Headlines

அருங்கலைப் பேரவை கல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களுக்கு கைவினைப் பயிற்சி!!!

அமைச்சரின் ஊடகப் பிரிவு கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைப் பேரவை கல்வி அமைச்சு மற்றும் யுனஸ்கோ  ஆகியவற்றுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு கைவினைப் பொருட்களை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை இன்று காலை (2017.03.06) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பேரவையின் தலைவி ஹேஸானி போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன், கல்வியமைச்சர் அகில விராஜ்காரியவசம் ஆகியோர் பங்கேற்றனர்.  கடந்த வருடம் அருங்கலைகள் பேரவை நடைமுறைப்படுத்திய முதல் கட்ட வேலைத்திட்டத்தில்…

Read More

அவதானம்..! இப்படியும் ஒரு கொள்ளைச் சம்பவம்

தம்பலகாமத்தில் நடைபெற்ற கொள்ளைப் பாணியானது மிகவும் விசித்திரமான வகையில் அமைந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் தம்பலகாமத்தில் நடைபெற்ற திருமண வைபவமொன்றில் கலந்து கொண்டு விட்டு கணவனும் மனைவியும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிப் பயணித்துள்ளனர். இதன் போது அவர்களின் பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அவர்களை மோதித் தள்ளியுள்ளது. விபத்துக்குள்ளான இருவரும் சுதாகரிக்கும் முன்னரே விமுந்து கிடந்த பெண்ணின் கழுத்தில் இருந்த  தாலிக்கொடி உட்பட நகைகளை பறித்துக்கொண்டு பின்னாள்…

Read More

விமல் வீரவன்ச சற்றுமுன் கைது – BREAKING NEWS

– நமது நிருபர் – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்ட விமல் வீரவன்ச சற்றுமுன் கைது செய்யப் பட்டதாக பொலிசார் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Read More

 7 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பதவி உயர்வு

– கனகராசா சரவணன் – பொலிஸ் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய உடனடியாக அமுலுக்குவரும் வகையில் 7 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உதவி பொலிஸ்மா அதிபாராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது இதங்கமைய, அஜந்த சமரகோன், ரண்மல் கொடித்துவக்கு, நானகசில்வா, கிஸ்சிறிஜெயலத், ராஜித சி சமிந்த, சஞ்சீவ தர்மரத்தின மற்றும் பியந்த வீரசூரிய ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

Read More

பாணின் விலை குறைப்பு

இன்று (14) தொடக்கம் ஒரு வாரத்திற்கு பாணின் விலையை நான்கு ரூபாவால் குறைப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் வாரத்தினை முன்னிட்டு பாணின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்த்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார். அதற்கமைய 54 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு இறாத்தல் பாண், இன்று முதல் ஒரு வாரத்திற்கு 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்நிலையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பையடுத்து பாணின் விலையை…

Read More

பொதுபல சேனா போட்டியிடும் மாவட்டங்களின் விபரம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபலசேனா அமைப்பு, பொதுஜன முன்னணியூடாக 17 மாவட்டங்களில் போட்டியிடுவதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். களுத்துறை வேட்பாளர் அணியின் தலைவராக ஞானசார தேரர் களமிறங்கவுள்ள அதேநேரம், கம்பஹா அணியின் தலைவராக அவ்வமைப்பின் பேச்சாளர் டிலந்த விதானகே போட்டியிடுவதாகவும், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு மாவட்ட அணித் தலைவராக விதாரந்தெனிய நந்த தேரர் பெயரிடப்பட்டுள்ளார். -dc

Read More

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது!

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் அதிக குளிரூட்டபட்ட அறையில் ராம்குமார் உடல் வைக்கப்பட்டு உள்ளது. எனவே பிரேத பரிசோதனை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடல், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமார் பிரேத பரிசோதனையில் தனியார் டாக்டர் இடம் பெற வேண்டும் என்று முறையிட்டு ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால், 30-ந்தேதி வரை பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது….

Read More

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் தன் பலத்தை நிரூபிக்கும் நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்!

–நஜிமுதீன் எம்.ஹஷான்- இலங்கை நாடும், நாட்டு மக்களும் அரசியலுக்குள் ஆட்பட்டவர்களாய்  இருந்துகொண்டு, தன் வாழ்வியலை பிரதான விடயங்களோடு இணைந்து முன்னெடுத்து வரும் நிலையில், இம்மக்களை மீண்டும் ஒரு எதிர்பார்ப்புமிக்க தேர்தல் அரங்கிற்குள்  அழைத்துச் செல்லும் கட்டாயம் அரசுக்குள் நிலைகொண்டிருப்பதை காலக்கண்ணாடியில் தெளிவாக நோக்க முடிகின்றது. ஆம்! அதுதான் சிறுபான்மையின மக்கள் ஆவலுடன் காத்திருக்கும், எதிர்பார்த்திருக்கும் தன் இனங்களினது அரசியல் ரீதியான ஜனநாயகமிக்க, மனிதநேயமிக்க உதவிகளை, தீர்வுகளை, நன்மைகளை குறிப்பாக, தம் மக்கள் பிரதிநிதிகள் மூலமாக   மத்திய அரசு,…

Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது எலிசபெத் மகாராணியாருடன் இன்று சந்திப்பு

பொதுநலவாய தின நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியாரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கு மகாராணியார் இன்று உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பிரித்தானிய பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்புக்களின்போது இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தர்மஸ்ரீ பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார். தனது விஜயத்தின்போது ஜனாதிபதி…

Read More

நாட்டில் இடம்பெறும் குற்றங்களை ஒழிக்க புதிய வேலைத்திட்டங்கள்

நாட்டில் அதிகரித்துள்ள குற்றங்களின் அளவானது இந்த வருடத்திற்குள் 70 வீதமாக குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள்கள் ஊடாக அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கசல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் தத்தமது பிரதேசங்களில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது அன்றாடம் பிரதேசத்தின்…

Read More

தமிழக அரசுடனும் நட்புறவை வலுப்படுத்துவது அவசியம் : லக்ஷ்மன் கிரியெல்ல

இந்­தி­யா­வு­ட­னான நட்­பு­றவை கடந்த அர­சாங்கம் முறித்துக் கொண்ட நிலையில் புதிய அரசு நட்­பு­றவை புதுப்­பித்­துக்­கொள்ள எடுக்கும் நட­வ­டிக்­கைகள் வர­வேற்­கப்­ப­டு­வ­தற்­கு­ரி­ய­தாகும் எனத் தெரி­வித்த பெருந்­தோட்­டத்­துறை அபி­வி­ருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, எமது எதிர்­கால பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தா­கு­மென்றும் தெரி­வித்தார். தமிழக அரசாங்கத்துடனும் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்­பாக அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில், அயல் நாடான இந்­தி­யா­வுடன் நெருங்­கிய நட்­பு­றவை பேணு­வது என்­பது எமது வெளி­நாட்டுக் கொள்­கையின் முக்­கி­யத்­து­வ­மா­ன­தாகும்.ஆனால் கடந்த…

Read More

விளையாட்டுத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான உதவித்தொகை அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் வழங்கிவைப்பு

மன்னார் மாவட்டத்தில் விளையாட்டுத் துறைகளில் சிறப்புத் திறமை காட்டும் மாணவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சால் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை இன்று மன்னார் நகர சபையில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த மாணவர்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் வழங்கி வவைக்கப்பட்டது. அமைச்சர் ரிசாத் பதியுதீன் , விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமயிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க குறித்த உதவித் தொகை மன்னார் மவாட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் 170 மாணவர்களுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Read More