Headlines

இலவச குடி நீர் இணைப்பு வழங்கல்




முன்னால் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்களது முயற்சியின் பயனாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்களூடாக.

முழு அட்டாளைச்சேனை பிரதேசத்திலும் (அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி, தீகவாபி, அஷ்ரப் நகர், உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும்)குடி நீர் இணைப்புக்காக விண்ணப்பித்த சுமார் 413 பயனாளிகளுக்கு கட்சி பேதமில்லாமல் அனைவருக்கும் ரூபா 75 இலட்சம் பெறுமதியான இலவச குடி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது….

அல்ஹம்துலில்லாஹ்!

இன்று (01) அதற்கான காசோலையினை கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் சட்டத்தரணி அன்சில், மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் கபூர் உள்ளிட்ட அட்டாளைச்சேனை பிரதேச கட்சி முக்கியஸ்தர்களிடம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.