Headlines

12 வயதுக்கு குறைந்த சிறுவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது




நீதிமன்றத்தில்,சிறுவரை முன்னிலைப்படுத்துவதற்கான வயதெல்லையை எட்டு வயதிலிருந்து 12 வயதாக அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

சர்வதேச ரீதியில் அங்கPகரிக்கப்பட்ட சட்டத்துக்கு  அமைய புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில்,எந்தவொரு சட்ட நடவடிக்கைக்காகவும் 12 வயதுக்கு குறைந்த சிறுவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற தவறுகளை திட்டமிடப்பட்ட குற்றங்களாக கருத முடியாது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தவறு செய்யும் சிறுவரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைப்பதே மிகவும் சிறந்ததென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *