Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் அட்டாளைச்சேனை வீதி அபிவிருத்திக்கு நிதி ஒதிக்கீடு..





 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனை வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது.

அட்டாளைச்சேனை புறத்தோட்டம் பாத்திமா அரபுக்கல்லூரி வீதி இதுவரை காலமும் குன்றும் குழியுமாகவே காணப்பட்டதையடுத்து, மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் சமீர் ஹாஜியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் இந்த வீதிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பலனாக பாத்திமா அரபுக்கல்லுரி வீதி கொங்கிரீட்ட் காபட் மூலம் செப்பனிடப்பட்டு, புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *