Headlines

என்னிடம் செல்போன் எதுவுமில்லை, உண்மையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்…!

2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ் சத்யார்த்திக்கும், 17 வயது பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கும் கூட்டாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொள்ளும் இன்னொருவரான மலாலா பாகிஸ்தானின் சுவாத் மாவட்டத்தில் உள்ள மின்கோரா நகரில் 1997-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி பிறந்தார். இவருடைய தந்தை ஜியாவுதீன்- தாயார் தோர் பேகை. இவருக்கு 2 தம்பிகளும் உண்டு. தற்போது இங்கிலாந்தின்…

Read More

காதலனை தேடும் சீ.சீ.டி.

புறக்கோட்டை, பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் நிலை­யத்­தி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட யாழ்.வட்­டுக்­கோட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த கார்த்­திகா என்ற 34 வய­து­டைய பெண்ணின் மர்ம மரணம் குறித்து நேற்று வரை எவரும் கைது செய்­யப்­ப­டவில்லை. இந்நிலையில் அப்­பெண்ணின் இர­க­சிய காத­லனை கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் (சீ.சீ.டி) தேடி வரு­கின்­றனர். குறித்த பெண்­ணுடன் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக ஒன்­றாக இருந்­த­தாக கூறப்­படும் யாழ்.பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரையே பொலிஸார் இவ்­வாறு தேடு­வ­தா­கவும், அவர் குறித்த பெண்ணை கொலை செய்­தி­ருப்­ப­தாக நம்­பு­வ­தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ்…

Read More

4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் கொள்ளை

புறக்கோட்டையில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை மிகவும் சூட்சுமமான முறையில் அபகரித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புறக்கோட்டையில் உள்ள தங்க ஆபரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சின் பரிசோதகர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொண்ட நான்கு பேரே இவ்வாறு திருடிச் சென்றுள்ளனர். அங்கு வேலை செய்தவர்களின் கைகளுக்கு போலியான முறையில் கைவிலங்கிட்டு, தங்கத்தை அபகரித்து சென்றுள்ளனர். அவ்வாறு அபகரித்தவர்கள் தொடர்பில் மிகவும் முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதுமட்டுமன்றி…

Read More

தேர்தல் திருத்திற்கு இணங்க முடியாது -கபீர் ஹசீம்

அமைச்சரவையில் இறுதி அனுமதி கிடைக்க பெற்ற 237 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் திருத்திற்கு இணங்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஐ விட அதிகரிக்க கூடாது என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், விகிதாசார முறையில் கீழ் தயாரிக்கப்படும்…

Read More

புனித ஹரமின் சேவகன் என்று அழைப்பதில் மகிழ்ச்சி!

சவுதி அரேபியாவை ஆளும் மன்னர்களை இரு புனித தலங்களின் சேவகர்கள் என்று தான் செய்தி நிறுவனங்கள் அறிமுகபடுத்தும். இது பற்றி மன்னர் சல்மான் குறிப்பிடும் போது, என்னை சவுதி மன்னர் என்று அழைப்பதை விட புனித ஹரமின் சேவகன் என்று அழைக்க படுவதில் நான் மகிழ்ட்சி அடைகிறேன். புனித தலங்களுக்கும் அதை நாடி வருபவர்களுக்கும் சேவை செய்வது எங்களது மிக முக்கிய பணி. அந்த பணியினால் தான் எங்களை இறைவன் சிறப்பான நிலையில வைத்திருக்கிறான். எங்களால் எந்த…

Read More

கடந்த ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு அமெரிக்க பிரஜையிடம் இருந்த போது எவரும் வாய் திறக்கவில்லை.. இப்போது மத்திய வங்கி ஆளுனருக்கு எதிராக குற்றம் சுமத்த வேண்டாம்

