மஹிந்த களமிறங்கினால் சு.க. தோல்வி அடையும்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தோற்றுப்போகும். தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் மஹிந்தவுக்குக் கிடைக்காது. பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை திரட்டிக் கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் தெரிவித்தாவது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை…
