Headlines

நாட்டைப் பாதுகாப்பதற்காகவே பொது எதிரணியாக ஒன்றிணைந்துள்ளோம்: சோபித தேரர்

நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காகவே பொது எதிரணியாக எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்துள்ளதாக சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும், கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டில் பயங்கரவாதத்தினை வளர்க்கவோ, இனவாதத்தினை தூண்டவோ சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கவில்லை. அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தினை மாற்றியமைக்கவே நாம் கைகோர்த்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பொது எதிரணி தனி நிபந்தனைகளுடன் உடன்படிக்கை செய்துள்ளதாக பொது பல சேனா…

Read More

காங்கேசன்துறையில் கைத்தொழில் பேட்டை!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பகுதியில் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்கீழ் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

குச்சவெளி பிரதேசத்தில் சமுர்த்தி உரித்து படிவங்கள் வழங்கும் நிகழ்வு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமுர்த்தி உரித்துப் படிவம் வழங்கும் வைபவம் குச்சவெளி  பிரதேச செயலாளர் பிரிவிலும் வழங்கி வைக்கப்பட்டன. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துப் படிவங்களை இன்று (02) குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார். குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன்…

Read More

காணி விடுவிப்பு செய்வது பற்றி ஆராயும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர்…

மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி தொடர்பாக காணி விடுவிப்பு செய்வது பற்றி ஆராயும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர் மீண்டும் எதிர்வரும் இம்மாதம் 9 ஆம்,10 ஆம் திகதிகளில் முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய பிரதேச செயலகப் பிரதேச செயலகங்களுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜனாதிபதியினை ஜூலை மாதம்  சந்தித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகளினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் முசலி பிரதேச மக்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மேற்படி குழு…

Read More

மஹிந்தவின் புதையல் அம்பலம்!

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதயில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் இருந்த பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அலரி மாளிகைக்குள் புதிது புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டமையும் தெரியவந்துள்ளது. புதிய அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று தனது கடமைகளை அலரி மாளிகையில் ஆரம்பித்தார். அதன்பின்னர் மாலையில் தனது கட்சி அமைச்சர்கள்.பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.அதற்கு ஊடவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கலந்துரையாடலின் முடிவில் அலரி மாளிகையைச்…

Read More

பேப்பரில் செல்போன் உருவாக்கி அமெரிக்க பெண் சாதனை!

அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த பெண் ராண்டிஸ் லிசா ராண்டி அல்ட்ஸ்சல். இவர் பேப்பரில் செல்போன் தயாரித்து சாதனை படைத்துள்ளார். இந்த செல்போன் 3 கிரீடிட் கார்டு அளவு பருமன் ஆனது. இது மீண்டும் அழித்து விட்டு தயாரிக்க கூடிய பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செல்போனில் ஒருவர் மறுமுனையில் இருந்து பேசுவதை கேட்க மட்டுமே முடியும். பதிலுக்கு டயல் செய்து பேச முடியாது. இதை 60 நிமிடம் அதாவது ஒரு மணி நேரம் மட்டுமே பேச முடியும். அதன்பின்னர்…

Read More

முல்லைத்தீவு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் உருக்கம்

– ஊடகப்பிரிவு – தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாதெனவும், பெரும்பான்மை இனத்தின் சூழ்ச்சிகளுக்குள் அகப்படக் கூடாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (25) காலை உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஷாத் பதியுதீன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், மஸ்தான் எம்.பி. ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவில் நடைபெற்றபோது அமைச்சர் றிஷாத் தமது ஆதங்கங்களையும், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தினார். இதன்போது அமைச்சர்…

Read More

மூன்றாவது தடவையும் போட்டியிட முடியுமா? உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பிவைப்பு

18வது அரசியலமைப்பு திருத்தத்துக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி அபேட்சகராக போட்டியிட முடியுமா? இரண்டாவது பதவிக் காலத்தில் நான்கு வருடத்தின் பின் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியுமா? போன்ற விவகாரங்கள் தொடர்பில் நேற்று உச்ச நீதிமன்றம் தமது முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது. அரசியலமைப்பின் 129 (1) சரத்துக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டதற்கமைய பத்துப் பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் அவ்விவகாரம் கவனத்திற்கெடுத்துக்கொள்ளப் பட்டதற்கிணங்க அதன்…

Read More

இலங்கைப் பெண்கள், டுபாயில் உண்ணாவிரதப் போராட்டம்

தமக்கான சம்பள கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி, துபாயிலுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் சிலர் எட்டாவது நாளாகவும் சாஜாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சுமார் 100 இலங்கைப் பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அதிகாரிகளை தெரியப்படுத்தியுள்ள போதிலும், தமக்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனைய நாட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், சம்பள உயர்வு உள்ளிட்ட எவ்வித வசதிகளும் தமக்கு செய்துகொடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். தம்மை மீண்டும் நாட்டிற்கு…

Read More

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு வௌியிடப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துரை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி, இன்று பிற்பகல் 02.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மூதூர் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மத்திய குழுவினர் அமைச்சர் றிஷாட் பதியுதீனை சந்தித்தனர்!!!

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுவினர் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை  பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான  அப்துல்லா மஹரூப் அவர்களின் ஏற்பாட்டில் வர்த்தக வாணிப கைத்தொழில் கூட்டுறவு மற்றும் நீண்ட காலம் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் அமைச்சரும் கட்சியின் தேசிய தலைவருமான றிசாத் பதியூதீனை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பானது இன்று வியாழக்கிழமை இரவு  பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றது. மூதூர் பிரதேச மத்திய குழுவினர் அமைச்சரை சந்தித்து…

Read More