சங்காவுக்கு கோலி கடிதம்!
சங்ககாரா விடை பெறுவது குறித்து விராட் கோலி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘அன்பு சங்கக்காரா, அற்புதமான மனிதரான உங்களுடன் கிடைத்த அறிமுகத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் சம காலத்தில் எனக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்தது எனது அதிருஷ்டம்தான். கிரிக்கெட்டில் நீங்கள் படைத்துள்ள சாதனைகளை விளக்க வார்த்தைகளே கிடையாது.பல இளம் வீரர்களுக்கு ஊந்துகோலாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ள நீங்கள் கிரிக்கெட்டுக்காக அளித்த பங்களிப்புக்காக நன்றி. நீங்களும் உங்களது குடும்பமும் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்….
