Headlines

கண்­ணி­வெடி அகற்றும் திட்­டத்­திற்கு ஜப்பான் நிதி­

ஜப்­பானின் கீழ்­மட்ட மனித பாது­காப்புத் திட்­டத்­திற்­கான நன்­கொடை உதவி வழங்கும் பொருட்டு வட­ப­கு­தியில் கண்­ணி­வெடி அகற்றும் வேலைத்­திட்­டத்­திற்கு ஜப்பான் அரசு 801,311 அமெ­ரிக்க டொலர்­களை (108 மில்­லியன் ரூபா) வழங்­கி­யுள்­ளது. நன்­கொடை ஒப்­பந்தம் ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுக­நும மற்றும் HALO Trust நிறு­வ­னத்தின் திட்ட முகா­மை­யாளர் டமியன் ஒபிரைன் ஆகிய இரு­வரும் கொழும்­பி­லுள்ள ஜப்­பா­னிய தூது­வ­ரா­ல­யத்தில் நேற்று கைச்­சாத்­திட்­டனர். இலங்­கையின் வட­ப­கு­தியில் கண்­ணி­வெடி அகற்றும் திட்டம் HALO Trust நிறு­வ­னத்தால் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. கண்­ணி­வெ­டியால் பாதிப்­ப­டைந்த பிர­தே­சங்­களை…

Read More

‘முள்ளிக்குளக் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் கையளிக்கப்படவில்லை’ அமைச்சர் ரிஷாட்டிடம் கிராம மக்கள்  அங்கலாய்ப்பு

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார் முள்ளிக்குள மக்களின் பூர்வீகக் கிராமம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அந்த மக்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு நடைபெறுவதாக முள்ளிக்குள கிராம மக்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் எடுத்துரைத்தனர்.  முள்ளிக்குளக் கிராம மக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிளை நிர்வாகிகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அந்த பிர தேசத்தில் தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு குறைபாடுகள் பற்றி எடுத்துரைத்தனர்….

Read More

காடுகளின் பரப்பளவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

இலங்கையில் காடுகளின் பரப்பளவை மேலும் (29 – 32 சதவிதமாக) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அனுராதா ஜயரத்ன கூறினார்.

Read More

பழைய ஈழத்தில் புதிய அகதிகள்

(சர்ஜூன் ஜமால்தீன்) வட மாகாண சபைத் தேர்தலில் வட முஸ்லிம்கள் தொடர்பான ஒரு கருத்து நோக்கு வடக்கிற்கான மாகாண சபைத் தேர்தலை பல சர்வதேச உறுப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துகின்றன. இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் வெற்றிவோம் என்ற நம்பிக்கையிலும் வேறுபட்ட பிராந்திய நலன்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புத் தான் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்து நிலையில் அரசாங்கமும் உள்ளது. இத்தேர்தலில் அரசாங்கமும் அதனை பிரதிநித்துவம் செய்யும்…

Read More

‘நல்லாட்சி அரசை தோற்றுவிப்பதற்கு அமைச்சர் ரிஷாட் வழங்கிய பங்களிப்பினை ஜ.தே.க ஒருபோதும் மறந்துவிடாது’ காவிந்த ஜயவர்தன எம்.பி!

-ஊடகப்பிரிவு- இந்த நல்லாட்ச்சி அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு அமைச்சர் றிசாத்  பதியுதீன் வழங்கிய பங்களிப்பினை ஒரு போதும் ஜக்கிய  தேசிய கட்சி  மறந்துவிடாது என தெரிவித்துள்ள கம்பஹா மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் காவின்த ஜயவர்தன, மறைந்த எனது தந்தை அமைச்சர் ஜயலத் ஜயவர்தன அவர்கள் மக்களுக்கு அபிவிருத்திகளை கொண்டுவர எண்ணிய கனவினை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து நனவாக்குவதற்காக செயற்படப்போகின்றேன் என்றும் கூறினார். மன்னார் மாவட்டத்திற்கு கடந்த வியாழக்கிழமை  வருகைத்தந்த பாராளுமன்ற  உறுப்பினர், மாந்தை மேற்கு பிரதேச…

Read More

மரக்கறி விலை அதிகரிக்கும் அறிகுறி

எதிர்வரும் நாட்களில் மரக்கறி விலை மேலும் உயரலாம் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. மரக்கறி விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்படாமை காரணமாக கூடிய விலை கொடுத்து உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ரமழானை முன்னிட்டு 113 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 113 மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. இஸ்லாமாபாத்திலிருந்து தங்களுக்கு இது குறித்த உத்தரவு வந்துள்ளதாக கூறிய மலிர் ஜெயில் துணை சூப்பிரண்டு முகமது ஹூசைன் செஹ்டோ , புனித ரமழான் மாதத்தை  முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிக்குமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட  113 மீனவர்களும் லாகூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பின்னர்…

Read More

புத்தளம் அஷ்ரப் பூங்காவுக்கு தலைவர் ரிஷாட்டின் நிதியுதவியில், உபகரணங்கள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம், அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவுக்கு, சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. சிறுவர் பூங்காவின் விளையாட்டு செயற்பாடுகளுக்கான உபகரணங்கள் சேதமடைந்திருந்த நிலையில், அவற்றை சீர்செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பில், கட்சியின் புத்தளம் மாவட்ட செயற்குழுவினால், தலைவர் ரிஷாட் பதியுதீனிடம் எத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தலைவரின் விசேட பணிப்புரையின் கீழ், மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது….

Read More

மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் பிரதமரின் தலைமையிலான மீளாய்வுக்கூட்டத்தில் ஆராய்வு

மன்னார் மாவட்டத்திலுள்ள  சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றல் ,  முள்ளிக்குளம் கிராம மக்களின் பூர்வீக காணிகள் கடற்படையினரால் இன்னும் விடுவிக்கபடாமை மற்றும் வன பரிபாலன திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே  இருந்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை (15) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற “மாவட்ட அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டத்தின்” போதே மக்கள் எதிர் கொள்ளும்  பல்வேறு…

Read More

சர்வதேச ரீதியாக அங்கிகாரம் பெறும் அ.இ.ம.கா வும் அதன் தலைமையும்

ஏ.எச்.எம். பூமுதீன் இலங்கையில் தேசிய அளவில் அகல கால்பதித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு பரிநாமமாக சர்வதேச ரீதியில் கட்சியைப் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கட்சி கால்பதித்துள்ளது. இலங்கையில் – பொதுவாக தமிழ், சிங்கள மக்கள் மத்தியிலும் குறிப்பாக முஸ்லிம் சமுகத்தின் மத்தியிலும் கட்சியும் கடசியின் தேசியத் தலைமையான அமைச்சர் ரிசாத் பதியுதீனும் பெற்று வரும் நல்ல அபிப்ராயத்தை அடுத்தே சர்வதேச ரீதியாக வாழும் இலங்கையர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்து கொள்வதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்துள்ளது….

Read More

அனுமதிப்பத்திரம் இன்றி தொலைபேசிகள் விற்பனைசெய்யத் தடை

அனுமதிப்பத்திரம் இன்றி தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை சுற்றிவளைத்து முற்றுகையிட, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சுற்றிவளைப்பானது அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படும் என, அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை கையடக்கத்தொலைபேசி மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் இடங்களை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்ய வேண்டும் எனவும், சில இடங்கள் அனுமதிப் பத்திரம் இன்றி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு…

Read More