Headlines

உயர்நீதிமன்றம் செல்லும் SLTJ

தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. இலங்கை  வருவதை தடைசெய்தமைக்கு எதிராக சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் இன்னும் சில தினங்களில் உயர் நீதிமன்றம் செல்லவுள்ளது. தவ்ஹீத் ஜமாத் செயலாளர் ராசிக், துணைச் செயலாளர் மௌலவி ரஸ்மின் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தினர் சிங்கள, முஸ்லிம் சட்டத்தரணிகளின் உதவியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவுகுடியகல்வு பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டவுள்ளது. தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடுசெய்த நிகழ்வில் பீ.ஜே. வருவதற்கு இலங்கை முஸ்லிம் விவகார திணைக்களம் அனுமதியளித்திருந்தது. அத்துடன், உத்தியோகபூர்வமற்ற முறையில்…

Read More

இன்று தேசிய அரசில் இணையும் அந்த ஆறுபேர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் (தற்போது தேசிய அரசில் அங்கம் வகிக்காதவார்கள்) தேசிய அரசாங்கத்தில் இன்று புதன்கிழமை இணைந்துகொள்ளவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த அறுவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அந்த அறுவரும், இந்த வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. TM

Read More

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது. 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரினால் கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் கடந்த ஒன்பது நாட்கள் காலை 9.30 முதல் மாலை 6.30 வரையில் நடைபெற்று வருகின்றது. வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த…

Read More

கோத்தா கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்ய ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். இவர்களின் தேவைக்கு அமைய ஊழல் மோசடி விசாரணைப் பிரிவினர் கோத்தபாய…

Read More

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதவரளிக்கப்படாது!– ஜே.வி.பி

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. கூட்டு எதிர்ககட்சியினால் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் நிதி அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்படுவதில் அர்த்தமில்லை. அசராங்கத்தின் தற்போதைய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஜே.வி.பி ஆராய்ந்து வருகின்றது. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவது மிகவும்…

Read More

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம்! அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. தொடர்பாடல் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த சட்ட மூலம் தொடர்பில் சிரேஸ்ட சட்ட வல்லுனரும்…

Read More

கட்டாரில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் வபாத்

கட்டாரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் என்பவர் உயிரிழந்துள்ளார். “Cuter pillar ” இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அது தவறி கடலுக்குள் வீழ்ந்ததில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் எனும் இளைஞரும் மற்றுமொரு இந்திய நபரும் பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளனர். இவர்களது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு நல்லமல்கள் ஏற்கப்பட்டு சொர்க்கவாசிகளாக இவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

Read More

ஹிஜாப் உடலை மறைக்கதான் அறிவை மறைக்க அல்ல : நோபல் பரிசு பெற்ற முஸ்லிம் பெண்!

யெமன் நாட்டை சார்ந்த மனித உரிமை ஆர்வலரும், நோபல் பரிசுப் பெற்ற இஸ்லாமிய பெண்ணுமான தவக்குல் கர்மானிடம் பத்திரிக்கையாளர் ஒருவர்:- “கல்விக்கும், அறிவுக்கும் நீங்கள் அணியும் ஹிஜாப் எப்படி பொறுந்துகிறது” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கர்மான் அவர்கள் “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத்துவங்கினர். எனது ஆடையும் மனிதன் பெற்ற உன்னதமான கலாச்சாரமாக கருதுகிறேன். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது ஆதி காலத்திற்கே செல்கிறான்” என்று பதிலளித்தார்….

Read More

போக்குவரத்து அமைச்சுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சு, பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள நிலையில், அதனை கண்டிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் தற்போதைய கட்டிடத்திற்கு வாடகை மற்றும் வரி செலுத்தப்படுவதில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இடமாற்றம் செய்யப்படவுள்ள பத்தரமுல்லை கட்டிடத்திற்கு வருடாந்தம் 50 இலட்சம் வாடகை செலுத்த வேண்டியுள்ளதாகவும்…

Read More

தனியார் துறைக்கும் ஓய்வூதியம்: ஹர்ஷ டி சில்வா

அரச ஊழியர்களை போன்றே தனியார் ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை வழங்கும் நடைமுறையொன்றை மிக விரைவில் தயாரிக்கவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பொருளாதாரத்திற்கு இயந்திரமாக செயற்படுகின்றவர்கள் மக்கள் எனவும், சமூக, வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Read More

சேயா சந்தவமி விவகார விசாரணை: ஐவருக்கு எதிராக விசாரணை

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவயைச் சேர்ந்த 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, பாடசாலை மாணவன் மற்றும் பிள்ளையொன்றின் தந்தை ஆகிய அப்பாவிகளைக் கைதுசெய்தமைக்காக, பொலிஸார் ஐவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஐவருக்கு எதிராகவும், பாடசாலை மாணவனிடமிருந்த பெற்றுக்கொண்ட பொருளை மீளவும் கையளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

Read More

சிங்களவர்களை அரவாணிகளாக்காதீர்: கெஹெலிய

மாவீரர் தினத்தை நினைவு கூருவதற்கு அரச அங்கீகாரத்தை வழங்கி சிங்களவர்களை”அரவாணிகளாக்கி” விடாதீர்கள். சிங்களக் கொடி கம்பீரமாக பறந்த நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டாம் என சபையில் கோரிக்கைவிடுத்த கெஹெலிய ரம்புக்வெல்ல எம்.பி.,காஷ்மீரில, இங்கிலாந்தில், பாகிஸ்தானில், ஜேர்மன், கனடாவில் பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு அனுமதியளிக்கப்படுகின்றதா என்ற கேள்வியையும் முன்வைத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. கெஹலிய ரம்புக்வெல்ல…

Read More