Headlines

மத்திய வங்கி விவகாரம்! விசாரணை முடிவு!

மத்திய வங்கி முறிக்கொள்வனவில் முறைகேடு தொடர்பிலான நாடாளுமன்ற கோப் குழுவின்விசாரணைகள் நேற்று (8) முடிவடைந்தன. இந்தநிலையில் இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் 13ம் திகதியன்றுநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கோப் குழுவின் தலைவர் சுனில்ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Read More

இன்று மழை பெய்யக்கூடும்

தொடர் உஷ்ணத்திற்கு இன்று முதல் முற்றுப்புள்ளியாக இலங்கையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

Read More

உளுக்காப்பள்ளம் பாடசாலைக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் நிதியுதவியில் சிற்றூண்டிச்சாலை!

புத்தளம், உளுக்காப்பள்ளம் பாடசாலை நிர்வாகத்தினரினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கரம்பை வட்டார அமைப்பாளர் தன்வீரினதும் வேண்டுகோளுக்கிணங்க, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் உளுக்காப்பள்ளம் பாடசாலைக்கு அண்மையில் (07) விஜயம் செய்திருந்தார். இதன்போது, பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில், பாடசாலை நிர்வாகத்தினர் உறுப்பினர் ஆஷிக்கிடம் முன்வைத்தனர். அந்தவகையில், விஷேடமாக பெண்களுக்கென்று ஓர் தனியான சிற்றுண்டிச்சாலையை அமைப்பதற்கான தேவைப்பாடு  காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். அவற்றைக் கேட்டறிந்துகொண்ட உறுப்பினர் ஆஷிக், தனது சொந்த நிதியிலிருந்து சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கான வேலையை…

Read More

கடன் பளுவில் தத்தளிக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

23வருடங்களுக்கு முன்னர் விதை உருளைக்கிழங்கை கடனாகப் பெற்று, இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது தவிக்கும்  உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் 73பேருக்கு  நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட உருளைக்கிழங்கு வியாபாரிகளுக்கு உறுதியளித்தார். ஊவா மாகாணத்தைச் சேர்ந்த  உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து உருளைக்கிழங்கு உற்பத்தியால், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டங்கள் மற்றும் பாதிப்புக்கள் குறித்து விபரித்தனர். கெபட்டிபொல  உடபலாத்த பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தில்;…

Read More

அமெரிக்காவின் உதவிச் செயலாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் திரு.டொம் மாலினோவ்ஸ்கிக்கும், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முந்தினம் (13) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி மற்றும் திரு. மாலினோவ்ஸ்கி ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான உதவிச் செயலாளருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் நினைவுச்சின்னமொன்றும்…

Read More

இந்த வெள்ளிக்கிழமையை மியன்மாருக்கான குரலாக பிரகடனப்படுத்துவோம்.

இஸ்ஸதீன் றிழ்வான் இன்வாத பெளத்த பிக்குகளால் பரிதாவமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பற்றி மனித உரிமைகள் அமைப்புக்கள் இதுவரை சரியான கண்டனம் ஒன்றையும் வெளிடாத நிலையில் நாம் அமைதிகாப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிர்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள் . மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள்…

Read More

கட்டணத்தைக் குறைத்தால் இலவச மின்சாரம்

மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ‘மின்சாரப் பரிசு’ வழங்கும் வேலைத்திட்டமொன்றை, இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ‘கடந்த ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டவர்களும் இந்த போட்டியில் உள்ளடக்கப்படுவார்கள்’ என்று கூறினார். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் வாடிக்கையாளர்களுக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Read More

ஹொரவபொதான, மாவத்தாவ ரப்பானியயா ஜும்மாப் பள்ளிவாசல் மற்றும் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டிடம்

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களினால் ஹொரவபொதான, மாவத்தாவ ரப்பானிய ஜும்மாப் பள்ளி மற்றும் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

Read More

உலகின் ஆளுமை மிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு

உலகின் ஆளுமை மிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் தெரிவு அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு.

Read More

‘எஞ்சியுள்ள காலங்களில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

எஞ்சியுள்ள காலங்களில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம் என கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பிரதேச மீனவர் சங்கத்தின் பலநோக்கு கட்டடத்திற்கு அடிக்கல் நடும் விழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! பெரும்பான்மை சமூகத்தினரிடத்தில் தேடல் முயற்சி அதிகமாக உள்ளது. தமது சொந்தக் கையை நம்பும் தைரியம்…

Read More

டெங்கு ஒழிப்பும், மக்கள் சேவையும்

ஷப்ரான் முஹம்மட் வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை பகுதிகளில் கடந்த 22.12.2014ம் திகதி தொடக்கம் 18 நாட்களாக சிறுவர்கள் உட்டபட முதியோர் வரை 23 பேர் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்தேர்ச்சியாக வாழைச்சேனை மற்றும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக வாழைச்சேனை பொது வைத்திய அதிகாரி அலுவலகமும், மட்டக்களப்பு சுகாதார டெங்கு தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் வகையிலும், டெங்கு தடுப்பு தொடர்பான அனைத்து செயற்பாடுகளின்…

Read More