செங்கல் உற்பத்தியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!
-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு தொழில் ரீதியாக மாற்றத்தை கொண்டு வருவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை பகுதியில், செங்கல் உற்பத்தியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், செங்கல் உற்பத்தியில் ஈடுபடும்…
இத்தேர்தலுக்குப் பின்னர் வேறுபட்ட அரசியல் நெருக்கடிகைளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம் – இஸ்மாயில்
எம்.சி.அன்சார் ஆண்டாண்டு காலமாக அரசியல் செய்துவரும் எமது முஸ்லிம் தலைமைகள் சமூக, பொருளாதார நலனில் அக்கறைகொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் குறைகளை நிவர்த்திப்பதற்கான பல வாய்ப்புக்களை அவர்கள் கொண்டிருந்தபோதிலும் அதன் பலனை மக்கள் அனுபவிக்கவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நாம் பொதுத்தேர்தல் ஒன்றினை எதிர் நோக்கியுள்ளோம். இத்தேர்தல் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இத்தேர்தலுக்குப் பின்னர் வேறுபட்ட அரசியல் நெருக்கடிகைளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். எதிர்வருகின்ற தேர்தலிலே முஸ்லிம் மக்களுக்காக எப்போதும் தைரியமாக குரல்கொடுக்கும் அகில இலங்கை…
அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கிறது
சர்வதேச அழுத்தங்கள் மற்றும் உள்ளக அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் எமது அரசாங்கம் இன்று மிகச்சரியான பாதையில் பயணித்து வருகின்றது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். மஹிந்தவிடம் இருந்து நாட்டை மீட்டபோதே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் சர்வதேச கொள்கைகள் மற்றும் உடன்படிக்கைகள் தொடர்பில் மஹிந்த அணியினர் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில் அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்….
மஹிந்தானந்தவின் மகன் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் கனிஷ்க பண்டார பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் தயா கமகே கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மனுச நாணயக்கார பிரதியமைச்சரானார்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியும், சபாநாயகரும் பங்களித்தார்கள் – ரணில்
நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியுள்ளார். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக வரலாற்று முக்கியமான நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் 5 பேர் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். இதில் சம்பந்தன் எம்.பி தவிர நாம் மூவர் நிறைவேற்று…
பலஸ்தீன விவகாரத்தில் ஆதரவளிப்பதற்காக துருக்கி தலைவர்களுக்கு நன்றி
அனைத்து முஸ்லிம் சக்திகளினதும் ஆதாரமாக துருக்கி இருப்பதாக பாராட்டி இருக்கும் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் பலஸ்தீன விவகாரத்தில் ஆதரவளிப்பதற்காக துருக்கி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “ஸ்திரமான, ஜனநாயகமான மற்றும் அபிவிருத்தி அடைந்த ஒரு துருக்கி அனைத்து முஸ்லிம் சக்திக்கான ஆதாராமாக உள்ளது” என்று துருக்கியின் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மாநாட்டில் பங்கேற்று மிஷால் குறிப்பிட்டார். “வலுவான துருக்கி என்பது வலுவான ஜரூசலம், வலுவான ஒரு பலஸ்தீனமாகும்” என்று குறிப்பிட்ட அவர் பலஸ்தீன,…
திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை சந்தித்த அப்துல்லா மஹ்ரூப் எம் .பி
திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சிமன்ற முன்னால் தவிசாளர்கள் உறுப்பினர்களுக்கும் , எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தளில் போட்டியிட எதிர்பார்க்கும் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் , இன்று திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
மாத்தறையில் நடைபெற்ற கூட்டதில் எதிரணி பிரமுகர்கள் ஆற்றிய உரைகள்..!
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாத்றையில் நேற்று பொதுக்கூட்டம் இடம்பெற்றது. பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பலவும் இதன் போது கூடியிருந்தன. இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன வருவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே. நாங்கம் மிகவும் சவாலான தேர்தலுக்கு முகங்கொடுத்தாலும் வெற்றி நிச்சயமே என அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட…
மக்கள் மன்றம் அரசியல் நிகழ்ச்சியில் உங்கள் கேள்விகளை Y.L.S ஹமீடிடம் கேளுங்கள்
ஊடகப்பிரிவு தமிழ் எப்.எம் வானொலியில் நாளை நடைபெறவுள்ள மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை எல் எஸ் ஹமீட் கலந்து கொள்கின்றார். இந்நிகழ்சி நாளை காலை 08-10வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நேயர்களும் தங்களது கேள்விகளை நேரடியாக வை எல் எஸ் ஹமீடிடம் கேட்க முடியும் 107.8 அலைவரிசையில் இவ் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுகின்றது
புதிய வாகனங்களை மூன்று பிரதியமைச்சர்கள் நிராகரிப்பு
அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதியமைச்சர்கள் மூவர், தங்களுக்கு அந்த வாகனங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளனர். பிரதியமைச்சர்களான ரஞ்சன் ராமநாயக்க, பாலித்த தெவரப்பெரும மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரே, தங்களுக்கு புதிய வாகனங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளதுடன், புதிய வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கான நிதியையும் வேண்டாமென நிராகரித்துள்ளனர். தற்போது தன்னிடமுள்ள வாகனம் சிறந்த நிலையில் இருப்பதாகக் கூறியுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,…
