Headlines

தபால் மூல வாக்களிப்பிற்கு மகிந்த விண்ணப்பிப்பு




நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் செயலக தெரிவித்துள்ளன.

மகிந்த ராஜபக்சவின் பெயர் அம்பாந்தோட்டை மாவட்ட வாக்காளர் இடாப்பிலேயே இருப்பதனால்அவரின் வாக்கு உரிமை அந்த மாவட்டத்திலேயே இருக்கின்றது.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதனால் தனக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி மகிந்த ராஜபக்சவுக்கு தபால் மூல வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *