Headlines

இலங்கையில் நடைபெறும் சர்வதேச பொலிஸ் மாநாடு

சர்வதேச பொலிஸ் மாநாடு எதிர்வரும் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இலங்கையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் 40 உயர் பொலிஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம், ஊழல் மோசடி தவிர்ப்பு, குற்றச் செயல்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

Read More

“சிறுபான்மை சமூகம் தன்னுடைய மனக்கிடக்கையை வெளிப்படுத்துவதற்கு உகந்த தேர்தல்” ஹிஷாம் சுஹைல் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அண்மைக் காலங்களில் எமது சமூகத்தை கறிவேப்பிலையாகவே பயன்படுத்துகின்றனர். தேவை ஏற்படின், தேர்தல் காலங்களில் எமது பிரதேசத்துக்கு வந்து எமது வாக்குகளை அள்ளிக்கொண்டு செல்வார்கள். எமக்கு ஒரு பிரச்சினையென்றால் கேட்பதற்கு யாருமில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் களுத்துறை நகரசபைக்கு போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ஹிஷாம் சுஹைல் தெரிவித்தார். களுத்துறை நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, களுத்துறை தெற்கு பள்ளிவீதியில் (12) இடம்பெற்ற…

Read More

தேசிய சூரா சபை விடுத்துள்ள விஷேட வேண்டுகோள்…!

எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினத்தை நிர்ணயம் செய்யும் விடயமாக மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தேசிய சூறா சபை சமூகத்தின் சகல தரப்பினையும் பணிவாக வேண்டிக் கொள்கிறது. கடந்த வருடத்துக்கு முன்னைய வருடம் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் ஏற்படுத்திய வடுக்களை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். பரஸ்பர விமர்சனங்கள், கண்டனங்கள் மறுப்பறிக்கைகள், ஏளனங்கள் என்று அப்பட்டியல்  நீண்டு கொண்டே சென்றது. அதுமாத்திரமன்றி பிற சமூதாயத்தவர்களிற் சிலர்…

Read More

மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி

பதுளை, மடுல்சின்ன கல்வுல்ல மெட்டிகாத்தன்னை பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (10) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 49 வயதான இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். கணவனும் மனைவியும் வீட்டில் இருந்த போது மின்னல் தாக்குதலுக்கு இழக்காகி மனைவி இறந்துள்ளதாகவும் கணவனுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன்…

Read More

அரசியல் காழ்புணர்ச்சியின் உச்ச கட்டமே அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான முறைப்பாடு…..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக இலஞ்சம்அல்லது ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு தோற்ற ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டமையானது எமது தலைவரினால்  மேட்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டத்தையும் எமது கட்சியின் பாரிய வளர்ச்சியையும் கண்டு தாங்க முடியாதவர்களின் காழ்புணர்ச்சியின் உச்ச கட்டமே இந்த முறைப்பாடு என அகில இலங்கை மக்கள் காங்கிரசை பிரதிநிதிப்படுத்தும் குச்சவெளி பிரதேச சபை…

Read More

கெக்கிராவையில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி

– விஷேட செய்தியாளர் – அனுராதபுரம், கெக்கிராவையில் சற்று முன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கெக்கிராவை தனியார் வங்கி ஒன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த வெடிப்பில் ஸ்தலத்திலேயே இரண்டு பேர் பலியாகியுள்ளனர். தனியார் வங்கியில் கொள்ளையிட வந்தவர்களாலேயே குண்டு வெடிக்க வைக்கப் பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் றிஷாத் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு

-ஊடகப் பிரிவு   – வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொடிகஹவத்தை மக்கள் தங்கியிருக்கும் கொடிகஹவத்த விமலாராம விகாரை, நாகருக்காராமய விகாரை ஆகியவற்றுக்கும், கொலன்னாவை வித்யவர்தன மஹா வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் வெள்ள அகதிகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று (24/05/2016) நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சருடன் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களான ஹுசைன் பைலா, ரியாஸ் சாலி ஆகியோரும் சென்றிருந்தனர்.

Read More

என்னிடம் இனவாத இல்லை.மதவாதம் இல்லை -வெலி ஓயாவில் றிஷாத்

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வெலி ஓயா (மணல் ஆறு) கிராமத்திற்கு நேற்று வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தேர்தல் பரப்புரை நிமித்தம் விஜயம் செய்திருந்தார். வெலி ஓயா ஜனக புர,சம்பத் நுவர,கல்யாணி புர,மாயாவ,எகட்டுவெவ,எதாவெடுனுவெவ, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடலை நடத்தினார். அமைச்சர் றிசாத் பதியுதீன் கடந்த காலங்களில் மக்களுக்கு ஆற்றிய பணிகளை வரவேற்ற இப்பிரதேச சிங்கள மக்கள்…

Read More

வெலிக்கடை சிறைச்சாலை ஹொரணைக்கு மாற்றம்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையை அங்கிருந்து அகற்றி அதற்கு பதிலாக ஹொரணை பகுதியில் சிறைச்சாலையை அமைக்க அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதிக்கிடைக்கபெற்றதன் பின்னர் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். ஹொரணை சொரணவத்தை பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, புதுக்கடை நீதிமன்றத்திற்கு அண்மையில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிகமாக கைதிகளை தடுத்து வைப்பதற்கு தடுப்பு நிலையம் ஒன்று அமைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதன்படி, தற்போது…

Read More

குற்றவாளிகளுக்கு வேட்பு மனு வழங்க வேண்டாம்!- அஸ்கிரி பீடாதிபதிகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது நேர்மையான நாட்டுக்கு சேவையாற்றக் கூடியவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும அரசியல் கட்சித் தலைவர்களிடம் இரண்டு பீடாதிபதிகளும் கோரியுள்ளனர். குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமெனவும் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் மக்களிடம் கோரியுள்ளனர்.

Read More

பதுளை பள்ளிக்கு ரிசாத் விரைவு பொலிசாருக்கு கடும் கண்டனம்

(எ.எச்.எம்.பூமுதீன்) பதுளை பள்ளிவாசல், பாடசாலை மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் உடன் ஸ்தலத்துக்கு விரைந்து சம்பந்த பட்டவர்களை  கைது செய்வதிலும்  துரித கவனம் செலுத்தினார். இதற்கமைய . ஒருவர்  கைது செய்யபட்டதுடன்  மூவரைத்தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர். பொலிசாரின் அசமந்தப் போக்கே இவ்வாறான தாக்குதல்கள் தொடர்வதற்கு காரணம் என அமைச்சர் அதன்போது பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். பதுளை ஜூம்ஆ பள்ளிவாசல், அல்-அதான் பாடசாலை மற்றும்  மூன்று முஸ்லிம் வரத்தக நிலையங்கள்…

Read More

திருடப்பட்ட போனை கண்டுபிடித்த 18 வயது இளைஞர் சுட்டுக்கொலை

தனது திருடப்பட்ட ஐ போனை டிராக்கிங் அப் மூலம் கண்டுபிடித்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கனடாவை சேர்ந்த ஜெர்மி குக் என்ற 18 வயது இளைஞர், தன்னுடைய ஐ போனை வாடகை காரில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார். பிறகு அந்த எண்ணை தொடர்புகொள்ள முயன்ற போது போன் திருடப்படுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து தொலைந்து போன போனை கண்டுபிடிக்கும் டிராக்கிங் அப்ளிக்கேஷன் மூலம் போன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளார். பின்னர் அந்த இடத்திற்கு சென்று அங்கு…

Read More