Headlines

துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு: 265 பேர் கொன்று குவிப்பு – 3 ஆயிரம் வீரர்கள் கைது

துருக்கி நாட்டில் மக்கள் துணையுடன் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டது. ராணுவத்துடனான மோதலில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 3 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். துருக்கி, தொடர்ந்து 4 முறை ராணுவ புரட்சிகளால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடு. அங்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மீண்டும் ராணுவ புரட்சிக்கான முயற்சியாக ராணுவத்தில் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நகரத்தில் உள்ள பாஸ்போரஸ் ஜலசந்தி மீதுள்ள 2 பாலங்களில் டாங்கிகளை நிறுத்தி,…

Read More

கண்டி மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அமோக வரவேற்பு!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேச சபை மற்றும் உடுநுவர பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்குரணை, உடுநுவர பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் நேற்று (05) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன. அக்குரணை பிரதேச சபைக்குட்பட்ட உக்கல்ல வட்டாரத்தில் போட்டியிடும்…

Read More

கோட்டாவை செப்டம்பர் மாதம்வரைகைது செய்ய முடியாது – பிரதமரின் உரை (விபரம்)

அஸ்ரப் ஏ சமத் கோட்டாபயா ராஜபக்ச செப்டம்பர் மாதம்வரை நிதி மோசடியில் அவரை கைது செய்ய முடியாது. என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றி அமைச்சரவைக்கு நான் விளக்க வேண்டும் அத் தீர்ப்பு பற்றி எனக்கு கூறுங்கள் என சட்டமா அதிபரை நான் வினவியபோது. இவ்விடயம் பற்றி சட்டமா அதிபருக்கோ சட்ட திணைக்களத்திற்கு எதுவும் தெரியாது இதனை நாங்கள் அறிந்திருக்க வில்லை என கூறுகின்றார். அடுத்த பாராளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய அமைச்சரவை வரும் இந்த செப்படம்பர் மாதம்…

Read More

கேஸ் விலை குறைப்பு

பட்ஜெட்டில் அறிவித்தபடி சமையல் கேஸ் விலை குறைப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல்கட்டமாக கொழும்பில், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1346 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.

Read More

அமெரிக்கா சென்ற ஐ.தே.க. உறுப்பினர்களின் அறிக்கையை கோரும் பிரதமர்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல்அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர்களின் அறிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். இவர்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி பெற்ற விதம் தொடர்பான அறிக்கையினையும்பிரதமர் பாராளுமன்ற அலுவலகத்திடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமெரிக்க சுற்றுலாவில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்களின் அவசியம் என்ன என்றும், அவர்கள் அமெரிக்காவில்முன்னெடுத்த அரசியல் விவகாரங்களையும் குறித்த அறிக்கையில் உள்ளடக்குமாறுபிரதமர் கோரியுள்ளார்.

Read More

வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் ஆர்ப்பாட்டங்கள்

வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக குறித்த வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல நகரங்களிலும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், இன்று கிரிபத்கொட, கடவத்த, மாகொள, களனி ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நகரங்களின் வர்த்தகர்கள் நடைபயணத்தை மேற்கொண்டு கிரிபத்கொட சந்தி வரை சென்று அந்த இடத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read More

மன்னார் சவூத்பார் விளையாட்டு கழகத்திற்கு நிதியினை ஒதுக்கிய அமைச்சர் றிஷாட்

மன்னார் மாவட்டத்தில் நகர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவூத்பார் கிராம விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வர்த்தக  அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக 250000/- இரண்டு லச்சத்தி ஐம்பதாயிரம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான முதல் கட்ட வேலைத்திட்டத்தினை மன்னார் நகர பிரதேச செயலாளர் பரமதாஸ்,வன்னி பிராந்திய இளைஞர் கழக பணிப்பாளர் முனவ்வர்,மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் …

Read More

றிசாத், ஹகீம், தயாவின் கோரிக்கையை நிதியமைச்சர் ஏற்பு

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரும்பு உற்பத்தியாளர்களும், நெசவுத்தொழிலில் ஈடுபடுவோரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் வகையில் அவர்களை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமைச்சரவையின் உபகுழுக் கூட்டம் இன்று காலை (12/07/2016) நடைபெற்றபோது அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹகீம், தயாகமகே ஆகியோரின் வேண்டுகோளை ஏற்றே, இந்த சந்திப்பை அவர் நடத்தவுள்ளார். இந்த மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை அமைச்சர்கள், நிதி அமைச்சர் ரவியிடம் எடுத்துரைத்தனர்….

Read More

தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்த  செல்வந்தர் !

சவூதி அரேபியா இளவரசரை தொடர்ந்து கல்வி அறக்கட்டளைக்கு தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்த துபாய் செல்வந்தர். சவூதி அரேபியா இளவரசரை தொடர்ந்து, துபாய் செல்வந்தர் அப்துல்லாஹ் அஹ்மத் அல் குரைர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்வி அறக்கட்டளைக்கு தானம் செய்துள்ளார். இவர் துபாயில் பிரபலமாக அறியப்படும் Mashreq bank, Al Ghurair Construction, Al Ghurair RealEstate போன்ற நிறுவனங்களின் ஸ்தாபகர் ஆவார். துபாய் செல்வந்தர் அப்துல்லாஹ் அஹ்மத் அல்…

Read More

கசினோ மட்டுமா சூது. ‘ருஜுனோ’ சூதாட்டம் இல்லையா?

– ஜே.ஜி.ஸ்டீபன், ப.பன்னீர்செல்வம் – கசினோவுக்கு வரியை அதிகரித்துள்ள அரசாங்கம் “ருஜுனோவு”க்கு வரியை நீக்கியுள்ளது. ஏன் கசினோ மட்டுமா சூது. ருஜுனோ சூதாட்டம் இல்லையா என ஜே.வி.பி. எம்.பி நளின்த ஜயதிஸ்ஸ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். சர்வதேச பிச்சைக் காரர்களாக இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் பிச்சையெடுக்கும் பொருளாதார கொள்கை மாற்றப்பட வேண்டும் எனக் கூறியோர் இன்று வரவு செலவு திட்டம் மூலம் மீண்டும் சர்வதேச பிச்சைக்காரர்களாக மாறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Read More

“மூவின மக்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை வசப்படுத்துவோம்” அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில்  குறுகிய காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அபரிமிதமான வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு மூவின மக்களின் ஒத்துழைப்புடனும், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளின் அரவணைப்புடனும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை இம்முறை கைப்பற்றுவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். கைத்தொழில், வர்த்தக அமைச்சில் நேற்று மாலை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்தக்…

Read More

மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றி­ருப்பின் நியாயம் நிலை­நாட்­டப்­பட வேண்டும் : அனு­ர­கு­மார

இறுதி யுத்­தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­ற­னவா என தமிழர் தரப்­பி­ன­ருக்கும் சர்­வ­தேச தரப்­புக்கும் ஏற்­பட்­டி­ருக்கும் சந்­தே­கங்­களை தீர்க்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் முக்­கிய பொறுப்­பாகும். குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருப்பின் நியாயம் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார். எனினும் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­களை பலப்­ப­டுத்தி அத­னூ­டாக பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான அறிக்கை கடு­மை­யா­ன­தாக அமையும் என செய்­திகள் வெளி­வந்­துள்ள நிலையில் இலங்­கையின்…

Read More