Headlines

பறிபோகிறது 48 தூதுவர்களின் பதவி

அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற 48 வெளிநாட்டு தூதுவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் நியமனம் பெற்ற இந்த தூதுவர்கள் டயஸ்போரா அமைப்புக்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் நியமனம் பெற்றவர்கள் டயஸ்போரா செயற்பாட்டாளர்களை இனங்காண முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அமைச்சர்களின் புதல்வர்கள் அல்லது புதல்விகளும் உள்ளடங்குகிறார்கள். இதனால் இவர்கள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கையில்…

Read More

“மொட்டுக் கட்சியில் கோடாரிக் காம்புகள் களமிறக்கப்பட்டுள்ளார்கள்” – முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

தெற்கில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கி வாக்குகளுக்காக தேர்தல் காலங்களில் செயற்படுகிறார்கள். இதன் ஊடாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற முயற்சிக்கிறார்கள் என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை  வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப்  தெரிவித்தார். கிண்ணியா, மாஞ்சோலை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை கொரோனா என்ற போர்வையில் எரித்தார்கள். உலக சுகாதார ஸ்தாபனம் சொல்கின்ற போதும்,…

Read More

மாவனல்லை ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்…

மாவனல்லை ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவும் அதனையொட்டி நடைபெறும் கல்வி கண்காட்சி மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாடசாலை அதிபர் எம் ஏ எம் அக்ரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், ஜம்மியதுல் உலமாவின் பிரதிச் செயலாளர் எம் எஸ் எம் தாஸிம் மௌலவி உட்பட பலர் கலந்து கொண்டனர். -ஊடகப்பிரிவு-

Read More

இலங்கையை வந்தடைந்தார் நிஷா பிஸ்வால்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று  அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

Read More

தேசிய வர்த்தக விருது விழா

தேசிய வர்த்தகதுறையில் விசேட திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கான  விருது வழங்கும் விழா நவம்பர் மாதம் 30ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. விருதுகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. விவசாயம், பெருந்தோட்டைத்துறை, வங்கி கட்டட நிர்மாணத்துறை, காப்புறுதி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகக்கு விருதுகள் வழங்கப்படவிருப்பதாக தேசிய வர்த்தக சபை தெரிவித்துள்ளது

Read More

இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவை கைது செய்ய ஸ்பைன் நீதிமன்றம் உத்தரவு …!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை கைது செய்யுமாறு, ஸ்பானிஷ் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது! இந்தத் தகவலை எந்தவொரு மேற்கத்திய ஊடகமும் தெரிவிக்கவில்லை!  2010 ம் ஆண்டு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, காஸா நோக்கி சென்று கொண்டிருந்த Freedom Flotilla என்ற கப்பலை வழிமறித்த, இஸ்ரேலிய படையினர் அதன் மீது தாக்குதல் நடாத்தினார்கள். அது தொடர்பான வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி Jose de la Mata, பெஞ்சமின் நெத்தன்யாகு உட்பட ஆறு இஸ்ரேலிய அரச…

Read More

பொதுபல சேனாவுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து சூடான பதில்..!

(விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி) சரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாகும் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதுதவிர இங்குள்ள சகல பீடங்களும் சரீஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுவதாகவும், இங்கு இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவு, இஸ்லாமிய சிந்தனைக்கும், கலாசாரத்துக்குமான பிரிவு, இஸ்லாமிய சரீஆ சட்டப் பிரிவு, இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி முறைமைப் பிரிவு என்ற பெயர்களில் பல்வேறு பீடங்கள் இயங்குவதாகவும்…

Read More

இணக்கசபை வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, 13 மாவட்டங்களில் இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதன்படி  கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், பதுளை, கண்டி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை, காலி, மொனராகலை, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன் இணக்க சபைகளை வலுவூட்டுவதன் ஊடாக பிரதேச மட்டத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீதி…

Read More

இளைஞர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் நவவி எம்.பி பிரதம அதிதியாகப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இளைஞர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் மதுரங்குளி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது 5,00,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் நவவி எம்.பியின் விசேட நிதியிலிருந்து இளைஞர்களின் விளையாட்டுத்திறமையினை ஊக்குவிக்கும் முகமாக வழங்கி வைக்கப்பட்டமையுடன், போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசில்களும், பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  …

Read More

வாக்காளர் இடாப்பில் திருத்தம்

2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தேர்தல்கள் அதிகாரிகளாக செயற்படும், கிராம சேவையாளர்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். 25 மாவட்ட தேர்தல்கள் செயலகங்களையும் மையப்படுத்தி இந்த தெளிவூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் இடாப்புகளை மாவட்ட செயலகங்களிற்கு அனுப்பி…

Read More

போக்குவரத்து சபையால் போதுமான அளவு வசதி பயணிகளுக்கு வழங்கல்

இலங்கை போக்குவரத்து சபையால் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றமையால் அவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. மேலும், சொந்த ஊர்களுக்கு பிரதான நகரங்களில் இருந்து செல்லும் பயணிகளின் நன்மை கருதி தூரசேவை பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Read More