ஞானசாரதோற்கடிக்கப்பட்டது ஜனநாயகத்தின் சிறந்த வெளிப்பாடு – வாசுதேவ
இராணுவ ரீதியான சிந்தனைகளைக்கொண்ட சரத் பொன்சேகாவும், இனவாத சிந்தனை கொண்ட ஞானசார தேரரும் தோற்கடிக்கப்பட்டுள்ளமையானது சிறந்த ஜனநாயகத்தின் வெளிப்பாடாகும் என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், புதிய இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக்கட்சி எடுத்த முடிவு தவறானது. சுதந்திரக் கட்சிகக்கு வாக்களித்த மக்களின் மனோநிலை மற்றும்…
