சேயாவின் தந்தையிடம் இரத்தமாதிரி பரிசோதனை
கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சேயாவின் தந்தையிடம் இரத்தமாதிரி பரிசோதனை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மினுவங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சேயாவின் தந்தையிடம் இரத்தமாதிரி பரிசோதனை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மினுவங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை! விடையினைக் கொடுத்த நேரம் …விலகியே நிற்கும் தூரம் தடைகளாய்ப் போன தூக்கம் ..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம் மடையெனத் திறக்கும் கண்ணீர் ..மனத்தினில் கொதிக்கும் செந்நீர் உடைந்திடும் இளமைக் கட்டும் ..உடையினில் வேடம் மட்டும்! வாயினைக் கட்டிப் பூட்டி …வயிற்றினைப் பசியால் வாட்டி காயமும்…
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய திருமண வீடியோ யூ டியூபில் வெளியாகியுள்ளது. பிங்க் நிறப்புடவையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் சோனியா காந்தியும்(21), தனது டிரேட் மார்க் உடையில் மாப்பிள்ளையாக ராஜீவ் காந்தியும்(23), உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்து கொள்ளும் வீடியோ, பிரிட்டிஷ் மூவிடோன் என்ற யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இது மிகவும் அரிய ஆவணமாக கருதப்படுகிறது.
சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஐ.எஸ் போராளிகள் மற்றும் கிளர்ச்சி படைகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். போராளிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள், விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சனையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துவரும் ஈராக்கின் பிரதம மந்திரி…
பலரும் இஸ்லாம் அராபிய கலாசாரத்தை புகுத்துகிறது என்று கூறுகின்றனர். உண்மையில் அராபிய கலாசாரம் என்பது வேறு: இஸ்லாம் என்பது வேறு: அராபியர்கள் நீண்ட ‘தோப்’ என்ற உடையை உடுத்துவார்கள். வெயில் பனியிலிருந்து காத்துக் கொள்ள தங்கள் தலையை மறைத்துக் கொள்வார்கள். மதுவுக்கும் விபசாரத்துக்கும் அன்றைய அரபு சமூகம் அடிமைப்பட்டுக் கிடந்தது. பெரும் பெரும் கத்திகளை வைத்துக் கொண்டு இசையுடன் நாட்டுப் புற பாடல்களை பாடிக்கொண்டு நடனமும் ஆடுவார்கள். குதிரைப் பந்தயம், ஒட்டகப் பந்தயம் என்பது இன்றும் நடந்து…
தனது ஒரு வயதும் ஒரு மாதமுமேயான பச்சிளம் குழந்தையை தனது கணவர் 3 முறை நிலத்தில் அடித்து கொலை செய்யததாக குழந்தையின் தாய் இன்று (07) நீதிமன்றில் தெரிவித்தார். கடந்த வருடம் மார்ச்ச 26 ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததோடு, இது குறித்தான விசாரணை இன்று (07) அம்பாறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே குறித்த குழந்தையின் தாய் இவ்வாறு வாக்குமூலம் வழங்கினார். குறித்த தினத்தில் தானும், கணவரும் குழந்தையும் சந்தைக்குச் சென்றதாகவும் கணவரை குழந்தையை வைத்திருக்கச்…
த்தள – யுதகனாவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து 20 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் இவ்வாறு கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
– யு.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பின்தங்கிய கிராமங்களுள் மலையடிக் கிராமம் நான்காம் பிரிவும் ஒன்று இக் கிராமமானது மலைச் சாரல்களயும், மேட்டு நிலங்களையும்,கரடு முரடான பாதைகளையும் கொண்டதாகவே இதன் அமைவிடம் காணப்படுகிறது. தினமும் தமது அன்றாட தொழிலாக கூலித்தொழில் செய்பவர்களே இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். இக் கிராமமும், இக் கிராம மக்களும் ஒரு சோகம் நிறைந்த நாளை கடந்த சனிக்கிழமை (03.10.2015) சந்தித்து இன்றுவரை ஆளாத்துயரில் இருந்து வருகின்றனர். சிஹாப்…
வத்தளை அவரகொட்டு பகுதி மக்கள் நேற்றிரவு (07) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றினால் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வத்தளை, ஹெந்தலை, அவரகொட்டுவ பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றிலிருந்து வௌியேற்றப்படும் கழிவு பொருட்கள் மற்றும் புகையினால் சூழல் பாரியளவில் மாசடைவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலை இடைமறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமது சுகாதார நிலைமை பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சூழல் மாசடைவது தொடர்பில் தொழிற்சாலை முகாமைத்துவம் மற்றும் பொலிஸாருக்கு…
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் பாடசாலை அதிபர் ஊடாக குறித்த விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான சந் தேகநபர்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 5 சிம் அட்டைகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சிறப்பு விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் லசந்த கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுவோரால் பயன் படுத்தப்பட்டுள்ள இந்த சிம் அட்டைகள் ஐந்தும், அக்காலப்பகுதியில் வெலிக்கடை சிறைக்கைதியாக இருந்த ஒருவரின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குறித்த சிறைக்கைதி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ள நிலையில், சிறையில்…