Headlines

கைதிகளுக்கு வீட்டுச் சாப்பாடு.!

பிறக்கவிருக்கும்  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு அவர்களது வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம் மாதம் 13ம்இ 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த இரு நாட்களும் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை கைதிகளுக்கு உறவினர்கள் தரும் உணவை வழங்க முடியும்…

Read More

‘சிறையில் நான் இங்குதான் இருந்தேனா’ (Video)

1971ஆம் ஆண்டு அரசியல் கைதியாக மட்டக்களப்பில்  தான் சிறைவைக்கப்பட்ட சிறைச்சாலை கூண்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (10) பார்வையிட்டார். அது தொடர்பான வீடியோ…

Read More

வற் வரி மறு அறி­வித்தல் வரை நிறுத்­தி­வைப்பு.!

ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் 15 சதவீத­மாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வி­ருந்த பெறு­மதி சேர் வரி மறு அறி­வித்தல் வரை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில், உள்­நாட்டு இறை­வரித் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் கல்­யாணி தஹ­நா­யக்க வெள்­ளிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் இந்த வரி அதி­க­ரிப்பு நிறுத்­தப்­பட்­டுள்ள விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய, மறு அறி­வித்தல் வரை முன்னர் இருந்­தது போன்று 11 சதவீத­மான பெறு­மதி சேர் வரியே நடை­மு­றையில் இருக்கும் என்றும், யாரும் 15 சதவீத­மாக வரியை அறி­விடக் கூடாது…

Read More

இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு சென்றவர், 3 நாட்களின் பின் விபத்தில் வபாத்

-அனா- சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்ற வாகண விபத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை இஸ்தலத்திலயே மரணமடைந்துள்ளார். ஓட்டமாவடி முதலாம் வட்டாரம் ஐ.எம்.எல். ஐஸ்வாடி வீதியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது முஹம்மது பாஸில் (வயது – 28) எனும் இரண்டு வயது குழந்தையின் தந்தையே இவ்வாறு மரணமடைந்தவராவார். மரணமடைந்தவர் வெளிநாட்டுக்கு தொழில் நிமித்தம் கடந்த 23.04.2015ம் திகதி இலங்கையில் இருந்து சென்றுள்ள வேளையில் 26.04.2015ம் திகதி நல்லிறவு…

Read More

ஏழு இந்தியர்களும் தொடர்ந்தும் காவலில்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஏழு இந்தியப் பிரஜைகளையும் தொடர்ந்தும் காவலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் வௌிநாட்டவர்களுக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள் 1075 தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அரச தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் 650 குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விசாரணைகளை நிறைவு…

Read More

“ ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தாடல், சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளது” – நாடாளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மன்னர் காலம்தொட்டு மதிக்கப்பட்டு வந்த ஒவ்வொரு சமூகங்களினதும் தனித்தனி கலாசாரங்கள், மரபுரிமைகள், வழக்காறுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற பரவலான கருத்தாடல்களும் சொற்பிரயோகங்களும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக அமையாமல் இருக்கும் வகையில், புதிய அரசின் செயற்பாடுகளும் கொள்கை அமுலாக்கல்களும் அமைய வேண்டுமென அவர் மேலும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “…

Read More

தலைவர் ரிஷாட்டின் நிதியுதவியில் புத்தளம் ஸாஹிராவுக்கு ஸ்மார்ட் TV வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் 5ஆம் வட்டார அமைப்பாளர் M.M.M.முர்ஷித்தின் வேண்டுகோளின் பேரில், புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு ஸ்மார்ட் TV (HD) ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. அமைப்பாளர் M.M.M.முர்ஷித்தினால், பாடசாலை அதிபர் S.R.M.M.முஹ்ஸி அவர்களிடம் ஸ்மார்ட் TV கையளிக்கப்பட்டது. இதன்போது, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் இஹ்திஸாம் மற்றும் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவர் அல் ஹாஜ் இஷாக் ரஹ்மான் நிதி ஒதுக்கீட்டில் பாதைகள் புனரமைப்பு

கொல்லன்குட்டிகம மக்களின்  பாதைகள் சேதமடைந்து மிகவும் சிரமப்பட்டு வந்த நீண்டகால பிரச்சினையை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவரும் அனுராதபுர மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மான் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.

Read More

அனைத்து முன்பள்ளிகளையும் மூடத் தீர்மானம்

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு கிழக்குமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முசலி பிரதேச சபைக்குட்பட்ட அலைக்கட்டு மற்றும் பொற்கேணி கிராமத்திற்கான அபிவிருத்தி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் மீள்குடியேற்ற துரித செயலணியின் இணைத்தலைவரும்  அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முசலி பிரதேச சபை அலைக்கட்டு மற்றும் பொற்கேணி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஸாஹிரா பாடசாலைக்கான புதிய கட்டடம் பொற்கேணி கிராமத்திற்கான மைதானம் மற்றும் பொற்கேணி பெரிய ஜும்மா பள்ளிவாசலுக்கான சுற்று மதில் போன்றவை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும்…

Read More

திஹாரிக்கு புதிய ஆரம்பப் பாடசாலை – நிதி திரட்டும் நிகழ்ச்சித் திட்டம்

– ஸப்ரான் .எம். மன்சூர் – திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு, முதற்கட்டமாக காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நேற்று (07) இரவு இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திஹாரிய கிளைத் தலைவரும், “புதிய திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை” எனும் செயத்திட்டத்தின் தலைவருமான அல்-ஹாஜ் அம்ஜத் மௌலவியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வளவாலர்களாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின்…

Read More

‘சிறுபான்மை சமூகத்தின் தயவின்றி ஆட்சியமைக்க முஸ்தீபு; வாக்குகளை செல்லாக்காசாக்க இடமளிக்க வேண்டாம்’ – அக்கரைப்பற்றில் ரிஷாட்!

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவின்றி அரசாங்கத்தை உருவாக்கி, அதன்மூலம் சிறுபான்மை மக்களை மலினப்படுத்தும் பேரினவாதிகளின் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நமது மக்களின் வாக்குகளை செல்லாக்காசாக்கும் சதி முயற்சிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஹனீபா மதனி தலைமையில், அக்கரைப்பற்றில் நேற்று மாலை (18) இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் நிந்தவூர்…

Read More