Headlines

வன்கொடுமைத் தடயங்கள் சிறுமியில் காணப்படுகின்றன; சட்ட வைத்திய அறிக்கை

வவுனியா கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் பட்டுள்ளமைக்கான தடயங்கள் இருப்பதாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சிறுவர் நன்னடத்தைப் பிரிவு கொழும்பு தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது. வவுனியா, கனகராயன்குளத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 27ஆம் திகதி தொண்டையில் நீர் இறங்கவில்லை என்று தெரிவித்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். ஆனால் சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் அக்கிரா மத்தை சேர்ந்த மாதர்சங்கத்தினர்,…

Read More

504 கோடி ரூபா நட்டத்தில் தபால் திணைக்களம்

கடந்த வருடம் தபால் திணைக்களமானது 504 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்திற்கான தபால் திணைக்களத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை 2014ஆம் வருடம் 298 கோடி ரூபா நட்டமும்,கடந்த வருடம் 504 கோடி ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திறமையற்ற நிர்வாகமே இந்த நட்டத்திற்கு காரணம் என்றும், தபால் திணைக்களத்தை கட்டியெழுப்ப நல்லாட்சி உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய திறமையான…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”

15 வது வேலைத்திட்டம் கிண்ணியா கற்குழி பிரதேசத்தில் புதிதாக மைதானம் உருவாக்கம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், சூரங்கள் கற்குழி பிரதேச இளைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிண்ணியா கற்குழி பிரதேசத்தில் புதிதாக மைதானம் உருவாக்கி அதனை செப்பனிடும்  வேலைத்திட்டம் அப்துல்லா மஹ்ரூப் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 16 வது வேலைத்திட்டம் பைசல் நகர் ஸம் ஸம் வீதி. அத்துடன்,…

Read More

என்னால் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் பின்னணியில் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பங்களிப்பு உள்ளது

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்- என்னால் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் பின்னணியில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பங்களிப்பு உள்ளது என தெரிவித்துள்ள வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம்..றியாஸ் நான் மாகாண சபையின் உறுப்பினராக தெரிவாவதற்கும் காரணமாக இருந்தவரும் அவரே என்றும் கூறினார். மதுரங்குளி கஜூவத்தை பாடசாலையின் நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்றது அதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தமதுரையில் – அமைச்சர் றிசாத் பதியுதீன்…

Read More

பாடசாலை வகுப்பறை நிர்மாணப்பணிக்காக நிதி ஒதுக்கீடு

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் பெற்றோர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தின் இரண்டாம் மாடிக் கட்டடத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த இரண்டாம் மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்து வைத்தார். குறித்த வகுப்பறைக் கட்டட நிர்மாணப்பணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக ஏழு இலட்சம் ரூபாவை…

Read More

பேஸ்புக் பதிவால் பத்திரிகையாளர் அடித்துக்கொலை

ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து மீதான மோகம் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அடிக்கடி கலவரம் ஏற்படுவதும், ரசிகர்கள் அடித்துக்கொண்டு இறப்பதும் வாடிக்கைதான். இதன் தொடர்ச்சியாக தற்போது பத்திரிகையாளர் ஒருவர் கால்பந்து ரசிகரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்து தனி நாடான அஸர்பைஜான் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் அசிம் அல்ஜியேவ். இவர் கால்பந்து போட்டியின் போது பத்திரிகையாளரை நோக்கி தவறான சைகை செய்த, ஹபாலா என்ற கால்பந்து கிளப்பின் வீரரான ஜாவித் ஹூசேனேவ்வை பேஸ்புக்கில் கடுமையாக…

Read More

இலங்கையை அச்சுறுத்திய வைரஸ்!

இந்தியாவுக்கு அண்மையில் யாத்திரை மேற்கொண்டு நாடு திருபிய நிலையில் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர். இவர்களது உயிரிழப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அச்ச உணர்வுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3 N2 என்ற வைரஸ் தொற்றின் காரணமாகவே உயிரிழந்துள்ளமை ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் வைரஸ் நிபுணர் ஜூட் ஜயமஹா…

Read More

அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக அறிக்கை விட வேண்டாம்- றிப்கான் பதியுதீன் சாட்டை

சிவசக்தி ஆனந்தனுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் சாட்டை தர்மபுரத்தில் குடியிருக்கும் தமிழ் மக்களை அமைச்சர் றிஷாத் பதியுதீன் வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை ஆதாரமற்றதும் ஓர் அப்பட்டமான குற்றச்சாட்டும் ஆகும்.   வடக்கில் தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி உழைத்து வரும் அமைச்சர் றிஷாட்டின் பணிகளைப் பொறுக்கமாட்டாத இனவாத சக்திகள் அவர்மீது காழ்ப்புணர்வான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.   அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக தவறான…

Read More

முன்பள்ளி கல்வியை இலவசமாக வழங்க திட்டம்!

இலங்கையில் முன்பள்ளிக் கல்வியை இலவசமாக வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமென கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலேசியாவின் புத்ரஜாயா நகரில் ஆசிய பசுபிக பிராந்திய நாடுகளுக்கான முன்பிள்ளை பருவத்தினர் பராமரிப்பு மற்றும் கல்விக்கான கொள்கை வடிவமைப்புக்கான (Asia – Pacific Regional Policy Forum on Early Childhood Care and Education 2016 )  மாநாட்டில்  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் இலங்கை சார்பில் கலந்துக் கொண்டார். மலேசியா கல்வி அமைச்சரின் தலைமையில்…

Read More

மஹிந்தவை புகழ்கின்றார் மைத்திரி

பத்து வருடங்களாக அரச அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே தற்போது எம்.பி. பதவியை ஏற்று சாதாரணமாக இருக்கிறார். அவ்வாறான நிலையில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுகளை ஏற்பதில் என்ன பிரச்சினை உள்ளது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார். இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்  மேலும் தெரிவிக்கையில், அமைச்சுப்…

Read More

பள்ளிவாசலுக்கருகில் பன்றி முட்கள்

அக்குறணை பிரதேசத்திலுள்ள அளவத்துகொடை மல்கம்மந்தெனிய ஜூம்மா பள்ளிவாசலுக்கருகில் பன்றி முட்களை இனந்தெரியாதோர் வீசிச்சென்றுள்ளதாக அளவத்துகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாகவும் சத்தம்கேட்டு அயலிலுள்ள ஒருவர் வந்து பார்த்த போது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றவரின் ஒருவரது கையில் வாள் ஒன்று இருந்ததாகவும் வெளியே வந்தவரை வாளைக்காட்டி மிரட்டியதாகவும் குறித்த பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நள்ளிரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சற்று விழிப்பாக இருந்த நிலையில், மீண்டும்…

Read More

மனிதனின் கருவறை இரகசியங்கள் (படங்கள் இணைப்பு)

ஸ்வீடன் நாட்டு புகைப்பட கலைஞர் லேனர்ட் நில்சன் தன் 12 ஆண்டுகளை அர்ப்பணித்து குழந்தை கருவுறல் முதல் பிறப்பின் முன் நிலை வரை கருவறையில் பல நுண்ணிய புகைப்பட கருவிகள் கொண்டு நேரடியாக கருவறையில் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். இவரின் கருவறை புகைப்படம் 1965 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் புகைப்படங்கள்

Read More