Headlines

கூட்டுறவுத்துறையைப் பொறுப்பேற்ற பின்னர் வீண்விரயம் இடம்பெறவில்லை – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம்   – கூட்டுறவுத்துறையை நான் பொறுப்பேற்ற பின்னர் அந்தத் துறை வளர்ச்சிப்  பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஒரு சதமேனும் வீண்விரயமாக செலவழிக்கவுமில்லை. செலவழிப்பதற்கு அனுமதி வழங்கவுமில்லை இவ்வாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, தாமரைத் தடாகக் கலையரங்கில் 94 வது சர்வதேச கூட்டுறவுதின விழா இன்று (02/07/2016) நடைபெற்றபோது, சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அதிதிகளாக பிரதி அமைச்சர் சம்பிக்க…

Read More

பிணை எடுக்க எவருமில்லாத நிலையில் 10 வருடமாக சிறையிலேயே காலங்கழித்த கைதி மரணம்

அப்துல்லாஹ்: சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் பிணை எடுக்க எவரும் முன்வராத நிலையில் 10 வருடமாக சிறையிலேயே காலங்கழித்த கைதியொருவர் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சிறையில் மரணமாகியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியைச் சேர்ந்த 70 வயதுடைய பஷீர் சேகுதாவூத் என்பவரே சிறையிலிருந்தவாறு மரணித்துள்ளார். இந்தக் கைதிக்கு உறவினர்கள் எவரும் இல்லை என்கின்ற நிலையில் இவரை சரீரப் பிணையில் வெளியில் எடுக்க யாரும் முன்வரவில்லை. சுமை தூக்கும் தொழிலாளியான இவரை முதலாளி ஒருவர் கிண்டலடித்தார் என்பதற்காக…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிந்தவூர் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  நிந்தவூர் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (19) இரவு  இடம் பெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்   இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச அபிவிருத்திகள்  குறைபாடுகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் வாரங்களில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களின் வருகை…

Read More

சிசிலியாவை 23ஆம் திகதி ஆஜர்படுத்த உத்தரவு

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலயை எதிர்வரும் 23ஆம் திகதியன்று மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளார். கோல்டன் கீ நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்ட வைப்பீட்டாளர்களின் பணத்தில் 720 கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவத்தின் ஆறாவது சந்தேகநபரான சிசிலியாவுக்கு 91 குற்றச்சாட்டுகளின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யூதரான பொலிஸ் உயர் அதிகாரி இஸ்லாத்தை ஏற்றார்..!

ஒரு சராசரி அமெரிக்கன் எவ்வாறு தனது வாழ்வை நகர்த்துவானோ அது போலவே எனது வாழ்வும் நகர்ந்தது. தொடக்க காலத்திலிருந்தே நேர்மையாக வாழ பழக்கப்பட்டவன். ஒரு முக்கிய காவல் துறை அதிகாரியாக இருந்தாலும் எனது தேவைகளுக்கான பணத்தை கொடுத்து விட்டே எனது பணிகளை முடிப்பேன். நேர்மையாக வாழ்வை நடத்திட முடிந்த வரை முயற்சிப்பேன். எனது நண்பன் நஜீர் மூலமாகத்தான் எனக்கு இஸ்லாம் அறிமுகமானது. 1980 களில் அவனோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவனது நடவடிக்கைகள் அவன் என்னோடு பழகிய…

Read More

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர். பாராளுமன்றத்தில் ரிஷாட் குற்றச்சாட்டு

ஊடகப் பிரிவு பொலிஸாரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொறுப்பதிகாரிகளும் நேர்மையுடனும், பாரபட்சமுமின்றியும் செயற்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்திருந்தால் ஒரு சில மத குருமார்களினதும், திருடர்களினதும் முஸ்லிம்களுக்கெதிரான மோசமான செயற்பாடுகளை நிறுத்தியிருக்க முடியுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொண்டு வந்த இனக்குரோத செயற்பாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, ஏப்ரல் 16 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை முஸ்லிம்களுக்கெதிரான சுமார் 19 –…

Read More

மோடியை சந்திக்க ஒபாமா ஆர்வம்

நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடியை அமெரிக்கா வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். இதை மோடி ஏற்றுக்கொண்டார். வருகிற செப்டம்பர் மாதம் மோடி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் செல்கிறார். ஐ.நா.சபையில் உரையாற்றிய பின்பு வாஷிங்டன் செல்கிறார். அங்கு வெள்ளை மாளிகையில் செப்டம்பர் 30–ந்தேதி அதிபர் ஒபாமாவை மோடி சந்தித்து பேச்சு நடத்துகிறார். மோடி– ஒபாமா சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் தயாராகி வருகிறது….

Read More

“திகாமடுல்ல வாக்காளப் பெருமக்களே..!” – ஹனீபா மதனியின் மடல்!

உங்கள் அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும்..! சமூக சேவைகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்த நான், அரசியலுக்குள் நுழைந்து இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், திகாமடுல்ல மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில், 10 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன். இவ்வேளை, இறைவன் எனக்கு சமூக சேவைகளில் ஏற்படுத்தித் தந்த பொன்னான சில சந்தர்ப்பங்களை நினைவு மீட்டிப் பார்க்கிறேன். விடுதலை புலிகளினால் மூதூர் மக்கள் அகதியாக்கப்பட்ட போது, கிழக்கிலங்கை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவராக…

Read More

வில்பத்து விவகாரத்தைக் கையாள அமைச்சரவை உபகுழு அமைச்சர் றிஷாத் உடபட பலர் நியமனம்!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வில்பத்து விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடபுல முஸ்லிம்களின் எதிர்நோக்கும் இன்றைய மீள்குடியேற்ற பிரச்சினை என்பது தனிநபர் பிரச்சினையல்ல. இந்த விடயத்துக்கு உடனடியாக தீர்வு கண்டு அந்த மக்களுக்கு விமோசனம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தினார். இதனையடுத்தே இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்றினை நியமித்து அதன் ஊடாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது….

Read More

“நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டும்” – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப்!

நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டுமென்றும்  சிறுபான்மை மக்கள் உரிமைகளோடும் நிம்மதியாகவும் வாழ, சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனவும் முன்னாள் திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா, பொது நூலக மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை (14) இடம்பெற்ற, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட்…

Read More

அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கரிப்பு?

அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுவதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி அரசியல் கட்சியின் பிரதான உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடு எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சம்மாந்துறையில் இலவசகுடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு!

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் முயற்சியினால், முதல் கட்டமாக சம்மாந்துறையில் வறிய கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளஷாட், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இஸ்மாயில் எம்.பி இங்கு உரையாற்றும் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் எமது மண்ணுக்கு கிடைத்த பிரதிநிதித்துவத்தை பயன்படுத்தி வீதி,சுகாதார, விளையாட்டு,கல்வி உள்ளிட்ட இன்னும் பல…

Read More