நாட்டின் பாதுகாப்பு கடந்த ஆட்சியில் அமெரிக்க பிரஜையான கோத்தாபயவுக்கும், வெளிநாட்டுசேவை அவுஸ்திரேலிய பிரஜை பாலித கொஹணவுக்கும் வழக்கப்பட்டபோது வாய் திறக்காதவர்கள் மத்திய வங்கி ஆளுநராக வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நியமிக்கப்பட்டதாக கேள்வியெழுப்புவதில் எந்தளவு நியாயமானது. வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு மத்திய வழங்கி ஆளுநர் பதவி வழங்க சட்டத்தில் எந்தத் தடையும் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அர்ஜுன மகேந்திரன் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டும் தொகையைவிட 270 மடங்கு அதிக தொகை கடந்த ஆட்சியில் மோசடி…

Read More

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பு

பிரசல்ஸ்ஸில் நேற்று (11) இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, விரைவில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய சந்திப்பு தொடர்பாக கருத்துரைத்த ஹர்ச, இலங்கை தற்போது ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான இறுதி அடியை, அதாவது விண்ணப்பிக்கக்கூடிய நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் செயற்குழு கூட்டம் நேற்று பிரசல்ஸ்ஸில் இடம்பெற்றது, இது விண்ணப்பத்தை…

Read More

உலகநாடுகள் அதிகளவான தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பவேண்டும்!- சந்திரிகா

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று அரசாங்கம் பெரும் வன்முறைகளில் ஈடுபடலாம், எதிரணியினரை அச்சுறுத்தலாம். முன்னர் இடம்பெற்ற தேர்தல்களிலும் இது இடம்பெற்றுள்ளது, அதிகளவான தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பி தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதை மாத்திரமே உலகநாடுகளால் செய்ய முடியும். அரசாங்கத்திற்கு அவர்கள் நீதியான சுதந்திரமான தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தலாம். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள் கையளிப்பு!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் ஆகியோரின் முயற்சியில், கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள் இன்று (14) பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன. மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, இந்த வழிகாட்டி நூல்களை அதிபர்களிடம் வழங்கி வைத்தனர்….

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான விசாரணையினை ஆகஸ்ட் 10 இன் பின்னர் மேற்கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்..!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணையினை பிற்போடுமாறும் அல்லது 10. 08. 2020 இன் பின்னர் மேற்கொள்ளுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இருவரும் இணைந்து, கையொப்பமிட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளனர். இம்மாதம் ஜூலை 15 ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் மீது ஆணைக்குழு எடுத்துள்ள இந்தத் தீர்மானத்தினை…

Read More

சூதாட்ட நிலையம் முற்றுகை; 8 பேர் கைது

கொஸ்­வத்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வீடொன்றில் இயங்கி வந்த சூதாட்ட நிலையம் ஒன்று பொலி­ஸா­ரினால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டுள்­ளது. கொஸ்­வத்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட போத்­த­லே­கம பிர­தேச வீடொன்றில் மிகவும் இர­க­சி­ய­மான முறையில் நடத்திச் செல்­லப்­பட்ட சூதாட்ட நிலை­யமே இவ்­வாறு பொலி­ஸாரின் முற்­று­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­ந­ட­வ­டிக்­கையின் போது அவ்­வீட்டில் சூதாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த எட்டுப் பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இவர்கள் நீண்ட நாட்­க­ளாக இவ்­வாறு இந்த சட்­ட­வி­ரோத செயலில் ஈடு­பட்டு வந்­தி­ருப்­ப­தா­கவும், வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­களும் இங்கு சூதாட்­டத்தில் ஈடு­ப­டு­வ­தா­கவும் அவர்­க­ளிடம் மேற்­கொண்ட…

Read More

தமிழ் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்று கொடுப்பதன் மூலமே மாற்றத்திற்கு அர்த்தம் கிடைக்கும்

சிங்கள பெளத்த உரிமைகளை பாதுகாத்து நாட்டை பாதுகாக்க விரும்பி மாற்றத்தினை மக்கள் ஏற்படுத்தியதைப்போல் தமிழ் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை வென்று கொடுப்பதன் மூலமே தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும் என தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமானது மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். கால மாற்றத்திற்கேற்ப இளைஞர்களின் சக்தியினூடாக ஒரே கூரையின் கீழ் இணைவோம் எனும் தொனிப்பொருளில் நேற்று இளைஞர்…

Read More