Headlines

பேலியகொடையில் ஆர்ப்பாட்டம்

களனி – பியகம வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வெள்ள நிவாரணத்தை வழங்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு மரியாதை செலுத்திய முதல் பிரதமர் மோடி

இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு மரியாதையை செலுத்திய முதல் இந்திய அரசாங்க தலைவராக மோடி கருதப்படுகிறார். 2008ஆம் ஆண்டில் சார்க் மாநாட்டுக்காக இலங்கை வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், இந்த தூபிக்கு விஜயம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இராணுவ முறைப்படி மோடி, சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் தூபிக்கு சென்று மலர்மாலை வைத்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் அமைதியான நின்று உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 1987ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு…

Read More

உலகளாவிய தானிய கூட்டுறவு சங்கத்தின் மாநாடு இன்று அங்குரார்ப்பணம்!

-ஊடகப்பிரிவு- இந்த ஆண்டுக்கான உலகளாவிய தானிய கூட்டுறவு சங்கத்தின் மூன்று நாள் மாநாடு இன்று (08) கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்று இந்த மாநாட்டை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 40 நாடுகளைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.  

Read More

ஐ.தே.க 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு: வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்குமாறு வெளிநாட்டு தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. கொழும்பு கெம்பல் மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உள்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு இராஜதந்திரிகள் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என…

Read More

துறைசார் பட்டதாரியாக வரவிரும்புவோருக்கான இலவச கருத்தரங்கு காத்தான்குடி அல்மனாரில்…

அல் மனார் ஊடகப்பிரிவு தேசிய தொழிற் தகைமை ஊடாக தகவல் தொழில்நுட்பத்துறையில் இளைஞர் விவகார மற்றும் திறனபிவிருத்தி அமைச்சின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றுக்கு சென்று துறைசார் பட்டதாரியாக வரவிரும்புவோருக்கான இலவச கருத்தரங்கொன்று எதிர்வரும் 15.10.2014 புதன் கிழமை மாலை 4:00 மணிக்கு அல் மனார், அர் ராஷித் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.  இம்முறை க.பொ.த. உயர் தரப்பரீட்சை எழுதியவர்களும், தகவல் தொழில் நுட்பத்துறையில் பல்கலைக்கழகம் செல்லவிருப்பவர்களும் இக்கருத்தரங்கில் பங்கு கொள்ள முடியும். மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் நூறு மாணவர்களை…

Read More

தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விஷேட நிதியொதுக்கீட்டில், முல்லைத்தீவு, தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (12) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், வடமாகாண சபை உறுப்பினர் ஜனோபர், பிரதேச சபை தவிசாளர்களான முஜாஹிர், நந்தன் மற்றும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான்…

Read More

பிரியா விடைகொடுக்கும் பயணத்தின்போது!

– அபூ உமர் அன்வாறி, BA மதனி – கால மாற்றங்கள் ஒரு முஸ்லிமின் வாழ்வில் அதிகம் செல்வாக்கு செலுத்தக் கூடியதாக இருக்கிறது. ஒருவர் குளிருக்கும், வெப்பத்துக்கும் தகுதியான ஆடைகள், உணவுகளை தெரிவு செய்வது போல், தனது வாழ்வின் முடிவுக்கான ஆயத்தங்களை எப்போதும் சரிவர செய்து கொள்ள வேண்டும். மரணத்துக்கான காரணிகள் வேறுபடலாம், அதை அடைந்தே தீர வேண்டும் என்பது அல்லாஹவின் நியதி. ஆகவே இவ்வாறு செய்யும் போது, அவன் வெற்றியடைகின்றான். காலத்தின் மாற்றத்தை அவன் முன்…

Read More

20 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் குயில்வத்த பகுதியில் லொரி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயங்களுக்கானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். ரொசாலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொரியின் சுக்கான் திடீரென இயங்காத நிலையில் சாரதி கட்டுபாட்டை இழந்து லொரி பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துகுள்ளானதில் சாரதி உட்பட மேலுமொருவராக இரண்டு பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். மேலும், காயங்களுக்குள்ளான இருவரும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த…

Read More

அவசரகால மின்சார முகாமை ஆராய குழு நியமனம்

இலங்கையில் அவசர நிலைமைகளின் போது மின்சாரத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிபுணர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழுவினால் அவசர நிலைமைகளின் போது தடையின்றி மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன கூறினார். அத்துடன் குறித்த அறிக்கையை இந்த மாத நிறைவிற்குள் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வௌ்ளம், மண்சரிவு மற்றும் சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தின் போது…

Read More

அதிநவீன தொழில்நுட்ப துறையில் தெற்காசியாவை விட நாடுகளை விட இலங்கையே உயர்ந்த இடம் – அமைச்சர் ரிஷாட்!!!

கைத்தொழில் மற்றும் வர்த்தகம்இ நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல்இ கூட்டுறவு மேம்பாடுஇ திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரான ரிஷாட் பதியுதீன் தொழிற்பயிற்சித் துறையில் வெற்றிகரமாக தலைமைத்துவத்தினை தாங்கியதற்காக நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம்’என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஓறுகொடவத்தையில் கொரிய-இலங்கை தேசிய தொழில் பயிற்சி நிறுவனத்தின் அங்குரார்ப்பண வைபத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டுஉரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை தெரிவித்தார். இவ் வைபவத்தில் பிரதமர் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன்…

Read More

குடும்பமே படுகொலை: குடும்ப தலைவன் கைது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக்கதின் பேரின் அக்குடும்பத்தின் தலைவனை கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே…

Read More

நிலைமைகள் தொடர்பில் ஆராய பொலிஸ் மா அதிபர் யாழ் விஜயம்

பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய நேற்று இரவு இவர் யாழ் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை யாழில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் இதுவரை 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புங்குடுத்தீவில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான சந்தேகநபர்களை யாழ் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்த வேளை…

Read More