வாட்ஸ் அப்பில் வாலிபர் அவமதிப்பு: சவுதிஅரேபிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை
‘வாட்ஸ் அப்’பில் வாலிபரை அவமதித்த சவுதி அரேபிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டது. சவுதிஅரேபியாவை சேர்ந்த 32 வயது பெண் ‘வாட்ஸ் அப்’பில் வாலிபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த வாலிபர் போலீசில் புகார் செய்தார். சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப வசதி மூலம் மாற்றவர்களை அவமதிப்பது மற்றும் துன்புறுத்துவது குற்றமாகும். எனவே, அப்பெண் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அப்பெண்ணுக்கு ரூ.3 லட்சத்து 28…
‘காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் பிரயத்தனங்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
எதேச்சாதிகாரத்தில் நடந்துகொள்ளும் இஸ்ரேலின் போக்குகளை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், காஸாவை கைப்பற்றும் திட்டங்களை கைவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (02) உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “சமாதான உடன்படிக்கையை மீறியுள்ள இஸ்ரேல் மீண்டும் கொலைகாரன்போல் செயற்படத் தொடங்கியுள்ளது. குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவிகளைக் கொன்று குவித்து, காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் யூத அரசின் போக்குகள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகுக்கே ஜனநாயகத்தை போதிக்கும் மேற்குலக…
வில்பத்து வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை – திலக் காரியவசம்
வில்பத்துவில் வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை. முஸ்லிம்கள் தாங்கள் குடியிருந்த காணிகளையே துப்புரவு செய்து குடியேறியுள்ளனர். பொதுபலசேனா அமைப்பும், சில சூழலியலாளர்களுமே வில்பத்து தேசியவனம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தவறாகப் பிரசாரம் செய்கிறார்காள். இதன் பின்னணியில் பொதுபலசேனா அமைப்பே செயற்படுகிறது என தேசிய சூழலியலாளர் அமைப்பைச் சேர்ந்த சூழலியலாளர் திலக் காரியவசம் தெரிவித்தார். சிவில் அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்ட வில்பத்து விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில்…
சச்சின் தெண்டுல்கர் இலங்கை வருகை
உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் யுனிசெப் நிறுவனத்தின் வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் சிறுபராயத்தினரின் சுகாதாரப் பழக்கவழங்களை மேம்படுத்தல் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த வைபவம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய அனுசரணையில் நேற்று ஆரம்பமானது. இந்த வைபவத்தில் சச்சின் தெண்டுல்கருடன், இலங்கையின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும் கலந்து கொண்டிருந்தார். யுனிசெப் அமைப்பின் சுகாதார மேம்பாட்டுத்திட்டத்தின் பிராந்திய நல்லெண்ணத் தூதுவராக சச்சின்…
சீ.எஸ்.என் மோசடி விவகாரம்: நிதியை இடமாற்ற உத்தரவு!
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் சேகரிக்கப்பட்ட நிதி 157.5 மில்லியன் பணத்தை மத்திய வங்கிக்கு இடமாற்றுமாறு கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார். நிதி மோசடி விசாரணை பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவு கடுவலை நீதவானால் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் படகுத் தொழிற்சாலைக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்
ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள நவீனரகப் படகுத் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன், அங்கு படகுக் கட்டுமானப்பணிகள் இடம்பெறும் இடங்களைப் பார்வையிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய, நவீனரக யொட் (Yacht Boat) படகுகள் இங்கு தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
31 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு ஒதுக்கும் அமெரிக்கா
இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க மற் றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒது க்கும் யோசனையை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் முன்வைத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்கிரஸுக்கு அனுப்பிவைத்துள்ள வரவு – செலவுத்திட்ட யோசனையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் பின்னர் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களுக்கு பின்னர் இலங்கைக்கான அமெரிக்க உதவி புதிய யுகத்தில் நுழைந்துள்ளதாக அந்த…
இந்தியா – பாகிஸ்தான் பேச்சு ரத்து!
இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வருகிற 25ம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது ரத்தாகியுள்ளது. காஷ்மீர் தலைவர்களை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சந்தித்துப் பேச இருப்பதன் காரணமாக, இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து தலையிட்டு வருவதால் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலருடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக…
கிண்ணியாவில் இயங்கி வரும் NAMS கல்லூரியில் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கான பட்பமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!!!
கிண்ணியாவில் இயங்கி வரும் NAMS கல்லூரியில் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கான பட்பமளிப்பு விழா இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று (16) கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் கல்லூரியின் தலைவர் முஸ்தாக் தலைமையில் இடம் பெற்றது. கலை இளமானி பட்டம், டிப்ளோமாதாரிகள், முதுமானி பட்டங்களை பூர்த்தி செய்தோர்களுக்கான பட்டங்களே வழங்கப்பட்டன. துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்லூரியின் தலைவரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்….
முன்னாள் அமைச்சர் பெளசியின் மகன் நௌசர் பௌசியை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு….
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசியின் மகனான நௌசர் பௌசியை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருவரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! – மஹிந்த ராஜபக்ச
கடந்த சில நாட்களாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கடுமையான அவமானங்களை அவதூறுகளை எதிர்நோக்க நேரிட்டது. இவற்றை தாங்கிக்கொள்ளும் சக்தி என்னிடம் உண்டு. மக்கள் ஆதரவு எனக்கு காணப்படுகின்றது. நான் எனது பொறுப்புக்களை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்த போது நான் செய்த பணிகளை முன்னெடுப்பார்கள் எனக் கருதியே வீட்டுக்கு சென்றேன். நாட்டின் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிய காரணத்தினால் மக்கள் என்னை நேசிக்கின்றார்கள். நாம் அனைவரும் பௌத்த மத வழிமுறைகளை பின்பற்றினால் பௌத்த மதம்…
