Headlines

உங்களுக்கு பிரதமர் பதவி இல்லை! மஹிந்தவுக்கு மைத்திரி அதிரடி அறிவிப்பு

சிலவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள 5 பக்க கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான பகுதிகள் பின்வருமாறு உள்ளன! “நீங்கள் என்னுடன் ஒத்துழைத்து செயற்பட எதிர்பார்ப்பதாக கூறும் செய்தியொன்றை அண்மையில் ஊடகங்கள் வௌியிட்டிருந்தன. உங்களுக்கு அவ்வாறான எதிர்பார்ப்பு இருக்குமாயின் அது தொடர்பில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய சில…

Read More

புஸ்ஸலாவை இளைஞர் மரண வழக்கு ஒத்திவைப்பு

புஸ்ஸலாவை – ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த நடராஜ் ரவிசந்திரனின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கம்பளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சாந்தனி மீகொட, நேற்று உத்தரவிட்டார். மேலும், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்தின் சிறைசாலையை பார்வையிட நீதவான்,  எதிர்வரும் 30ஆம் திகதி விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

Read More

போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாட் கேட்டறிவு!!!

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்திற்கு இன்று (4) விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு தொடர் போராட்டத்தில்  ஈடுபடும் அந்தப் பிரதேச மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வு தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும்  கலந்துரையாடினார். மேலும்  ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Read More

ஒபாமா இலங்கை வரவுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்துள்ள பாரிய சர்வதேச வெற்றியாகும் என்று காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை அறிவிக்கும் முகமாகவே இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அவர் அங்கு…

Read More

கல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை

கல்முனையிலேயே ஏட்டிக்குப்போட்டியாக உண்ணாவிரதத்திலும்,சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குதீர்வுகாண முன்வருமாறு முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்தலைவருமான ரிஷாத் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றில் இன்று (21) மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முஸ்லிம் காங்கிரஸின்தலைவர் ரவூப் ஹக்கீமும் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை அல்லதுமுஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸும், தமிழ்த் தேசியகூட்டமைப்பின்…

Read More

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியில் நாணாட்டனில் கலாச்சார மண்டபம் நிர்மாணம் (படங்கள் இணைப்பு )

பூமுதீன் மன்னார் நாணாட்டன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மண்டம் நேற்று திற்ந்து வைக்கப்பட்டது. வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இக் கலாச்சார மண்டபத்தை திறந்து வைத்தனர். நாணாட்டன் பிரதேச மக்களின் தேவையைக் கருத்திற்கு கொண்டு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அயராத முயற்சியினால் இக்கலாச்சார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு மக்களின்  பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்திநகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திர சிறி , பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாறுக்,…

Read More

இனவாதிகளின் கொட்டத்தை அடக்க சஜித்தே சரியான தெரிவு. முல்லைத்தீவில் அமைச்சர் றிஷாட்!

இனவாதிகள் கூட்டுச்  சேர்ந்துள்ள அணியை ஜனாதிபதித்  தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கோரிக்கைவிடுத்தார். சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இன்று காலை (04) முல்லைத்தீவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.அவர் கூறியதாவது, சிறுபான்மை மக்களை “வந்தான் வரத்தான்” எனக்  கருதும் இனவாதிகளுக்கு இந்த தேர்தலில் நாம் ஒன்றுபட்டு பாடம்புகட்டுவோம். நமது சமூகம் தன்மானத்துடனும், தலைகுனிவின்றியும் வாழவேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். கடந்த ஒரு தசாப்தகாலமாக…

Read More

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை பஷில் ராஜ­பக் ஷ, கோதா­பய ராஜபக் ஷ ஆகியோர் ஒதுக்­கித்­தள்­ளி­ய­தோடு தம்மை முதன்­மைப்­ப­டுத்­தினர். இறு­தியில் இதற்­கான விலையை மஹிந்த ராஜபக் ஷ கொடுக்க வேண்­டிய நிலை­யேற்­பட்­டது என்று கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளார்.

அழ­கிய மீன் தொட்டி ஒன் றில் சுடு நீரை ஊற்­று­வது போலவே சம்பூர் அனல் மின் நிலையம் இலங்­கையில் அமை­யப்­போ­கின்­றது. முழு உல­கமே அனல் மின் நிலை­யத்­திட்­டத்தை கைவி­டு­கையில் இலங்கை மாத்­திரம் அதனை ஆத­ரிப்­ப­தை­யிட்டு சர்­வ­தேசம் வியப்­ப­டைந்­துள்­ளது. எவ்­வா­றா­யினும் உத்­தேச அனல் மின் நிலையத் திட்டம் இந்­தி­யா­விற்கு மின்­சா­ரத்தை பெற்றுக் கொடுத்து இலங்கை மக்­க­ளுக்கும் இயற்­கைக்கும் அழி­வைத்­தர போகின்­றது என சூழ­லி­ய­ளாலர் கலா­நிதி எப். ரணில் சேனா­நா­யக்க தெரி­வித்தார். சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் வீர­கே­சரி…

Read More

முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் தேர்தலே ஊவா தேர்தல்- அமைச்சர் ரிசாத் சூளுரை

முஸ்லிம்களின் உரிமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் தேர்தலாகவே ஊவா மாகாண சபைத் தேர்தலை தான் பார்ப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவிதித்தார்   ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் மு.காவுடன் இணைந்து போட்டியிடும் அ.இ.ம.கா வின் தேசியத் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெள்ளி ,சனி ஆகிய தினங்களில் மேற்கொண்ட  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   மு.கா. , அ.இ.ம.கா இத்தேர்தலில் ஒற்றுமைபட்டதானது நாடு பூராகவும் உள்ள 20 இலட்சம்…

Read More

மும்­மன்ன முஸ்லிம் வித்­தி­யா­ல­ய விவகாரம்: அதிபருக்கு இடமாற்றம்

மும்­மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­துக்குச் சொந்­த­மான விளை­யாட்டு மைதானம் பெரும்­பான்மை சமூ­கத்­தினால் உரிமை கொண்­டாடப்படும் நிலையில் அதனைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக முன்­னின்று செயற்­பட்டு வந்த வித்­தி­யா­ல­யத்தின் அதிபர் உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் தற்­கா­லி­க­மாக இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார். மும்­மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தின் அதிபர் மொஹமட் சனூன் சுஹைப் என்­ப­வரே இவ்­வாறு கிரி/ அதார ஆரம்ப பாட­சா­லைக்கு தற்­கா­லி­க­மாக இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார். 2016.08.24 ஆம் திக­தி­யிட்ட இட­மாற்றக் கடிதம் நேற்று திங்­கட்­கி­ழ­மையே அதி­பரைச் சென்­ற­டைந்­துள்­ளது. அதிபர் இடமாற்றம்…

Read More

கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே நீதிமன்றில் ஆஜர்

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே சற்றுமுன்னர் கொழும்பு புதுகடை மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

Read More