மடியில் சுமந்து வந்திருப்பதாய் அடிக்கடி நான் சந்தோசிப்பேன் ஆறாயிரம் ரூபாவிற்குள் பதவியேற்றது எனது முதல் மகிழ்ச்சியானது முதலில் நான் உங்களை நம்பவில்லை நம்பும்படியாக முந்திய நிலைவரம் இருக்கவில்லை பிறகு பிறகு நம்பிக்கை பிறந்தது தலைவர்களுக்கு குறைவாயிருக்கிற நேயமானது…

Read More

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கற்பழிப்பு குற்றச்சாட்டுடன் வலுவடைந்த ரோஹிங்கியா தாக்குதல்களும்.. இலங்கை முஸ்லிம்கள் சந்தித்து வரும் இனவாத தாக்குதல்களும்

-தில்ஷான் மொஹம்மத்- சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2012/05/28) மியன்மாரில் ஒரு கற்பழிப்பு குற்றச்சாட்டின் பின்னர் பெருன்பான்மை பௌத்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் இனக்கலவரம் உலக செய்திகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. மியன்மார் அரசு ஆதரவுடன் கூடிய ஓர் திட்டமிடப்பட்ட கடுமையான வன்முறை ரோஹிங்கியா மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, பல கிராமங்கள் நிர்மூலமாக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டு, பள்ளிவாசல்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்பட்டு கிட்டத்தட்ட பத்து இலட்சம் ரோஹிங்கியா…

Read More

2ஆம் வகுப்பில் பயணித்த 52 பேர் கைது

ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணித்த 52 பயணிகளை கைதுசெய்துள்ளதாக ரயில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. 3 ஆம் வகுப்புக்கான பயணச்சீட்டை பெற்றுகொண்டு 2ஆம் வகுப்பில் பயணித்த 52 பயணிகளை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 210ரூபாவை தண்டமாக அறவிட்டுள்ளதாகவும் ரயில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. மருதானை- மாத்தறை மற்றும் பொல்ஹாவலை-கல்கிஸ்ஸ ஆகிய ரயில்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அப்பிரிவு அறிவித்துள்ளது.

Read More