Headlines

மன்னார், அகத்திமுறிப்பு, மர்ஹபா பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டு நிகழ்வு!

மன்னார், அகத்திமுறிப்பு, அளக்கட்டு, மர்ஹபா பாலர் பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வு இன்று (19) மாலை, பள்ளிபரிபாலன சபைத் தலைவர் சியாவுத்தீன் மௌலவி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்து பெறுமதியான பரிசில்களையும் வழங்கிவைத்தார். இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், மன்னார் வலய பாலர் பாடசாலைகளுக்கான…

Read More

ரிஷாத் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யென தெரிவுக்குழுவில் அம்பலம்

முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தெரிவுக்குழு விசாரணைகள் மூலம் பொய்ப்பிப்பு. இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கினார்.  அவர் வழங்கிய சாட்சியம் வருமாறு, கேள்வி : ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தினர். இக்காலப் பகுதியில் விசாரணை நடவடிக்கைகளுக்கு எவரேனும் அழுத்தங்களை…

Read More

எனது ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பல்ல: மஹிந்த ராஜபக்ஷ

எனது ஆட்சியில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின் நண்பன் என்று கூறியுள்ள அவர், பொய் பிரசாரங்களினாலே முஸ்லிம்கள் தன்னைவிட்டு தூரமானதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Read More

ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும் – அப்பாஸ்

ஐ.நா. பொது சபை கூட்டத் தொடரில் பேசிய பாலஸ்தீனம் அதிபர் அப்பாஸ், போரின் போது தங்களிடம் இருந்து ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும் என்று வலியுறுத்தினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று கூட்டத் தொடரில் பேசிய பாலஸ்தீனம் அதிபர் மஹ்மவுத் அப்பாஸ், போரின் போதுதங்களிடம் இருந்து எடுத்துக் கொண்ட நிலங்களை இஸ்ரேல்…

Read More

நாளை மறுநாள் பதவி ஏற்கும் ஜெயலலிதா: பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ள நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழ்கள் பொதுத்துறையால் தயார் செய்யப்பட்டு வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை 7 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக…

Read More

மோடிக்கு நன்றி தெரிவித்து டக்ளஸ் கடிதம்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்தி அதை அடித்தளமாக கொண்டு நிரந்தர அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என்று தம்மைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதை ஈ.பி.டி.பி வரவேற்றுள்ளது. இது குறித்து நன்றி தெரிவித்து நரேந்திர மோடிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட…

Read More

வைத்திய மாணவர் 11 பேருக்கு நோட்டீஸ்

மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை  ஊடாக ஜனாதிபதி செயலகம் வரையிலும் பேரணி நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படும் வைத்திய மாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளர்கள் 11 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்புமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேயே நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தை மீறி இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஒன்றுதிரட்டி மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகளை திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் நீதிமன்றத்துக்கு…

Read More

இராணுவ வீரரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக சந்தேகம்

அரலகன்வில, மீவத்புர பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபரொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார்  சந்தேகிக்கின்றனர். இராணுவ வீரரான ரணதுங்ககே சுகத் குமார (வயது 28) என்பவரே  காணாமல் போயுள்ளார். மூன்று நபர்களுடன் மாகாவலி கங்கையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இராணுவ வீரரை, முதலை இழுத்துச் சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அவர்  குறித்து எந்த வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன இராணுவ வீரரை…

Read More

வெளிநாட்டு வேலை – பெருமையா? கொடுமையா?

– ஷான் – பையன் என்ன பண்றாரு…? ‘பயணத்துல இருக்காரு’ – என வெளிநாட்டு வேலையை பற்றி பெருமையாக சொல்ல கேட்கிறோம் . இன்னும் பலர் ‘camp -dubai’ என்று போட்டு மாப்பிள்ளையின் வேலை பற்றி திருமண அழைப்பிதழில் பெருமையாகப் போடுவதை காணலாம். இப்படிப்பட்ட வெளிநாட்டு வேலைக்காக, படிப்புக்காக ஆயிரக்கணக்கான  இளைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ‘சொல்வது ஒன்று, செய்வது ஒன்று’ – பொதுவாக அரசியல்வாதிகளுக்குத்தான் இந்த கூற்று பொருத்தமாக இருந்தது. இப்போது வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தி வருகிறது. வேலைக்கு…

Read More

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாதின் பலமும், வெற்றிக்கான சாதகமும்..!

அ.இ.ம.காவில் தேர்தல் கேட்கும் ஒவ்வொருவரும் வித்தியாசமான பலம் கொண்டவர்கள். இதில் ஏனைய வேட்பாளர்களை விட மு.மா.ச.உறுப்பினர் ஜவாதிடமுள்ள பலம் என்னவென சிந்திக்கும் போது, மாகாண ரீதியான அதிகாரமொன்றில் இரு தடவை இருந்தவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மாத்திரமே! இவர் 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் மாகாண சபை உறுப்பினராக தெரிவாகியிருந்தார். 2012ம் ஆண்டு இடம் பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தாலும், கட்சி மாறியதால் ஏற்பட்ட ஜெமீலின்…

Read More

நெல் கொள்வனவு மீண்டும் ஆரம்பம்

நெல் கொள்வனவானது இன்று (18) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நெல் கொள்வனவானது மீண்டும் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஒரு இலட்சத்து 25ஆயிரம் மெட்றிக் தொன் நெல்லினை கொள்வனவு செய்ய எதிர் பார்த்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

“கட்அவுட் ஜனாதிபதியாக மாறியுள்ள மஹிந்த”!– ரணில் கேலி

அண்மையில் பாணந்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அநேக பகுதிகளிலும் கட்அவுட்கள் அடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஜனாதிபதி கட்அவுட் ஜனாதிபதியாக மாற்றமடைந்துள்ளார். நாடு முழுதிலும் கட்அவுட் அடித்து மக்களின் பணமே விரயமாக்கப்படுகின்றது. இந்த கட்அவுட் அடிக்கும் நபர்கள் கூட ஜனாதிபதி மஹிந்தவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. எந்த நாளும் மக்களை ஏமாற்ற முடியாது. இந்த அரசாங்கம் ஓர் கொள்ளைக் கூட்டம் என்பதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். நாடு சீரழிந்துள்ளது. பொலிஸார் சுயாதீனமான முறையில் கடமைகளை…

Read More