Headlines

இடைக்கால பட்ஜெட் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

புதிய அரசின் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்துவார். பிற்பகல் 1.15 மணிமுதல் 3 மணிவரை வரவுசெலவுத்திட்டம் மீதான உரை இடம்பெறும். . அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு மற்றும் குறைந்தது 10…

Read More

ரமழான் தலைப்பிறை தொடர்பான மாநாடு இன்று

ரமழான் மாதத்தை தீர்மானிக்கும் விஷேட மாநாடு இன்று 17 ஆம் திகதி புதன் கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளியில் இடம் பெறவுள்ளது. இன்றைய தினம் மாலை நேரம் 6.27 மணி முதல் ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்குமாறும் இலங்கையின் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களோடு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளி நிர்வாகம் அனைத்து இலங்கை. முஸ்லிம்களயும் கேட்டுக்கொள்கிறது. தொலைபேசி இலக்கங்கள் – 0112432110 0115234044…

Read More

தொழிலுக்காக சவுதி அரேபியா செல்பவர்களுக்கு புதிய நடைமுறை

தொழில் நிமித்தம் சவுதி செல்லும் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை தொழில்வாய்ப்புக்காக பணியாளர்களுக்கு வீசா வழங்கும் முறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு சவுதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொழில்வாய்ப்பிற்கு பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு தொழில்  வழங்குனர்களின் செலவை குறைத்துக்கொள்வதும், பணியாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் இந்த நடவடிக்கைக்கான காரணமென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைமை அந்நாட்டு தொழிற்துறை அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறைமையின் ஊடாக பணியாளர் ஒருவரை அமர்த்துவதற்கு சவுதி குடும்பமொன்று செலவிடும்…

Read More

200 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்ற 15 கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

லங்காபுத்ர அபிவிருத்தி வங்யிலிருந்து 200 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாதுள்ள 15 கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 750 லட்சம், 1000 லட்சம் ரூபா என்ற வகையில் கடன் பெற்ற வர்த்தகர்களில் சிலர் ஒரு தவணைக் காசையாவது செலுத்தாது இருப்பதாக வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடற்றொழில் நடவடிக்கைக்கென கூறி ஒருவர் பெற்ற கடனை கடற்றொழில் நடவடிக்கையில் இடாமல் வேறு…

Read More

குளவித் தாக்குதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையில் அனுமதி

விடுமுறையைக் களிப்பதற்காக நுவரெலியாவுக்குச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகிக் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, நுவரெலியாவுக்கு சென்று விடுதியொன்றில் தங்கியிருந்தார். தனது நண்பர்கள் சிலருடன் விடுதிக்கு முன்பாக இருந்து சனிக்கிழமை மாலை பேசிக்கொண்டிருந்த போதே, விடுதியில் குளவி கூட்டிலிருந்த குளவிகள் திடீரென கலைந்து, கொட்டியுள்ளன.  இதில் காயமடைந்த அந்த எம்.பி  தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

Read More

அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கவில்லை: சீன நிறுவனம்

எந்தவொரு அரசியல்வாதிக்கும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நிதியுதவி வழங்கவில்லை என்று சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த நிறுவனம், சர்வதேச மதிப்புப்பெற்ற தமது நிறுவனத்தை உள்ளுர் ஊடகம் ஒன்று பிழையாக கருதி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் எமது நிறுவனம் தொடர்பில் தவறான எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அத்துடன் முதலீட்டு நாடுகளுக்கு பிழையான சமிஞ்சையை காட்டக்கூடாது. இலங்கையின் அபிவிருத்தி…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிபாரிசில் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலை தரமுயர்வு!

  -ஊடகப்பிரிவு-   முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நற்பிட்டிமுனை அமைப்பாளரும், சி.எம்.முபீத் மற்றும் நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசன் தலைவர் சி.எம்.ஹலீம் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் சிபாரிசில், 38 வருடமாக 1C தரத்தில் இருந்த நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயம் 1AB  தரத்துக்கு உயர்த்தப்பட்டு உயர்தர விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப வகுப்புக்களுக்கான அனுமதி வழங்கப்படுள்ளதுடன், நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா…

Read More

கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்- கர்தினால்

கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித்  தெரிவித்துள்ளார். கொழும்பு பிசோப் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் மற்றும் கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும். இவ்வாறான கட்சிகள் அமைப்புக்கள் எம்மை ஐக்கியப்படுத்த முயற்சிப்பதில்லை. மாறாக எம்மை பிளவடையச் செய்யவே முயற்சிக்கின்றன. நீண்ட கால அடிப்படையில் கடும்போக்குடைய அமைப்புக்கள் மற்றும் இன மதவாத அடிப்படையிலான அரசியல்…

Read More

இலங்கைப் பெண்கள், டுபாயில் உண்ணாவிரதப் போராட்டம்

தமக்கான சம்பள கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி, துபாயிலுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் சிலர் எட்டாவது நாளாகவும் சாஜாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சுமார் 100 இலங்கைப் பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அதிகாரிகளை தெரியப்படுத்தியுள்ள போதிலும், தமக்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனைய நாட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், சம்பள உயர்வு உள்ளிட்ட எவ்வித வசதிகளும் தமக்கு செய்துகொடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். தம்மை மீண்டும் நாட்டிற்கு…

Read More

நண்பன் ஓட்டிவந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன் – பரபர வீடியோ

அதிவேகமாக விரைந்து செல்லும் வாகனங்களால் சாலை விபத்துகள் பெருகிவரும் சவுதி அரேபியாவில் நண்பன் ஓட்டிவந்த கார் மோதி பல அடி தூரத்துக்கு பள்ளி மாணவன் தூக்கி வீசப்படும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சவுதியின் தெற்கேயுள்ள ஜஸான் மாகாணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், அங்குள்ள மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து செல்லும் அந்த மாணவன் சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வேகமாக காரை ஓட்டிவரும் அவனது நண்பன் காரை அவன்மீது மோதிவிடுகிறது. அடிபட்ட வேகத்தில் மாணவன் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு,…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் கந்தளாவில் அபிவிருத்தி பணிகள் அங்குரார்ப்பண நிகழ்வும் திறப்பு விழாவும்..

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திறப்பு விழா நிகழ்வும் அங்குரார்ப்பண நிகழ்வும் இடம் பெற்றுள்ளது குறித்த அபிவிருத்தி நிகழ்வு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று (30) இடம் பெற்றன. பேராறு இரண்டாம் கொலனி முகைதீன் ஜூம்ஆ பள்ளியின் சுற்று மதில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது அஸ்சபா பாடசாலை வீதி சுமார் பத்து…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா!

மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி (அமிஸ்டீன்) தனது தவிசாளர் பதவியை நேற்று முன்தினம் 20ஆம் திகதி இராஜினாமாச் செய்துள்ளார். கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், இரண்டு வருடங்களின் பின்னர், அதே கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.எம்.நெளபருக்கு தவிசாளர் பதவியை வழங்குவதாக, ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய, தவிசாளர் பதவியை ஐ.ரீ.அஸ்மி இராஜினாமாச்  செய்துள்ளதோடு, உத்தியோகபூர்வமாக ஏ.எம்.நெளபர் தெரிவு…

Read More